பாஜக வற்புறுத்தலால் வருகிறார்.. என்ற கெட்ட பெயரை.. ஒத்தை அறிக்கையில் துடைத்துக் கொண்ட ரஜினி!
சென்னை: பாஜகவின் வற்புறுத்தலால் அரசியலுக்கு வருகிறார் என்ற கெட்ட பெயரையும் அவர் பாஜகவின் முகம் என்ற அவப்பெயரையும் தனது ஒரே அறிக்கையில் தவிடுபொடியாக்கிவிட்டார் ரஜினிகாந்த்.
ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்த 2017-ஆம் ஆண்டு அவர் பாஜகவின் முகம் என பரவலாக பேசப்பட்டார். அதிலும் ஆன்மிக அரசியல் என அவர் சொன்னவுடன் பாஜகவின் பி டீம் என கூறிவந்தார்கள்.
பின்னர் 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறியது, நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை, உள்ளிட்ட திட்டங்களில் ரஜினி எதிர்கருத்து கூறாததால் அவர் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன.

கவலை
இந்த நிலையில் கடந்த நவம்பர் 30-ஆம் தேதி மன்ற நிர்வாகிகளுடனான சந்திப்பின்போது உடல் நிலை குறித்து ரஜினி கவலைப்பட்டுள்ளார். அவரது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை குறித்தும் அவர் பெரிதும் கவலைப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி ரஜினி கட்சி தொடங்குவதாக அறிவித்தார்.

மனம் மாற்றம்
டிசம்பர் 30-ஆம் தேதி உடல் நிலை குறித்து பேசிய ரஜினி 3 நாட்களில் மனமாறியதை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. மேலும் ரஜினி அவராகவே கட்சி தொடங்கவில்லை. யாரோ சிலரின் வற்புறுத்ததால் கட்சி தொடங்குவதாக சிலர் விமர்சித்தனர்.

வலுகட்டாயம்
இன்னும் சிலர் பாஜக கொடுத்த அழுத்தத்தின் காரணமாகவே ரஜினி கட்சி தொடங்குகிறார் என்றும் கட்சி தொடங்கிவிட்டு அவர் அதன் பொறுப்புகளை உடனடியாக பாஜகவிடம் ஒப்படைத்துவிடுவார் என்றும் பேசப்பட்டு வந்தது. என் மீது காவிச் சாயம் பூசாதீர் என ரஜினி பேட்டி அளித்த போதும் அவர் மீது பலர் காவிச் சாயத்தை வலுக்கட்டாயமாக திணித்தனர்.

ரஜினி சொல்லாமல் சொன்னார்
இந்த நிலையில் தனது உடல்நிலையை கருத்தில் கொண்டும் பிறரது நலனை கருத்தில் கொண்டும் நான் அரசியல் கட்சியை தொடங்க போவதில்லை என ரஜினி அறிவித்துள்ளார். இதன் மூலம் ரஜினி தான் யாருடைய வற்புறுத்தலுக்காகவும் கட்சி தொடங்கவில்லை தமிழக மக்களுக்காகவே கட்சி தொடங்கவிருந்தேன் என்பதை தனது ஒத்த அறிக்கையில் ரஜினி சொல்லாமல் சொல்லிவிட்டார்.












Click it and Unblock the Notifications