நைட் ஃபுல்லா தூக்கமில்ல..நான் அப்படி பேசிருக்க கூடாது! ஜெயலலிதாவை எதிர்த்தது ஏன்? மனம் திறந்த ரஜினி!
சென்னை: தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்த் கடந்த காலங்களில் அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதாவை விமர்சித்து பேசியிருக்கிறார். இந்த நிலையில் தான் ஜெயலலிதாவை விமர்சித்து பேசவும் எதிர்க்கவும் காரணம் என்ன? என்பது குறித்து நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு விளக்கம் அளித்து இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்.
தமிழ் திரை உலகில் தற்போது வரை சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் மட்டும் தான். மனதில் பட்டதை பட்டென பேசிவிடும் சுபாவம் கொண்டவர். அப்படித் தான் ஜெயலலிதா குறித்தும் அவர் பேசயிருக்கிறார். ஜெயலலிதா இருந்தவரை நேரடியாகவே அவரை எதிர்த்தவர் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என ரஜினி வாய்ஸ் கொடுக்க அப்போது திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஜெயலலிதாவை தான் எதிர்த்ததற்கும் அவருக்கு எதிராக பேசியதற்குமான காரணத்தை தற்போது தெரிவித்திருக்கிறார் ரஜினிகாந்த்.
தமிழக முன்னாள் அமைச்சரும் தயாரிப்பாளருமான ஆர்.எம்.வீரப்பனின் நினைவுகள் குறித்து ஆர்எம்வி கிங் மேக்கர் தி டாக்குமெண்டரி என ஒரு ஆவணப்படம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதில் ரஜினிகாந்த் பேசியிருக்கிறார். அந்த வீடியோவில் பேசி இருக்கும் அவர், ஆர்எம்வி கிங்மேக்கர் தி டாக்குமெண்டரியில் அவரைப் பற்றி பேசுவது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எனக்கு ரொம்ப நெருக்கமானவங்க, அன்பு காட்டுனவங்கனா நாலஞ்சு பேர் இருக்காங்க. அதுல பாலச்சந்தர் சார், பஞ்சு அருணாச்சலம் சார், ஆர்எம் வீரப்பன் சார் ஆகியோர் தான்..
அவங்க இப்போது இல்லைங்கறதுனால நான் ரொம்ப மிஸ் பண்றேன். 1995 வருஷம் பாட்ஷா படத்தோட நூறாவது நாள் விழா நடைபெற்றது. அதுல தயாரிப்பாளர் வீரப்பன் கலந்து கொண்டிருந்தார். அப்போது மேடையில் அவர் இருக்கும் போது தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி நான் பேசி இருந்தேன். அப்போ ஆர்எம் வீரப்பன் அதிமுக அமைச்சரவையில இடம் பெற்றிருந்தார். அமைச்சரை மேடையில வச்சுக்கிட்டு நான் அப்படி பேசி இருக்க கூடாது. அது எனக்கு அப்போதைக்கு தெளிவும் இல்லை.
அப்போ மேடையில வெடிகுண்டு கலாச்சாரத்தை பத்தி நான் பேசிட்டேன். அதுக்கப்புறம் அமைச்சரவையிலிருந்து ஆர்எம் வீரப்பன ஜெயலலிதா தூக்கிட்டாங்க. நீங்க மேடையில் இருக்கும் போதே ரஜினி எப்படி வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி பேசினார் அப்படின்னு சொல்லிட்டு தூங்கிட்டாங்க. எனக்கு இந்த தகவல் தெரிந்ததும் ஒரு மாதிரி ஆடிப் போயிட்டேன். நைட் ஃபுல்லா தூக்கமே வரல. நைட் ஃபுல்லா போன் பண்ணா யாருமே எடுக்கல. காலையில போன்ல பேசினாரு ஆர்எம் வீரப்பன்.
#Thalaivar video byte for Late RM Verappan ayya . #Baasha producer and Ex minister
— Suresh balaji (@surbalutwt) April 9, 2025
He shares about Baasha 100th day function which #SuperstarRajinikanth spoke against late Jayalalitha which resulted of sacking him from ministry .” #Rajinikanth | #Superstar @rajinikanth |… pic.twitter.com/nWFPgpGPSB
சாருகிட்ட வந்து மன்னிப்பு கேட்டப்போ ஒன்றுமே நடக்காதது மாதிரி பேசினார். நீங்க எல்லாம் எதையுமே மனசுல வச்சுக்காதீங்க.. இன்னைக்கு என்ன ஷூட்டிங்.. சந்தோஷமா இருங்க அப்படின்னு சாதாரண பேசினார். நான் உடனே என்னால தான் உங்களுக்கு இப்படி ஆயிடுச்சு. நான் வேணா ஜெயலலிதா கிட்ட பேசவா அப்படின்னு கேட்டேன். அதற்கு வேணா நீங்க பேசினாலும் அந்த அம்மா ஏத்துக்க மாட்டாங்க..
நீங்களா பேசி உங்க மரியாதையை குறைத்துக் கொள்ள வேண்டாம் அப்படின்னு பேசினார். மேலும் நீங்க பேசி அங்கு நான் போய் சேரணும்னு அவசியம் இல்லை அப்படின்னு சொல்லிட்டார். ஆர்எம் வீரப்பன் எப்பேர்பட்ட மனுஷன். அவர் தான் ரியல் கிங்மேக்கர்" என கூறி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
-
Aadhav Arjuna: ”பிழைக்கவும் ரஜினி, பழிக்கவும் ரஜினி” ஆதவ் அர்ஜுனா பேச்சால் கொந்தளித்த ரஜினி ரசிகர்கள்! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது












Click it and Unblock the Notifications