"அவங்களுக்கு" 28-ஆம் தேதி நைட்டே தெரியும்.. ஆனால் தமிழருவியாருக்கு கடைசி நேரத்தில்தான் தெரியுமாமே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி அரசியலுக்கு வரபோவதில்லை என்ற விஷயம் தமிழருவி மணியனுக்கே கடைசி நேரத்தில்தான் தெரியும் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

ரஜினி அரசியலுக்கு வரும் முடிவில்தான் தீர்க்கமாக இருந்தார். எப்போது என்கிறீர்களா, 28-ஆம் தேதி வரையுமே கூட! மருத்துவர்கள் அறிவுரையை கேட்ட ஐஸ்வர்யா தனது தாய், சகோதரியிடம் தெரிவித்தார்.

அப்போது மூவரும் சேர்ந்து ரஜினியிடம் அரசியல் வேண்டாம் என கூறினார்கள். தமிழக மக்களுக்காக ரஜினி பணிந்து பேசிய போது வேண்டுமானால் வீட்டை விட்டு வெளியே போகாமல் ஏதாவது செய்ய முடியுமான்னு பாருங்கள் என லதாவும் மகள்களும் கூறினார்கள்.

90 நாட்கள்

90 நாட்கள்

ரஜினியும் ஏதோ மகள்கள் சொன்னவுடன் ஓகேனு சொல்லிவிட்டு சும்மா அறிக்கை விடவில்லை. அவர் வேறு ஒரு கட்சிக்கு வியூகம் வகுக்கும் ஒரு நிறுவனத்தை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். 90 நாட்களில் கட்சியைத் தொடங்கி தேர்தலை சந்தித்து வெற்றி பெற ஏதேனும் வழிகள் இருக்கின்றனவா என கேட்டுள்ளார்.

ரஜினி

ரஜினி

மேலும் பிரச்சாரங்களுக்கு வராமல் சமூகவலைதளங்களில் பிரச்சாரம் செய்தால் மக்களுக்கு ரீச்சாகுமா என்றும் கேட்டுள்ளார். ஆனால் அந்த நிறுவனத்தினரோ நிச்சயம் சாத்தியம் இல்லை என்று கூறியுள்ளார்கள். இதனால்தான் வேறு வழியில்லாமல் ரஜினி, தனது அரசியல் முடிவை கைவிட்டுள்ளார்.

ரஜினியின் நட்பு வட்டாரங்கள்

ரஜினியின் நட்பு வட்டாரங்கள்

இந்த முடிவுக்கு ரஜினி 28-ஆம் தேதியே வந்துவிட்டாராம். ரஜினியின் நட்பு வட்டாரங்கள் மூலம் பிரதமர் மோடிக்கும் அமித்ஷாவுக்கும் அன்றே தெரியுமாம். பாஜகவினருக்கு ஆனால் தமிழருவி மணியனுக்கு அறிக்கை வெளியாகும் 2 மணி நேரத்திற்கு முன்புதான் தெரியுமாம்.

அர்ஜுன மூர்த்தி

அர்ஜுன மூர்த்தி

பாஜகவினருடன் தொடர்பிலிருந்தவர் என்பதாலும் அமித்ஷாவுக்கும் நெருக்கமானவர் என்பதாலும் அர்ஜுன மூர்த்திக்கும் 28-ஆம் தேதியே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. என்ன விரக்தியோ தெரியவில்லை, தமிழருவி மணியனும் ரஜினியை போல அரசியலுக்கு முழுக்கு போட்டுவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+