மக்களிடம் எழுச்சியை எதிர்பார்த்து நான் காத்திருக்கிறேன்.. ரஜினிகாந்த்
சென்னை: மக்களின் எழுச்சியை எதிர்பார்த்து நான் காத்திருக்கிறேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வியாழக்கிழமையும் இந்த வாரமும் மாவட்டச் செயலாளர்களை ரஜினிகாந்த் சந்தித்து கட்சி தொடங்குவது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் வியாழக்கிழமை அன்று மாவட்டச் செயலாளர்களை சந்தித்த கையோடு செய்தியாளர்களையும் சந்தித்தார்.

அப்போது அவர் கட்சி குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என கருதப்பட்டது. ஆனால் அவர் ரசிகர்கள் எதிர்பார்த்த முடிவை அறிவிக்கவில்லை. சென்னையில் ஒரு ஹோட்டலில் செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசியல் மாற்றத்திற்கு 3 திட்டங்களை வைத்துள்ளதாக தெரிவித்தார்.
அந்த அரசியல் மாற்றம் குறித்த திட்டத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்குமாறு ஊடகங்களை அவர் கேட்டுக் கொண்டார். அரசியல் மாற்றம் இருந்தால் மட்டும் ஆட்சி மாற்றம் என்றும் அது இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை என ரஜினிகாந்த் கூறியிருந்தார்.
மேலும் மக்களிடம் எழுச்சி ஏற்பட்டால் மட்டுமே அரசியலுக்கு வர முடியும் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இந்த கருத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்த்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
அண்ணாத்த படப்பிடிப்புக்காக வீட்டிலிருந்து புறப்பட்ட ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அவர் கூறுகையில் மக்களிடம் எழுச்சியை எதிர்பார்த்து நான் காத்திருக்கிறேன் என தெரிவித்தார்.
-
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு?












Click it and Unblock the Notifications