Vijay: "SIR"க்கு எதிராக தவெக ஆர்ப்பாட்டத்தில்! விஜய் பங்கேற்காதது ஏன்? ராஜ்மோகன் பதில்
திருச்சி: வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராக தவெகவினர், தமிழகம் முழுவதும் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் ஒரு இடத்தில் கூட விஜய் கலந்து கொள்ளவில்லையே ஏன் என்ற கேள்விக்கு ராஜ்மோகன் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 4 அல்லது 5 மாதங்களே உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) என ஒன்று தமிழகத்தில் நடந்து வருகிறது. இதற்காக பிஎல்ஓ அதிகாரிகள் வீடு வீடாக வந்து விண்ணப்பங்களை வழங்கி வருகிறார்கள்.
அதிலும் இன்னும் ஒரு மாதத்தில் இந்த பணிகளை முடிக்க தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வரும் நிலையில் 6 கோடி வாக்காளர்கள் உள்ள தமிழகத்தில் எப்படி ஒரே மாதத்தில் அனைத்து வாக்காளர்களையும் சரி பார்த்துவிட முடியும் என்பதுதான் திமுக, கூட்டணி கட்சிகள், தவெக உள்ளிட்டவைகளின் கேள்வியாக இருக்கிறது.
எஸ்ஐஆர்
எஸ்ஐஆர் குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துவிட்டது. இந்த "சார்" பணிகளுக்கு ஆரம்பத்தில் இருந்தே தவெக எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
ஆர்ப்பாட்டம்
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேற்று தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த், அருண் ராஜ், ராஜ் மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
விஜய் பங்கேற்கவில்லை
ஆனால் விஜய் எந்த மாவட்ட தலைநகரிலும் நடந்த ஆர்ப்பாட்டத்திலும் கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்திய ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் "எஸ்ஐஆரால் 6 கோடி தமிழக மக்கள் பாதிக்கப்படுவர்" என எச்சரித்த விஜய் ஏன் ஒரு போராட்டத்தில் கூட கலந்து கொள்ளவில்லை என கேள்வி எழுப்பப்பட்டது.
10 நிமிட வீடியோ
அதற்கு ராஜ்மோகன் பதில் அளிக்கையில், "பேராசிரியர் முதல் பாமர மக்களும் புரிந்து கொள்ளும்படி போட்ட 10 நிமிட வீடியோவால்தான் "சர்வர் பிரச்சினை" என தேர்தல் ஆணையமே கூறியிருக்கிறது.
தேர்தல் ஆணையமே சொல்லிடுச்சே
தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, இந்த எஸ்ஐஆர் விஷயத்தில் அரசியல் செய்யாமல் ஆக்கப்பூர்வமான விஷயங்களை செய்வதற்காக முன்னெடுப்புகளை நாம் மேற்கொண்டிருக்கிறோம். விஜய் இந்த விஷயம் குறித்து வீடியோ வெளியிட்ட பிறகுதான் இந்தியா முழுக்க இது பேசும்பொருளானது.
ஜனநாயகம்
இதில் அரசியல் என்பதை தாண்டி, வாக்குரிமை என்பது ஜனநாயகத்தினுடைய ஆணி வேர். அதை பாதுகாப்பதற்காக அவரால் முடிந்த எல்லா விஷயங்களையும் அவரது ஆலோசனையின் பேரில் செய்து வருகிறோம்.
8 கோடி வாக்காளர்கள்
கடந்த ஓராண்டுக்கு முன்பே 8 கோடி பேர் இருக்கும் தமிழகத்தில் 6 கோடி பேர்தான் வாக்களிக்க போகிறார்கள் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்திருந்தார். அவர் சொன்ன தரவுகளை (Data) நாங்கள் ஆராய்ந்த போது 29 வயதுக்குள்பட்ட இளம் வாக்காளர்கள் மட்டுமே கிட்டதட்ட ஒன்றரை கோடி பேர் இருக்கிறார்கள்.
25 ஆண்டுகளில் இல்லாத வேகம் ஏன்
இளைஞர்களின் அன்பை வெல்லக் கூடியவர்கள் புதியதாக அரசியலுக்கு வந்தவர்கள் என்பது அரசியல் அறிந்தவர்கள் சொல்லக் கூடிய ஒரு விஷயம். அப்படி அரசியல் தொடங்கி 25 ஆண்டுகளில் இல்லாத ஒரு வேகத்தில் எஸ்ஐஆரை மத்திய அரசு கொண்டு வந்தது ஏன்? இப்படிப்பட்ட சூழலில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள எஸ்ஐஆருக்கு சட்டசபையில் தீர்மானம் போடாமல் இருக்கிறது தமிழக அரசு. இவ்வாறு ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
வாக்குரிமை
விஜய் தனது வீடியோவில் "ஒரு மனிதன் உயிருடன் இருக்கிறார் என்பதற்கு அடையாளமும் அதுதான். அதனால்தான் வாக்குரிமை என்பது நமது உரிமை மட்டும் அல்ல, வாழ்வும்தான். ஒரு முக்கியமான விஷயத்தை உங்களிடம் நான் சொல்ல போகிறேன்.
நம்புவீங்களா
இந்த நேரத்தில் தமிழகத்தில் இருக்கும் யாருக்கும் வாக்குரிமையே இல்லை என சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? நான், நீங்கள் உள்பட யாருக்குமே ஓட்டு போடும் உரிமை இல்லை. நான் உங்களை பயமுறுத்துவதாக நினைக்காதீர்கள். இதுதான் நிஜமும் கூட! கொஞ்சம் ஏமாந்தால் நம்மை போல் லட்சக்கணக்கான பேருக்கும் இதே நிலைமைதான். ஓட்டு போடும் உரிமை இல்லாத ஒரு நிலை வந்தாலும் வரலாம். இதற்கு முக்கிய காரணம் அந்த எஸ்ஐஆர் (Special Intensive Revision- சிறப்பு தீவிர திருத்தம்).
வாக்கு போடும் உரிமை இல்லை
இந்த எஸ்ஐஆர் நம் தமிழகத்தில் எப்படி செயல்பட போகிறது? கடந்த ஜனவரி மாதம் எடுத்த கணக்கெடுப்பில் 6 கோடியே 36 லட்சம் வாக்காளர்கள் நம் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாருக்கும் ஓட்டு போடும் உரிமை இல்லை என்றும் விஜய் தெரிவித்திருந்தார்.
-
விஜய்யின் பெயரை கூட தவறாக சொன்ன கர்நாடகா அமைச்சர்.. இப்படி செய்வாருனு யாரும் எதிர்பார்க்கலை -
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம் -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம் -
யார் திட்டத்திற்கு யார் ஸ்டிக்கர் ஒட்டறது.. நிதி ஆயோக் கூட்டம்.. விஜய் மீது உதயநிதி விமர்சனம் -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
விஜய் அதிரடி உத்தரவு! டெல்லி பயணம் முடித்த பின்பு முக்கியமான சேஞ்ச்! -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
அமைச்சரவையில் இடம்.. இதனால்தான் விஜய்யை ஆதரித்தோமா? ஐயுஎம்எல் காதர் மொய்தீன் விளக்கம்! -
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
717 டாஸ்மாக் கடைகள் மூடியாச்சா இல்லையா? RTI பதிலால் அதிர்ச்சி.. உடனே பாய்ந்து வந்த பாஜக! -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது












Click it and Unblock the Notifications