Rajya sabha: அன்புமணி வேட்பு மனுவை ஏற்கக்கூடாது என ராமதாஸ் தரப்பு எதிர்ப்பு.. பரிசீலனையின்போது பரபர!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி பதவிகளுக்கு திருச்சி சிவா (திமுக), கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (திமுக), கிறிஸ்டோபர் திலக் (காங்கிரஸ்), எல்.கே.சுதீஷ் (தேமுதிக), தம்பிதுரை (அதிமுக), அன்புமணி (பாமக), ராமதாஸ் உதவியாளர் சுவாமிநாதன் உள்ளிட்டோர் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில், கட்சிகள் சார்பில் 10 எம்.எல்.ஏக்கள் முன்மொழிவோடு வேட்பு மனு தாக்கல் செய்த 6 பேர் போட்டியின்றி தேர்வாவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று வேட்பு மனு பரிசீலனை நடைபெற்று வருகிறது.

தமிழகம் உள்பட நாடு முழுவதும் காலியாக உள்ள 37 மாநிலங்களவை எம்பி பதவிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் தம்பிதுரை (அதிமுக), ஜி.கே.வாசன் (தமாகா) மற்றும் திமுகவை சேர்ந்த என்.ஆர்.இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி.செல்வராஜ் ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

Rajya sabha dmk congress aiadmk

வேட்புமனு தாக்கல் பிப்ரவரி 26 ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 5 ஆம் தேதி (நேற்று) கடைசி நாள். இன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை நடைபெறுகிறது. வேட்பு மனுக்களை திரும்ப பெற மார்ச் 9 ஆம் தேதி கடைசி நாளாகும். மார்ச் 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.

தற்போது தமிழகத்தில் உள்ள எம்எல்ஏக்களின் அடிப்படையில் திமுக 4 எம்.பிக்களையும், அதிமுக 2 எம்.பிக்களையும் தேர்வு செய்ய முடியும். அதன்படி திமுக சார்பில் திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோருக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்தார்.

மீதமுள்ள இரண்டு இடங்களில் எல்.கே.சுதீஷ் (தேமுதிக), காங்கிரஸ் சார்பில் திருச்சியை சேர்ந்த கிறிஸ்டோபர் திலக் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதேபோல அதிமுக கூட்டணியில் தம்பிதுரை மீண்டும் போட்டியிடுவார் என்றும், ஒரு இடம் கூட்டணி கட்சியான பாமகவுக்கு வழங்கப்படும் என்றும், அந்த இடத்தில் பாமக தலைவர் அன்புமணி போட்டியிடுவார் என்றும் அறிவிக்கப்பட்டது.

தமிழகத்தில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட மனு தாக்கல் செய்ய நேற்று (5ம் தேதி) கடைசி நாள் என்பதால், நேற்று காலை 11 மணிக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் தம்பிதுரை சென்னை, தலைமை செயலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியும் சட்டப்பேரவை செயலகத்தின் கூடுதல் செயலாளருமான சாந்தியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

அவரைத் தொடர்ந்து பாமக சார்பில் அன்புமணி வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது கூட்டணி கட்சியான அதிமுக முன்னணி தலைவர்கள் உடனிருந்தனர். இதை தொடர்ந்து நேற்று மதியம் 12.45 மணிக்கு முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திருச்சி சிவா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இவர்களை தொடர்ந்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு அறிவிக்கப்பட்ட ஒரு இடத்தில் கிறிஸ்டோபர் திலக் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார். திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு வழங்கப்பட்ட ஒரு இடத்தில், அக்கட்சியின் பொருளாளர் எல்.கே.சுதீஷ் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் வேட்புமனு தாக்கல் செய்தார்.

சுயேச்சையாக போட்டியிட மனு தாக்கல் செய்திருந்த சேலம் மேட்டூரை சேர்ந்த பத்மராஜன், திருச்சியை சேர்ந்த கே.பி.எம்.ராஜா, சென்னை, அம்பத்தூரை சேர்ந்த டி.கே.மேஷாக் கிருபாகரன், அக்னீஸ்வரன், கந்தசாமி ஆகிய 5 பேருக்கு எம்எல்ஏக்கள் யாரும் முன்மொழியவில்லை. அதனால் அவர்களது மனுக்கள் தள்ளுபடியாகி விடும். நேற்று வேட்பு மனு தாக்கல் முடிவடைய, ஒரு நிமிடத்திற்கு முன்னதாக பாமக ராமதாஸ் அணி சார்பில், ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

இன்று (6 ஆம் தேதி) வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. மாநிலங்களவை எம்பி பதவிக்கு போட்டியிட 10 எம்எல்ஏக்கள் முன்மொழிய வேண்டும். அதனால் அரசியல் கட்சிகள் சார்பில் போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த 6 பேரின் மனுக்கள் இன்று பரிசீலனையின்போது ஏற்றுக்கொள்ளப்படும். அவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார்கள்.

இன்று வேட்பு மனு பரிசீலனையின்போது மாநிலங்களவைத் தேர்தலில் அன்புமணியின் வேட்புமனுவை ஏற்றுக் கொள்ள கூடாது என ராமதாஸ் தரப்பு வேட்பாளர் சுவாமிநாதன் மற்றும் அவரது வழக்கறிஞர் தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது, இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+