தேசிய நினைவு சின்னமாக ராமர் பாலம் அறிவிக்கப்பட வேண்டும்.. மத்திய அமைச்சர் பிரகலாத் பட்டேல் கருத்து!
சென்னை: ராமர் பாலம் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட வேண்டும் , உலக பாரம்பரிய சின்னம் என்ற பட்டியலில் ராமர் பாலம் இடம் பெற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று மத்திய கலாச்சார மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகலாத் பட்டேல் தெரிவித்துள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் இந்த தகவலை தெரிவித்துள்ளார் .
ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. தனிப்பட்ட முறையில் எனக்கும் அதில் விருப்பம் இருக்கிறது. அது மட்டும் கிடையாது உலக பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பட்டியலில் ராமர் பாலம் சேர்க்கப்பட வேண்டும்.

ஏற்கனவே ராமர் பாலம் தொடர்பாக ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. அது தொடர்பாக விரிவான ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். இவ்வாறு மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ராமர் பாலம் என்பது தமிழகத்தின் ராமேஸ்வரம் மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளுக்கு இடையே கடல் பகுதிக்குள் இருக்கக்கூடிய ஒரு திட்டு போன்ற பகுதியாகும். ராமாயணத்தில் ராமர் வானரப் படைகளின் உதவியோடு இலங்கை சென்றதாக தகவல் இடம் பெற்றுள்ளது. அப்போது ராமருக்கு வானரங்கள் கல் எடுத்து கொடுத்து உதவி செய்து கடலுக்குள் பாலம் அமைக்கப்பட்டதாக ராமாயணம் தெரிவிக்கிறது.
இந்த நிலையில்தான் தற்போதைய செயற்கைக்கோள் ஆய்வு முடிவுகளும் அந்த பகுதியில் திட்டு போன்ற அமைப்பு இருப்பதாக தெரிவித்துள்ளன. ஆனால் சேது சமுத்திர திட்டத்தை செயல்படுத்தி அந்த வழியாக கப்பல் போக்குவரத்து துவங்க வேண்டும் என்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் முயற்சிகள் செய்யப்பட்டன.
அப்படி செய்தால் ராமர் பாலம் சேதம் அடைந்து விடும் என்று கூறி பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன . இந்த நிலையில்தான் மத்திய அமைச்சர் பிரகலாத், ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அப்படி அறிவிக்கும் பட்சத்தில், ராமர் பாலத்திற்கு சட்டப்படியான பாதுகாப்பு கிடைக்கும். இதனால், சேது சமுத்திரத் திட்டம் செயல்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications