இபிஎஸ்சுக்கு செக்..அதிமுக பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது.. தேர்தல் ஆணையத்தில் ராமச்சந்திரன் மனு
சென்னை: மழை விட்டும் தூறல் விடாத குறையாக அதிமுக பொதுச்செயலாளராக தேர்வான பின்னரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு சிக்கல் நீடிக்கிறது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்கக் கூடாது என ராமச்சந்திரன் ஆதித்தன் என்பவர் தேர்தல் ஆணையத்தில் நேரில் மனு அளித்துள்ளார். நிலுவையில் உள்ள வழக்குகள் முடிந்து தீர்ப்பு வரும் வரை பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்கக் கூடாது என ராமச்சந்திர ஆதித்தன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி பொதுக்குழு நடந்தது. இந்த பொதுக்குழு தீர்மானங்களுக்கு தீர்மானங்களுக்கு எதிராக ஓ பன்னீர் செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது நிலுவையில் இருக்கும் நிலையில் பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து பொதுக்குழு தீர்மானத்தை எதிர்க்கும் வழக்கு அவசரமாக கடந்த 22ம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் அவசர வழக்காக விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கை நீதிபதி குமரேஷ் பாபு விசாரித்தார். இரு தரப்பு வாதங்களைக் கேட்ட சென்னை உயர்நீதிமன்றம் பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தி கொள்ளலாம். ஆனால் முடிவுகளை வெளியிடக்கூடாது என உத்தரவிட்டது. இந்த உத்தரவை தொடர்ந்து அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடந்து முடிந்தது. எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் தான் கடந்த செவ்வாய்க்கிழமை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அப்போது ஓ பன்னீர் செல்வம் தரப்பில் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்த நீதிமன்றம், ஜூலை 11 பொதுக்குழு தீர்மானம் செல்லும், பொதுச்செயலாளர் தேர்தல் முடிவை அறிவிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியது.

இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்று கொண்டு அடுத்தடுத்து அறிவிப்புகளையும் வெளியிட்டார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டது பற்றிய விபரங்கள் இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இமெயில் மற்றும் தபால் மூலம் ஆவணங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் கட்சியின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என்பதை இந்திய தேர்தல் ஆணையத்துக்கு அதிமுக தெரிவித்துள்ளது.
இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றத்தில் தனிநீதிபதி தள்ளுபடி செய்த மனுவை எதிர்த்து இருவர் அமர்வில் ஓ பன்னீர் செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது. இதன் மீது தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்வு தொடர்பான விஷயங்களை ஏற்க கூடாது என ராமச்சந்திர ஆதித்தன் என்பவர் நேரில் மனு அளித்துள்ளார். அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் என்று குறிப்பிட்டுள்ள ராமச்சந்திர ஆதித்தன், நிலுவையில் உள்ள வழக்குகளில் இறுதி தீர்ப்பு வரும் வரை அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை அங்கீகரிக்கக் கூடாது என தெரிவித்துள்ளார்.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications