பிறை தெரிந்தது.. ரமலான் தொடங்கியது.. இன்று முதல் தமிழ்நாட்டில் ஆரம்பமாகிறது நோன்பு.. பிரதமர் வாழ்த்து
சென்னை: பிறை பார்க்கப்பட்டு ரமலான் மாதம் தொடங்கிவிட்டதாக தமிழ்நாடு அரசு தலைமை காஜி அறிவித்திருக்கும் நிலையில், இன்று முதல் ரமலான் நோன்பு தொடங்கப்பட்டுள்ளது.
ரமலான் பண்டிகைக்கு முன்பாக இஸ்லாமியர்கள், ஒரு மாத காலத்துக்கு நோன்பு இருப்பது மரபாகும்.. நோன்பு காலத்தில் இஸ்லாமியர்கள், சஹர் எனப்படும் விடியலுக்கு முன்பாக உணவு சாப்பிட்டு விட்டு, மாலை சூரியன் மறையும் வரை உணவு உண்ணாமல் நோன்பினை கடைப்பிடிப்பார்கள்.

ஒவ்வொரு பகுதியிலும், பிறை தெரிவதற்கு ஏற்பவே ரமலான் மாதம் தொடங்குவதாக அறிவிக்கப்படும். அந்தவகையில், சவூதி அரேபியாவில் நேற்றுமுன்தினம் ரமலான் பிறை தென்பட்டது..
ரமலான் நோன்பு: இதன்காரணமாக, நேற்றைய தினம் சவுதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் ரமலான் மாதம் நோன்பு ஆரம்பமாகிவிட்டது.. அதுபோலவே, தமிழ்நாட்டிலும் பிறை பார்க்கப்பட்டு ரமலான் மாதம் தொடங்கிவிட்டதாக, தமிழக அரசு தலைமை ஹாஜி நேற்று மாலை அறிவித்துள்ளார். இதனால், நோன்பு நோற்பது, தொழுகை உள்ளிட்டவைகளை இஸ்லாமியர்கள் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பதுடன், தராவீஹ் தொழுகை உள்ளிட்ட அனைத்து அமல்களையும் சிறப்பாக நிறைவேற்றி கொள்ளுமாறு இஸ்லாமிய அமைப்புகள் கேட்டுக்கொண்டுள்ளன.
வாழ்த்துக்கள்: இந்நிலையில், புனித ரமலான் மாதம் தொடங்கியதையடுத்து இஸ்லாமியர்களுக்கு பிரதமர் மோடி ரமலான் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: "அனைவருக்கும் ஆசிர்வதிக்கப்பட்ட ரம்ஜான் வாழ்த்துக்கள். இந்த புனித மாதம் அனைவரின் வாழ்விலும் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செழிப்பை கொண்டு வரட்டும் என பதிவிட்டிருக்கிறார்.
-
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications