ராஜ்யசபா வேட்பு மனு தாக்கல் செய்த ராமதாஸ் உதவியாளர் மீது தாக்குதல்.. அன்புமணி மீது DGPயிடம் புகார்!
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்த பாமக நிறுவனர் ராமதாஸின் உதவியாளர் சுவாமிநாதன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அன்புமணி தரப்பினர் தன்னைத் தாக்கியதாக டிஜிபி அலுவலகத்தில் சுவாமிநாதன் புகார் அளித்துள்ளார்.
ராஜ்யசபா தேர்தலில் ஒரு சீட்டை பாமகவுக்கு அதிமுக ஒதுக்கியுள்ளது. நேற்றைய தினம் அதிமுக ஆதரவுடன் அன்புமணி சென்னை தலைமைச் செயலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தார். பாமக நிறுவனர் ராமாதாஸின் உதவியாளர் சுவாமிநாதன் ஆதரவு எம்எல்ஏக்கள் அருள், ஜி.கே.மணியுடன் நேற்று கடைசி நிமிடத்தில் ராஜ்யசபா தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்து இருந்தார்.

இன்றைய தினம் ராஜ்யசபா வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில் அன்புமணியின் வேட்புமனுவுக்கு ராமதாஸ் தரப்பு கடும் ஆட்சேபனம் தெரிவித்தது. மேலும் அன்புமணியின் வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தியது. ஆனால் அன்புமணி மனுவை ஏற்றுகொண்டு, சுவாமிநாதன் முறையாக வேட்புனு தாக்கல் செய்யவில்லை என தள்ளுபடி செய்யப்பட்டது. அதாது, 10 எம்.எல்.ஏக்களின் முன்மொழிவுக் கையொப்பம் இல்லை என்பதால் சுவாமிநாதனின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இன்று வேட்பு மனு பரிசீலனை முடிந்து தலைமை செயலகத்தில் இருந்து வெளியே வந்த சுவாமிநாதனை மர்ம நபர்கள் இரண்டு பேர் தாக்கியுள்ளனர். அன்புமணி தூண்டுதலின் பேரில் தன்னைத் தாக்கியதாக சுவாமிநாதன் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து சுவாமிநாதன் வெளியிட்டுள்ள வீடியோவில், வேட்பு மனு பரிசீலனை முடிந்து வெளியே வந்த போது 2 பேர் எங்களை பின்தொடர்ந்தனர். பின்னர் என்னை கடுமையாக தாக்கியதில் என் முகத்தில் காயங்கள் ஏற்பட்டது.
அன்புமணி, சவுமியா தூண்டுதலில் 2 பேர் எங்களை பின் தொடர்ந்து கடுமையாக தாக்கினர் எனக் குற்றம்சாட்டி உள்ளார்.
ராஜ்யசபா தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த ராமதாஸ் உதவியாளர் சுவாமிநாதனை அன்புமணி தரப்பு நபர்கள் தாக்கிவிட்டதாக டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பாமக வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications