Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

லாஸ்ட்டில் ராமதாஸ் "இவருடன்" கூட்டணியா? வடக்கையும் தெற்கையும் அதிரவைக்கும் அரசியல்வாதி யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது. பெரும்பாலான கட்சிகள், தங்களது கூட்டணி முடிவுகளின் இறுதிகட்டத்தில் உள்ளன.. ஆனால், வடமாவட்டங்களின் தவிர்க்க முடியாத சக்தியாகக் கருதப்படும் பாமக மட்டும் இப்போது ஒரு இக்கட்டான சூழலில் சிக்கியுள்ளது. குறிப்பாக, அக்கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவு மற்றும் பிரதான திராவிடக் கட்சிகளுடனான கூட்டணி குறித்த இழுபறி போன்றவை நிறுவனர் ராமதாஸை கடும் அரசியல் நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளன...!!!

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் நேற்றைய தினம் தன்னுடைய கட்சியின் உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்தை கூட்டியிருந்தார். சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட இந்த ஆலோசனைக் கூட்டத்தில், கட்சியின் எதிர்கால நகர்வுகள் குறித்தும், கூட்டணி வியூகங்கள் குறித்தும் தீவிரமாக விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.

Ramadoss PMK Sasikala Thailapuram 7 hours Secret Meeting Tamil Nadu Election 2026 Coalitions TN Election Special

பாமக தைலாபுரம் கூட்டம்

கூட்டத்தின் பாதியிலேயே வெளியேறிய சேலம் மேற்கு எம்எல்ஏ அருள், நம்பிக்கையான வார்த்தைகளையே சொல்லி உள்ளார்.. ஆனாலும் கூட்ட முடிவில் செய்தியாளர்களை சந்தித்த கௌரவத் தலைவர் ஜிகே மணியின் பேச்சில் ஒருவித தயக்கமும் நெருக்கடியும் வெளிப்படையாக தெரிந்ததை காண முடிந்தது..

"எதிர்பார்த்த கூட்டணி அமையவில்லை என்று சொல்ல முடியாது" எனக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசியல் சூழல் கட்சிக்கு சாதகமாக இல்லை என்பதையும் மறைமுகமாக ஒப்புக்கொண்டார்.

இப்படிப்பட்ட சூழலில்தான், அரசியலில் தனித்துவிடப்பட்ட நிலையில் இருக்கும் சசிகலாவுடனான கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகள் முக்கியத்துவம் பெறுகின்றன.


சசிகலா கூட்டணி?

தொடக்கத்தில் சசிகலா கூட்டணியை டாக்டர் ராமதாஸ் தவிர்த்ததாக செய்திகள் கசிந்தன.. அதாவது வடமாவட்டத்தில் சசிகலாவுக்கு செல்வாக்கு இல்லை, தென்மாவட்டத்தில் பாமகவுக்கு செல்வாக்கு இல்லை, பிறகு எதற்காக இந்த கூட்டணி? என்று பாமக நிறுவனர் தவிர்த்ததாக கூறப்பட்டன.

ஆனால், இப்போது நிலவும் அரசியல் யதார்த்தத்தை கருத்தில் கொண்டு தனது முடிவை டாக்டர் ராமதாஸ் மறுபரிசீலனை செய்து வருவதாக தெரிகிறது.. அந்தவகையில், சசிகலா புதிதாகத் தொடங்கியுள்ள அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் கடசியுடன் கைகோர்ப்பது குறித்து ரகசியப் பேச்சுவார்த்தைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளதாம்.

வட, தென் மாவட்டங்கள்

தென் மாவட்டங்களில் சசிகலாவுக்கு இருக்கும் செல்வாக்கையும், வட மாவட்டங்களில் பாமகவுக்கு இருக்கும் வாக்கு வங்கியையும் ஒன்றிணைத்தால், அது ஒரு பலமான அரசியல் மாற்றீட்டை உருவாக்கும் என்பது இரு தரப்பின் கணக்காக மாறியிருக்கிறது.

ஏற்கனவே திமுக, அதிமுக மற்றும் தவெக போன்ற கட்சிகள் பாமகவை அணுகாத நிலையில், தனது இருப்பை தக்கவைத்துக் கொள்ள ராமதாஸுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பாக இது பார்க்கப்படுகிறது. தைலாபுரத்தில் நடந்த சந்திப்பின் பின்னணியில், தொகுதிகள் பங்கீடு குறித்தும், தென் மற்றும் வட தமிழகத்தை இணைக்கும் ஒரு புதிய அரசியல் சமன்பாடு குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் கசிகின்றன.

பாமகவினர் அப்செட்?

இருந்தாலும் நேற்று 7 மணி நேரக் கூட்டத்திற்குப் பிறகும் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியாகாதது, விருப்ப மனு அளித்திருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களிடையே ஒருவித சோர்வையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளதாம்.

ஒருபுறம் சசிகலாவின் அரசியல் நுழைவு, மறுபுறம் ராமதாஸின் தயக்கம் எனப் பல முனைகளில் ஊசலாடிக்கொண்டிருக்கும் இந்த கூட்டணி விவகாரம், வரும் நாட்களில் எத்தகைய திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதுதான் தற்போதைய மில்லியன் டாலர் கேள்வி... பொறுத்திருந்து பார்ப்போம்..!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+