எல்லாம் 7+1 செய்த மாயம்.. ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க பாமக ஆதரிக்கும்.. பாமக விளக்கம்
Recommended Video

சென்னை: ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா வழங்க பாமக ஆதரவு தெரிவிக்கும் என பாமக நிறுவனர் ராமதாஸும், இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸும் தெரிவித்துள்ளனர்.
அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிடும் பாமக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதன் பின்னர் இருவரும் கூட்டாக நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர்கள் கூறுகையில் மாநிலங்களின் உரிமைகளே மத்திய அரசின் பெருமைகளாகும். இதை அடிப்படையாக கொண்டே நன்கு ஆராய்ந்து தேர்தல் அறிக்கையை வடிவமைத்துள்ளோம்.

40-க்கு 40
இது சம்பிரதாயத்துக்காக வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கை அல்ல. தமிழக மக்களின் தன்னாட்சி உரிமைக்குரல். தமிழக மக்களின் நலன்களை பாதுகாக்கும் குரலாகவும் எதிரொலிக்கும். நாங்கள் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

தொகுதி பங்கீடு
தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளவற்றை நிறைவேற்ற நாங்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். புதிய இந்தியா, புதிய தமிழகத்தை படைப்போம். தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்து உடல்நலம் குறித்து மட்டுமே விசாரித்தோம். தேர்தலை பற்றியோ அரசியல் பற்றியோ பேசவில்லை. தொகுதி பங்கீடு எல்லாம் முடிந்துவிட்டது.

நிச்சயம்
எனவே தொகுதி பங்கீட்டில் இழுபறிக்காக நாங்கள் விஜயகாந்தை சந்தித்தோம் என கூறுவது தவறாகும். பொள்ளாச்சி பாலியல் வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். அந்த வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டிக்கப்பட வேம்டும்.

பழைய விஷயங்கள்
ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்குவதற்கான கோரிக்கையை பாமக நிச்சயமாக ஆதரிக்கும். பழைய விஷயங்களை பேசினால் யாரும் எந்த கூட்டணியிலும் இடம் பெற முடியாது. எங்கள் தேர்தல் அறிக்கையை திமுக காப்பியடிக்கக் கூடாது என்று தெரிவித்தனர்.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications