ரேஷன் கடையில் பாமாயில் வாங்குவீங்களா? அதற்கு பதில் தேங்காய் எண்ணெய் ஓகேவா - ராமதாஸ் கொடுக்கும் ஐடியா
சென்னை: நியாய விலைக் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் விடுத்து உள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் தேங்காய்க்கு போதிய விலை கிடைப்பதில்லை என்பதால் தென்னை விவசாயிகளின் நலன்களை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று கோரி விடுதலை நாளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களின் போது நூற்றுக்கணக்கான இடங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

தென்னை விவசாயிகளின் இந்தக் கோரிக்கை மிகவும் நியாயமானது. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே தேங்காய்க்கு போதிய விலை கிடைப்பதில்லை. அதனால், தென்னை விவசாயம் நாளுக்கு நாள் நலிவடைந்து வருகிறது. இந்த நிலையை மாற்றவும், தேங்காய்க்கு நியாயமான விலை கிடைக்கவும் நியாயவிலைக்கடைகளில் தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று தென்னை விவசாயிகள் நீண்டகாலமாகவே வலியுறுத்தி வருகின்றனர்.
அந்தக் குரல் தான் இப்போது கிராமசபை தீர்மானமாக எதிரொலித்திருக்கிறது. தமிழ்நாட்டில் மொத்தம் 10.98 லட்சம் ஏக்கரில் தென்னை சாகுபடி செய்யப்படுகிறது. ஆண்டுக்கு 500 கோடிக்கும் கூடுதலான தேங்காய்கள் விளைகின்றன. கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் தமிழ்நாட்டிற்கு தேங்காய்கள் வருவதால், அதற்கு போதிய விலை கிடைப்பதில்லை.
இந்த சிக்கலுக்கு ஒரே தீர்வு நியாய விலைக்கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்குவது தான். அதன் மூலம் தேங்காய்க்கான தேவை அதிகரித்து விலையும் உயரும். நியாயவிலைக்கடைகளில் மலிவு விலையில் தேங்காய் எண்ணெய் வழங்கப்பட்டால் பொதுமக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
தமிழ்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாவட்டங்களில் சோதனை அடிப்படையில் நியாயவிலைக் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. 6 மாவட்டங்களில் மட்டும் இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதால் எதிர்பார்த்த பயன் கிடைக்காது.
ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் உள்ள 2 கோடிக்கும் கூடுதலான குடும்பங்களுக்கும் மாதத்திற்கு குறைந்தது ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்கப்பட்டால் தான் தென்னை விவசாயிகளுக்கு ஓரளவாவது பயன் கிடைக்கும். எனவே, மத்திய அரசுடன் தமிழக அரசும் இணைந்து, தமிழகத்திலுள்ள அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் மாதம் ஒரு லிட்டர் தேங்காய் எண்ணெய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்." என்று குறிப்பிட்டு உள்ளார்.
-
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி












Click it and Unblock the Notifications