தமிழ் மாதம் இல்லை.. அரசின் இலச்சினையும் இல்லை.. இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை- ராமதாஸ்
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் மாளிகை வெளியிட்ட பொங்கல் விழா அழைப்பிதழில் தமிழ்நாடும், தமிழ்நாட்டு அரசின் இலச்சினையும் இல்லாத ஒரு அழைப்பிதழை இதுவரை இந்த தமிழ்நாடு கண்டதில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருவது அனைவரும் அறிந்ததே. நீட் தேர்வு விலக்கு மசோதாவில் தொடங்கி எழுவர் விடுதலை, ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா என மோதல் போக்கு நீண்டு கொண்டே போகிறது.
ஆளுநரை விமர்சித்து முரசொலியில் அதிகளவில் தலையங்கமும் எழுதப்பட்டது. இந்த நிலையில் 2023 ஆம் ஆண்டு ஆண்டின் முதல், தமிழ்நாடு சட்டசபை கூட்டத் தொடர் கடந்த 9ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆளுநர் மாளிகை
இதனிடையே ஆளுநர் மாளிகையில் நடந்த காசி தமிழ் சங்கமம் விழா ஒருங்கிணைப்பாளர்களுக்கான பாராட்டு விழாவில் தமிழ்நாட்டை தமிழகம் என அழைப்பதே சரி என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்தார். இதற்கு திமுக கூட்டணி கட்சிகள் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில் ஆளுநர் உரையை புறக்கணிக்கக் கூடும் என எதிர்பார்த்தது.

திமுக கூட்டணி கட்சி
இந்த நிலையில் ஆளுநர் உரை கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. அப்போது திமுக கூட்டணி கட்சியினர் "தமிழகம்" என்ற விவகாரத்தை கையில் எடுத்தனர். எங்கள் நாடு தமிழ்நாடு என முழங்கினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து கூட்டணி கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

ஆளுநர் உரை
இந்த நிலையில் தமிழக அரசு தயாரித்து ஆளுநர் ஒப்புதல் அளித்ததாக கூறப்படும் உரையை படித்ததில் அவர் தமிழ்நாடு, அமைதிப்பூங்கா, பெண்ணுரிமை, சமத்துவம், சமூகநீதி உள்ளிட்ட வார்த்தைகளை தவிர்த்துள்ளார். அது போல் அதே உரையல் 65 ஆவது பத்தியில் இருந்த அம்பேத்கர், பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர் ஆகியோரின் பெயர்களையும் ஆளுநர் ரவி படிக்காமல் தவிர்த்து விட்டார்.

ஆளுநர் உரை
இதற்கு கண்டனம் தெரிவித்து ஆளுநர் உரைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் கூறும் போது ஆளுநர் அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்கவில்லை. எனவே அந்த உரை அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டு அதற்கு பதிலாக அரசு தயாரித்த உரையே அவைக் குறிப்பில் குறிப்பிடப்படும் என தெரிவித்தார். முதல்வர் பேசிக் கொண்டிருந்த போதே ஆளுநர் ஆர்.என்.ரவி பாதியிலேயே வெளியேறினார்.

பொங்கல் விழா அழைப்பிதழ்
இதையடுத்து ஆளுநர் மாளிகை சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் பொங்கல் விழாவுக்கான அழைப்பிதழ் வெளியானது. அதில் மத்திய அரசின் இலச்சினை இடம் பெற்றிருந்தது. தமிழ்நாடு என்ற பெயரும், தமிழ் மாதமும் திருவள்ளுவர் மாதமும் தவிர்க்கப்பட்டிருந்தது. மேலும் தமிழ்நாட்டு அரசின் இலச்சினையும் தவிர்க்கப்பட்டிருந்தது. இது பலரது கண்டனத்துக்குள்ளானது. ஆளுநரின் இந்த பொங்கல் விழா நேற்று ஆளுநர் மாளிகையில் நடந்தது. இதில் கலந்து கொள்ள முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் இதில் முதல்வர், அமைச்சர்கள், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் புறக்கணித்தனர்.

பாமக ராமதாஸ் வேதனை
இதுகுறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை... ஆளுனர் மாளிகை பொங்கல் விழா அழைப்பிதழில் திருவள்ளுவர் ஆண்டு இல்லை... தமிழ் மாதம் இல்லை... தமிழ்நாடு இல்லை.. தமிழ்நாட்டரசின் இலச்சினை இல்லை. இப்படி ஓர் அழைப்பிதழை தமிழ்நாடு கண்டதில்லை! என தெரிவித்துள்ளார்.
-
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
ஏற்கனவே கொதிக்குது.. ஆத்திரத்தில் திமுக! தூபம் போட்ட துரை! பனையூருக்கு பறக்கும் எழும்பூர் எக்ஸ்ப்ரஸ் -
அரபு நாடுகள் மாதிரி..பாலியல் குற்றவாளிகளுக்கு என்கவுண்டர் தான் தீர்வு! வெடித்துக் கிளம்பிய பிரேமலதா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு!












Click it and Unblock the Notifications