இன்று பிறை தெரியவில்லை.. தமிழகத்தில் ஏப்ரல் 11 ஆம் தேதி ரம்ஜான்.. அரசு தலைமை காஜி அறிவிப்பு
சென்னை: தமிழகம், புதுவையில் ஏப்ரல் 11 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
இன்று பிறை தெரியாததால் தமிழகம், புதுவையில் நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 11 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமியர்களின் புனித மாதம் ரமலான் மாதம். இஸ்லாமியர்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக நோன்பு இருத்தல் கருதப்படுகிறது. இந்த ரமலான் மாதம் பசி, உணவு உள்ளிட்டவற்றை மறந்துவிட்டு தொழுகை, ஒழுக்கத்தை கடைப்பிடிப்பதாக உள்ளது.
பகலில் உணவு, தண்ணீர் ஏதும் இன்றி மாலையில் இப்தார் உணவுடன் நோன்பை துறப்பது வழக்கம். சூரியன் மறையும் வரை இவர்கள் நோன்பை கடைப்பிடிப்பார்கள். நோன்புக்கு முன்பு சஹர் என்ற உணவும், நோன்பிற்கு பிறகு அதாவது முடிக்கும் நேரத்தில் இப்தார் என்றும் அந்த உணவு அழைக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு மார்ச் 11 ஆம் தேதி ரமலான் நோன்பு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்தியாவில் மார்ச் 12 ஆம் தேதிதான் பிறை தெரிந்தது. இதனால்தான் ரமலான் மாதம் அன்று தொடங்கப்பட்டது.
சுமார் 30 நாட்கள் விரதமிருந்த நிலையில் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். அந்த வகையில் இன்று பிறை தெரிந்தால் நாளை ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தமிழகம், புதுவையில் இன்று பிறை தெரியாததால் நாளை மறுநாள் அதாவது ஏப்ரல் 11 ஆம் தேதி ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் என அரசு தலைமை காஜி அறிவித்துள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications