ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமார் இடமாற்றம்- புதிய எஸ்பியாக கார்த்திக் நியமனம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் ராமநாதபுரம் எஸ்.பி. வருண்குமார் உள்ளிட்ட 4 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஐ.பி.எஸ். அதிகாரிகள் சிலரை இடம் மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் துணை கமிஷனர் செல்வகுமார், வேலூர் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வேலூர் எஸ்.பி.யாக இருந்த பிரவேஷ் குமார், சென்னை ரயில்வே எஸ்.பியாகவும், சென்னை ரயில்வே எஸ்பியாக இருந்த மகேஸ்வரன் சென்னை பூக்கடை துணை கமிஷனராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை பூக்கடை துணை கமிஷனராக இருந்த கார்த்திக், ராமநாதபுரம் எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டிருக்கிறார். ராமநாதபுரம் எஸ்.பி.யாக ஆர்.வி. வருண்குமார் பணிபுரிந்து வந்தார்.












Click it and Unblock the Notifications