முதல்வர் முன்னிலையில் மூலிகை பெட்ரோல் செய்து காட்ட ரெடி.. ஒரு சான்ஸ் கொடுங்க.. ராமர் பிள்ளை பேட்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மூலிகை பெட்ரோலுக்கான செய்முறை விளக்கத்தை மீண்டும் பொதுவெளியில் செய்து காட்டத் தயார், முதல்வர் முன்னிலையில் நிரூபிக்கத் தயார், தவறினால் என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள் என ராமர் பிள்ளை கூறியுள்ளார்.

மூலிகை பெட்ரோல் தயாரித்துள்ளதாக கூறி பரபரப்பைக் கிளப்பி பிரபலமான ராமர் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், இனிவரும் காலங்களில் மூலிகை பெட்ரோல் கண்டுபிடிப்புகளை அரசு ஊக்குவிக்க வேண்டும் சுதந்திரமான கண்டுபிடிப்புகளை வழிநடத்த வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்

Ramar pillai says he is ready to explain the process of mooligai petrol in public

ராமர் பிள்ளை கடந்த 2000ஆம் ஆண்டு மூலிகை பெட்ரோல் தயாரிப்பில் ஈடுபட்டார். அதனை அப்போது சென்னை ஐஐடியில் பல விஞ்ஞானிகள் முன்னிலையில் சோதனை முயற்சி செய்து காட்டியுள்ளார். இந்த முயற்சி தோல்வி என ஐஐடி விஞ்ஞானிகள் அறிக்கை கொடுத்தது. அதையடுத்து தவறான வழிமுறைகளை பயன்படுத்தி மூலிகை பெட்ரோல் தயாரிப்பில் ஈடுபட்டு வந்ததாக ராமர் பிள்ளை மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து அவரது நிறுவனத்திற்கும் சீல் வைக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் ராமர் மீது சிபிஐ சாட்டியுள்ள குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை எனவும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட உபகரணங்கள் மற்றும் பணத்திற்கு 23 ஆண்டுகாலம் வட்டியுடன் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. ஆனால் ஆறு மாதங்கள் ஆகியும் இன்று வரை தன்னிடமிருந்து கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் உபகரணங்கள் எதையும் சிபிஐ திருப்பித்தரவில்லை என ராமர் பிள்ளை குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் இது தொடர்பாக பல்வேறு அதிகாரிகளை சந்தித்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குறிப்பாக மூலிகை பெட்ரோல் தயாரிப்பு வழிமுறைகளைக் கேட்டு பல்வேறு தரப்பிலிருந்து தனது உயிருக்கு அச்சுறுத்தல் வருவதாகவும், மத்திய மாநில அரசுகள் உடனடியாக தலையிட்டு இதில் தீர்வு காண வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக முதல்வர் மற்றும் பிரதமர் மோடி இந்த தீர்ப்பு விவரத்தைப் பார்க்க வேண்டும். இல்லை என்றால் நான் வெளியே சொன்னால் இந்தியாவின் மானம் போய் விடும். உலக நாடுகளில் 36 ரூபாய்க்கு தான் பெட்ரோல் விற்பனை நடைபெற்று வருகிறது. ஆனால் இந்தியாவில்தான் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தற்போது நீதிமன்றம் அவர் பொருளை அவரிடம் கொடுத்து விட வேண்டும் என்று சொல்லிவிட்டது. உண்மையை உண்மை என்று சொல்ல 23 வருடங்கள் நான் போராடி உள்ளேன். பல வழக்குகளை சந்தித்து நான் நிரபராதி என்று தீர்ப்பு வந்துவிட்டது.

நான் இருகரம் கூப்பி உங்களை மன்றாடி கேட்கிறேன். எனக்கு எந்த நேரத்திலும் ஆபத்து உள்ளது. மூலிகை பெட்ரோலுக்கான செய்முறை விளக்கத்தை மீண்டும் பொதுவெளியில் செய்து காட்டத் தயார், முதல்வர் முன்னிலையில் நிரூபிக்கத் தயார், நான் நிரூபிக்க தவறிவிட்டால் நீங்கள் என்னை என்ன வேண்டுமென்றாலும் செய்யுங்கள்.

என்னிடம் கைப்பற்றப்பட்ட பொருட்கள் மீண்டும் ஒப்படைக்கப்படும் பட்சத்தில் மூலிகை பெட்ரோல் தயாரித்து குறைந்த விலைக்கு வழங்கப்படும். இனிவரும் காலங்களில் மூலிகை பெட்ரோல் கண்டுபிடிப்புகளை அரசு ஊக்குவிக்க வேண்டும் சுதந்திரமான கண்டுபிடிப்புகளை வழிநடத்த வேண்டும் என்று ராமர் பிள்ளை வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+