ரம்யாவின் பெரிய மனசு.. அந்த மஞ்சள் கலர் டிரஸ்ஸும், பக்குவமும்.. அது வேற லெவல்.. உருகும் ரசிகர்கள்

ரம்யா பாண்டியனை கொண்டாடி வரும் ரசிகர்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "ரம்யாவோட பெரிய மனசு யாருக்கு வரும்? இன்னும் பார்த்துக்கிட்டே இருங்க, எங்க தலைவியை வேற லெவலில் பார்க்கத்தான் போறீங்க" என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள் ரம்யா பாண்டியனின் தீவிர ரசிகர்கள்.

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் எவிக்‌ஷன் ஃப்ரீ பாஸுக்கான டாஸ்க் நடந்தது.. அதில், சனம் ஷெட்டி, ஷிவானி, ரேகா, கேப்ரில்லா என ஒவ்வொருவராக வெளியேற, சுரேஷின் டிரிக் ஆட்டத்தை கண்டுபிடித்து விட்டார் ரம்யா பாண்டியன்.. அதனால், சுரேஷை கையும் களவுமாக மடக்கி பிடித்து, ஆஜித் துணையுடன் விளையாடி சுரேஷை கச்சிதமாக வெளியேற்றினார்.

Ramya pandians Big boss Eviction Free pass task

இது மற்ற போட்டியாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.. ரம்யாவை உச்சி முகர்ந்து பாராட்டினர்.. ஏற்கனவே வீட்டின் தலைவராக நேரடியாக தேர்வு செய்யப்பட்டு மொத்த அப்ளாஸையும் அள்ளிய ரம்யாவுக்கு இது அடுத்தக்கட்ட வெற்றியாக வந்து சேர்ந்துள்ளது.

நேற்று நடந்த விளையாட்டில் மிக முக்கியமான விஷயம், விட்டுத்தருவதுதான்.. ஆஜித்துக்காக தன்னுடைய வாய்ப்பை விட்டு தந்த ரம்யாவின் பரந்த மனசு யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ரம்யா நினைத்திருந்தால் ஆஜித்தை சமாதானப்படுத்தி, தன் வெற்றியை நிரூபித்திருக்க முடியும்.

ஆனால், அதை செய்யவில்லை.. ஒருவேளை சுரேஷ், ரேகா போன்றோருக்கு இதே வாய்ப்பு கிடைத்திருந்தால், ரம்யாவை போல இளகிய மனத்துடனும், முதிர்ச்சியுடனும் இந்த விளையாட்டை அணுகியிருப்பார்களா என்று தெரியாது.

காரணம், வயதுக்கும், செயலுக்கும் கொஞ்சமும் பொருத்தமில்லாமல் அவர்கள் வீட்டிற்குள் நடந்து கொள்வதுதான். அந்த வகையில் ரம்யாவை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.. நேற்றில் இருந்து சோஷியல் மீடியா முழுவதும் ரம்யா புகழ்தான்.

இப்படியே போனால் ரம்யா டைட்டில் வாங்கினாலும் வாங்கிவிடுவார் என்கிறார்கள் அவரது ரசிகர்கள். "அந்த மஞ்சள் கலர் டிரஸ்ஸில் அவங்க எவ்ளோ அழகா இருந்தாங்க தெரியுமா.. ரம்யாவுக்கு எப்பவுமே இளகிய மனசுதான்.. அது குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலேயே எங்களுக்கு தெரியும்.. இங்க இருக்கிறவங்களிலேயே ரம்யா மனசு தனி.. அதுக்காக இன்னொருத்தங்களுக்கு இதே மாதிரி வாய்ப்பை விட்டுத் தந்துட மாட்டாங்க.. நின்னு ஜெயிச்சிட்டுதான் வருவாங்க" என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+