தமிழகத்தில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்.. மருத்துவமனையில் குவியும் நோயாளிகள்
தமிழகத்தில் வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதீத காய்ச்சல், உடல் சோர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: தமிழகத்தில் வேகமாக வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. அதீத காய்ச்சல், உடல் சோர்வால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேநேரம் காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான இடங்களில் மக்களுக்கு தொண்டை வலி , உடற்சோர்ர்வுடன் கூடிய வைரஸ் காய்ச்சல், வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் பனிக்காலத்தில் இது போன்ற வைரஸ் காயச்சல்கள் பரவுவது இயல்பான ஒன்று. ஆனால் நடப்பாண்டு பார்த்தோம் என்றால் கோடைக்காலம் என்பது துவங்கிவிட்டது. ஆனால் இந்த வைரஸ் காய்ச்சல் பரவுவதை பார்க்க முடிகிறது.
குறிப்பாக கடந்த சில வாரங்களாகவே மாறுபட்ட சீதோஷண நிலையின் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் காய்ச்சல் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவனைக்கு சிகிச்சைக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த காய்ச்சல் அதீத காய்ச்சல் ஆகவும் பல்வேறு உடல் சார்ந்த பாதிப்புகளையும் கொண்டிருக்கிறது.

சுவாச பாதை பாதிப்பு
இன்புளுயன்ஸா எனப்படும் ப்ளு காய்ச்சல் வேகமாக பரவுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆர் எஸ்வி எனப்படும் சுவாச பாதையை தாக்கும் வைரஸ் பரவுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கோடைக்காலங்களில் குறையத் தொடங்கும் இது போன்ற காய்ச்சல் பாதிப்புகள், மார்ச் மாதம் பிறந்தும் தொடர்கிறது. புற நோயகளிகள் சிகிச்சை பிரிவிற்கு வருவர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மாறுப்பட்ட சிதோஷண நிலை, கொசுக்குழுக்களுடைய வாழ்நாள் அதிகரிப்பு காரணமாக இந்த பாதிப்பு அதிகரித்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

சுகாதாரத்துறை
இதனிடையே கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் அரசு சார்பாக தீவிரமாக செயல்படுத்தப்படுகிறது. காய்ச்சல் பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகள் கண்டறியப்பட்டு போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. காய்ச்சல் தொண்டை வலி அதிகரிக்க வழக்கமான வைரஸ் பாதிப்புகளில் ஏதேனும் உருமாற்றம் ஏற்பட்டிருக்க வாய்ப்புகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அதேநேரம் நடப்பாண்டில் டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல் பாதிப்புகள் மிக குறைவாக காணப்படுகிறது என்று மருத்துவர்கள் கூறினர். பொதுமக்கள் இந்த வைரஸ் பாதிப்பு குறித்து பீதி அடைய வேண்டாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

ராஜீவ் காந்தி மருத்துவனை
இந்த காய்ச்சல் பாதிப்பு குறித்து ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் தேரணி ராஜன் கூறுகையில், பீதிய அடையும் வகையில் பாதிப்பு இல்லை. மிகக்குறைவான அளவே காய்ச்சல் பாதிப்புடன் வருகிறார்கள். இங்கு வரும் 15 ஆயிரம் நோயாளிகளுக்கு பல பிரச்சனைகள் உள்ளன. 42 துறைகள் உள்ளன. அங்கு சிகிச்சை பெறவும் வருகிறார்கள் என்றார். இதனிடையே அதே சமயம் சாதாரண காய்ச்சல் தானே என்று பாரசிட்டமல் மாத்திரைகளை அதிகமாக கொடுத்தால் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் குறிப்பாக குழந்தைகளுக்கு என்றால் ஈரலை பாதிக்கும் என சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனை டீன் தேரணிராஜன் எச்சரித்தார்.

என்ன செய்ய வேண்டும்
கடந்த சில வாரம் முனபு மருத்துவர் தேரணி ராஜன் கூறுகையில், குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் அவர்களை உடனடியாக பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்த வேண்டும். அப்போது தான் ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் பரவுவதை தடுத்து நிறுத்த முடியும். அடுத்து வந்து குழந்தைக்கு அதிக காய்ச்சல் இருக்கும் போது, அந்த குழந்தை வீட்டில் இருக்கும் போது, தேவையான நீர் ஆகாரங்கள், அதற்கு தேவையான மருந்துகள், குறிப்பாக அந்த குழந்தைககு ஆபத்து இல்லாத கட்டத்தில் வந்து வீட்டில் வைத்து பார்த்துக் கொள்ளலாம். ஆனால் எப்போதாவது மூச்சுவிட சிரமமாக இருக்கிறது. இருமல் அதிகமாக இருக்கிறது என்றால் மருத்துவரை சந்திப்பது தான் சிறந்த அணுகுமுறை" என்றார்.












Click it and Unblock the Notifications