Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

21 கிமீக்கு 1,000 ரூபாய்? பைக் டாக்ஸியால் மீண்டும் சலசலப்பு.. சென்னையில் ரேபிடோ டிரைவரால் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பைக் டாக்ஸிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஆட்டோ ஓட்டுநர்கள் தொடர்ந்து புகார்களை தந்து வரும்நிலையில், மீண்டும் ஒரு பரபரப்பு சம்பவம் சென்னையில் நடந்துள்ளது.. இது தொடர்பாக தரப்பட்ட புகார், இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கிறது.

ஒருவர் மட்டுமே பயணிக்க வசதியாக பைக் டாக்சிகள் பல்வேறு நகரங்களில் இயங்கி வருகின்றன.. இதனால், எளிதாகவும், விரைவாகவும், பயணிக்க முடிகிறது. நினைத்த நேரத்தில், நினைத்த இடத்துக்கு பயணிகளால் பைக் டாக்ஸி மூலம் செல்ல முடிகிறது.

rapido bike taxi rapido driver

ஆட்டோக்களைவிட இதில் குறைவான கட்டணம் என்பதுடன், இதற்கு நேரம் காலம் எதுவும் வரையறை இல்லை.. பைக் டாக்ஸிக்கு இந்தியாவில் முறையான அனுமதி இல்லை என்றாலும், பொதுமக்கள் பைக் டாக்ஸிக்கு வரவேற்பு தெரிவித்து வருகிறார்கள். ஆனால், இந்த பைக் டாக்ஸி சேவைக்கு ஆட்டோ ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்..

ஆட்டோ டிரைவர்கள்: சென்னையை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள், காவல் ஆணையர் அலுவலகத்தில் ஏற்கனவே புகார் அளித்தபோது, "பைக் டாக்ஸிக்கு இந்தியா முழுவதும் எங்குமே அனுமதி இல்லை.. இந்த பைக் டாக்ஸியால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த பைக் டாக்ஸியால் நிறைய மரணங்கள் ஏற்பட்டுள்ளன.. பாலியல் தொல்லைகளும் நடந்துள்ளன.

முறையான அனுமதியின்றி பைக் டாக்ஸி ஓட்டு எங்களை நசுக்கின்றனர். பைக் டாக்ஸிக்கு அனுமதியே இல்லாத நிலையில் அதில் 2 பேரை ஏற்றிச்செல்கிறார்கள்.. பெர்மிட்டே இல்லாமல் இந்த வேலையை செய்கிறார்கள். எங்கள் வாழ்வாதாரம் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றும் அந்த புகார் மனுவில் கேட்டுக் கொண்டிருந்தனர்.

rapido bike taxi rapido driver

புகார்கள்: இந்நிலையில், மீண்டும் ஒரு ரேபிடோ டிரைவர் மீது, பொதுவெளியிலேயே புகார் கிளம்பியிருக்கிறது. சென்னையில் ஒரு நிறுவனத்தின் சிஇஓவாக இருப்பவர் அசோக் ராஜேந்திரன்... இவர், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து துரைப்பாக்கம் செல்வதற்காக, ரேபிடோவில் கார் புக் செய்துள்ளார்.

21 கிமீ தொலைவுக்கு செல்ல ரூ.1,000 கேட்டு, ரேபிடோ டிரைவர் அசோக் ராஜேந்திரனிடம் தகராறு செய்துள்ளார்.. எனவே, அசோக் ராஜேந்திரன் இது தொடர்பாக புகார் அளித்துள்ளார்.. இது தொடர்பாக ரேபிடோ உதவி மையத்தை தொடர்பு கொண்டும், எந்த பதிலும் கிடைக்கவில்லையாம்.. எனவே, தன்னுடைய தனது லிங்க்டுஇன் பக்கத்தில், இதுகுறித்து அசோக் ராஜேந்திரன் பதிவிட்டுள்ளார்.

சம்மதம்: அதில், "ஆன்லைன் ஆப்பில் ரூ.350 கட்டணமாக காண்பித்த நிலையில், ரூ.50 உயர்த்தி ரூ.400 தருவதாக சொன்னதால், டிரைவரும் சம்மதித்து எங்களை பிக்அப் செய்து கொண்டார். ஆனால், அதன்பிறகு சென்னையில் தண்ணீர் அதிகம் தேங்கியிருக்கும் என்பதால், ரூ.1,000 தருமாறு டிரைவர் கேட்டு என்னிடம் வாக்குவாதம் செய்தார். பிறகு ரூ.800 தருவதாக ஒப்புக் கொண்டோம்.

ஆனால், நாங்கள் சென்ற வழியில் தண்ணீர் எங்குமே தேங்கி நிற்கவில்லை. இது தொடர்பாக புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை. ஓட்டுநர்கள் கூடுதல் தொகை கேட்கின்றாரா? என்று ஆப்பில் புகார் அளிக்கும் வசதி இருந்தும், அதனை பயன்படுத்தி, புகார் அளித்தாலும் எந்த பதிலும் இல்லை. பிறகு எதற்காக அந்த செயலிகளை எல்லாம் வைத்திருக்கிறீர்கள்? கூடுதல் தொகை வாங்கும் டிரைவர்களுக்கு ரேபிடோ நிறுவனமே உடந்தையாக இருக்கிறது" என்று குற்றஞ்சாட்டியிருக்கிறார்

உடனே பதில்: இந்த புகார் இணையத்தில் வைரலானதையடுத்து, இதற்கு ரேபிடோ நிறுவனம் பதிலளித்துள்ளது. "உங்கள் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.. இதுபோன்று மீண்டும் நிகழாத வண்ணம் பார்த்துக்கொள்கிறோம்" என்று தெரிவித்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+