சென்னை கிரிக்கெட் கிளப்பில் தென்பட்ட.. அரிய வகை உடும்பு! வனத்துறை தீவிர விசாரணை
சென்னை: நகரங்களில் காணப்படாத அரிய வகை உடும்பு ஒன்று, சென்னை கிரிக்கெட் கிளப்பில் தென்பட்டிருக்கிறது. ஊழியர்கள் இதனை அடித்து கொன்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையில் காடுகள் கிடையாது. ஆனால் அடர்ந்த மரங்கள் சில இடங்களில் இருக்கின்றன. குறிப்பாக சென்னை கிண்டி ஆளுநர் மாளிகை பகுதியில் அடர்ந்த மரங்கள் இருப்பதால் சில அரிய வகை பறவைகள் இருக்கின்றன. அதேபோல மான்களும் இருக்கின்றன. அவ்வப்போது பாம்புகள் சிலவும் தென்படுகின்றன. பாம்புகள் பத்திரமாக மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் விடப்படுகின்றன.

ஆனால் சென்னையில் உடும்பு தென்பட்டதாக யாரும் தெரிவித்ததில்லை. மாறாக மலேசியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து அரிய வகை உடும்புகள் விமானம் மூலம் சென்னைக்கு கடத்தி வரப்பட்டிருக்கின்றன. இவை அப்படியே விமான நிலையத்தில் வைத்து, வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி சென்னையில் உடும்பை யாரும் பார்த்தது கிடையாது. இப்படி இருக்கையில்தான் சென்னை கிரிக்கெட் கிளப்பில் உடும்பு ஒன்று அடித்து கொல்லப்பட்டிருக்கிறது.
இது குறித்து கிளப் நிர்வாகம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறது. தகவலின் பேரில் கிண்டி வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்திருக்கின்றனர். அங்குதான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. ஏனெனில் இவர்கள் அடித்து கொன்றது அரிய வகை உடும்பு. சென்னையில் உடும்பு கிடையவே கிடையாது. அப்படி இருக்கும்போது அரிய வகை உடும்பு எங்கிருந்து வந்திருக்கும்? உடும்புக்கான வாழ்விடம் வேறு வகையானது.
உடும்புகளின் வாழிடம் மிகப்பெரியது. சமயத்தில் 1 லட்சம் சதுரடி தொடங்கி பல லட்சம் சதுரடி வரை தனது வாழிடமாக உடும்புகள் வைத்திருக்கும். கூண்டுக்குள் அடைத்ததை போல இது வாழ விரும்பாது. வேட்டையாடுவதற்கு, தங்குவதற்கு, இணை சேர்வதற்கு என பல கி.மீ வரை பயணிக்கும். இவற்றின் உணவு சங்கிலி மிகப்பெரியது. மீன்கள், நண்டுகள் தொடங்கி பாம்புகள், முதலை முட்டைகள் வரை இவை உணவாக எடுத்துக்கொள்கின்றன. எனவே உடும்பு சென்னையில் இருப்பதற்கும், வாழ்வதற்கும் வாய்ப்புகள் குறைவு.
அப்படி இருக்கும்போது இந்த உடும்பு எப்படி கிரிக்கெட் கிளப்புக்குள் நுழைந்தது? உணவுக்காக வேட்டையாடப்பட்டு வேறு யாராவது இங்கு கொண்டு வந்திருக்கலாம். அது தப்பித்து கிரிக்கெட் கிளப்பில் தஞ்சடைந்திருக்கலாம் என்றும், இதை உணவக்காக கொண்டு வந்தவர்கள் யார்? என்கிற கோணத்தில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications