கருணாநிதி நினைவிடத்தில அஞ்சலி செலுத்த வந்த கனிமொழி. சமாதியை பார்த்து கண்ணீர் சிந்திய ராசாத்தியம்மாள்
Recommended Video
சென்னை: கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக கனிமொழியுடன் வந்த ராசாத்தியம்மாள் கண்ணீர் விட்டு அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கருணாநிதி சில ஆண்டுகளாக உடல் நல பாதிப்பு காரணமாக அரசியல் விவகாரங்களில் நேரடியாக தலையிடாமலும் எந்த விழாக்களுக்கும் செல்லாமலும் இருந்தார். இந்த நிலையில் அவருக்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
இது அவரது குடும்பத்தினர் மட்டுமல்லாது தொண்டர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் அனுபவம் வாய்ந்த நல்லதொரு தலைவரை இழந்துவிட்டோம் என பொதுமக்களும் துவண்டுவிட்டார்கள்.

37 தொகுதிகள்
இந்த நிலையில் திமுக தலைவராக ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து நடைபெற்ற தேர்தலில் திமுக தமிழகத்தில் 37 நாடாளுமன்றத் தொகுதிகளில் வெற்றி பெற்றது. அது போல் சட்டசபை இடைத்தேர்தலிலும் 13 தொகுதிகளை வென்றது.

தாய் ராசாத்தியம்மாள்
இதைத் தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கனிமொழியும் முதல் முறையாக வெற்றி பெற்று லோக்சபா எம்பியாகியுள்ளார். இதையடுத்து தனது தந்தை கருணாநிதியிடம் ஆசி வாங்குவதற்காக மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்துக்கு தாய் ராசாத்தியம்மாள், கணவர் அரவிந்த் ஆகியோருடன் கனிமொழி சென்றார்.

துக்கம்
அப்போது ஓயாமல் உழைத்துவிட்டு உறங்கி கொண்டிருக்கும் கருணாநிதியை பார்த்தவுடன் ராசாத்தியம்மாளுக்கு நெஞ்சடைத்தது. துக்கத்தை அடக்க முடியாமல் அழத் தொடங்கினார்.

தேற்றிய கனிமொழி
பின்னர் சமாதியை சுற்றி வரும் போது சமாதிக்கு பின்னால் அழுதார். அவரை கனிமொழி தேற்றி அழைத்து சென்றார். பின்னர் கனிமொழி வெற்றி பெற்ற சான்றிதழை வைத்து கருணாநிதியிடம் ஆசி பெற்றார். கனிமொழிக்கு ராசாத்தியம்மாள் முத்தமிட்டார்.
-
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications