ரூல்ஸே மாறுது.. மகளிர் உரிமைத்தொகை குறித்து மாவட்ட கலெக்டர்களுக்கு பறந்த உத்தரவு..தமிழக அரசு அதிரடி
சென்னை: 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் பணிகள் சூடுபிடித்துள்ளது.. அந்த வகையில், முக்கிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட தலைவர்களுக்கும் அறிவுறுத்தல் பறந்துள்ளது.
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் வருகிற, செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 20ம் தேதி முதல் வழங்கப்பட உள்ளன.
உரிமைத்தொகை: இந்த தொகையை பெறுவதற்கு சில வழிகாட்டு விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் உள்ள 21 வயது நிரம்பிய பெண் விண்ணப்பிக்கலாம்.

முதியோர் ஓய்வூதியம், விதவை ஓய்வூதியம், அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரிய ஓய்வூதியம் போன்ற சமூக பாதுகாப்பு திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடம் இருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் இந்த திட்டத்தில் பணம் பெற தகுதி கிடையாது. அதையும் மீறி விண்ணப்பம் செய்தால், அந்த மனு நிராகரிக்கப்பட்டுவிடும்.
வருடத்துக்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டுக்கு அதிகமாக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கும் ரூ.1000 பணம் கிடைக்காது... இந்த நிபந்தனை மட்டுமல்ல அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள், தொழில் வரி செலுத்துபவர்கள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் பல பேர் இந்த திட்டத்தில் பணம் பெற முடியாது.. இப்படி 8 வகையான கண்டிஷன்கள் விதிக்கப்பட்டுள்ளன.
அந்தவகையில், நடுத்தர ஏழை, எளியவர்கள், சாமானிய மக்களுக்குதான் இந்த 1000 ரூபாய் உதவித்தொகை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இதற்காக வீடு வீடாக விண்ணப்பம் வினியோகிக்கப்பட உள்ளன. ஆங்காங்கே உள்ள தன்னார்வலர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இதற்காக மொத்தம் 20 ஆயிரம் தன்னார்வலர்களை தேர்வு செய்ய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. மாவட்ட வாரியாக இதற்கான ஏற்பாடுகளும் துரிதமாக நடந்து வருகிறது.
பள்ளி ஆசிரியர்கள்: குறிப்பாக, இல்லம் தேடி கல்வி பணியில் ஈடுபட்டு வரும் தன்னார்வலர்களை இந்த பணியில் முழுமையாக ஈடுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. மற்றொருபுறம் ஆசிரியர்களையும் இதில் ஈடுபடுத்த முனைப்பு காட்டி வருகிறது. இது தவிர தாமாக முன்வந்து பணியாற்றும் நபர்களையும், நலச்சங்க நிர்வாகிகளையும் இதில் ஈடுபடுத்த முன்னுரிமை வழங்கப்படும் என்றும் தெரிகிறது.
ஆனால், ஆசிரியர்களை, இந்த பணியில் ஈடுபடுத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது.. ஆசிரியர் தகுதி தேர்வு முடித்து, பிஎட் படித்த தங்களை, கற்பித்தல் பணிகளில் மட்டுமே ஈடுபடுத்த வேண்டும் என்றும், வேறு திட்டங்களுக்கு மாற்றுவதால், தாங்கள் படித்த பட்டப்படிப்புக்கான அனுபவம் கிடைக்காமல், எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் அதிருப்திகள் வெடித்துள்ளது. இந்த பணி மாற்றத்தால், மாணவர்களுக்கான கற்றல் ஆர்வமும் பாதிக்கப்படும் அபாயம் எழுந்துள்ளதாகவும் சொல்கிறார்கள்.
இதுஒருபுறமிருக்க, 500 கார்டுக்கு ஒருவர் வீதம் 20 ஆயிரம் பேரை இந்த பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சொல்கிறார்கள்.. மேலும், எந்தெந்த பகுதியில் சிறப்பு முகாம்கள் நடத்துவது, எந்தெந்த மண்டபங்கள், சமுதாய நலக்கூடங்களில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பெறுவது என்பது பற்றிய அறிவிப்பும் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட போவதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
புதிய ரேஷன் அட்டைகள்: இந்த நிலையில் தமிழக அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதன்படி, குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்கி புதிய அட்டையை பெறுவதற்கு அனுமதிக்க வேண்டாம் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது..
காரணம், குடும்ப அட்டையில் உள்ள தகவலை வைத்து குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு மட்டுமே இந்த தொகை வழங்கப்படும். அதனால், பலர் குடும்ப அட்டையில் இருந்து பெயரை நீக்கி, புதிய குடும்ப அட்டை பெற விண்ணப்பித்து வருகிறார்களாம்.. அதனால், புதிய குடும்ப அட்டை பெறுவதற்கு தமிழ்நாடு அரசு இந்த திடீர் கட்டுப்பாட்டினை விதித்துள்ளது.
பெயர் நீக்கம்: அதன்படி உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை முழுமையாக பெறும் வரை, குடும்ப அட்டையில் இருந்து பெயர் நீக்கத்திற்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று ஆட்சியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பெயரை நீக்குவதற்கான காரணம் ஏற்றுக் கொள்ளும்படி இருந்தால் அதனை பரிசீலித்து முடிவு எடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உரிமைத்தொகை: இதனிடையே, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பெறப்படும் விண்ணப்பத்தை, ஆன்லைனில் பதிவு செய்வதற்கான மொபைல் போன் ஆப் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாம்.. தமிழ்நாடு மின்னாளுமை முகமை இயக்ககம் இந்த செயலியை உருவாக்கி உள்ளது.
இதுகுறித்து, தமிழக மின்னாளுமை இயக்கக அதிகாரிகள் சொல்லும்போது, விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்காக, தமிழக மின்னாளுமை முகமை இயக்ககம், "கலைஞர் மகளிர் உரிமை ஸ்கீம்" என்ற பெயரில், மொபைல் போன் செயலியை உருவாக்கி உள்ளது. இதில், தன்னார்வலர்கள் தங்களது மொபைல் போன் எண் மற்றும் பாஸ்வேர்ட் நம்பரை பதிவிட்டு உள்ளே நுழைய வேண்டும். அதற்கு பிறகு, புதிய படிவம் மற்றும் சமர்ப்பிக்கப்பட்ட படிவம் என்று 2 வகையான பிரிவுகள் ஸ்கிரீனில் தோன்றும்..
டிரெயினிங்: அதில், புதிய படிவத்தை தேர்வு செய்து, அதில் விண்ணப்பதாரரின், பெயர், முகவரி, ஆதார் உள்ளிட்ட விபரங்களை உள்ளீடு செய்து சமர்ப்பிக்க வேண்டும். இந்த மொபைல் போன் செயலி, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கிடையாது.. ஆனால், சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்ப நிலை குறித்தும் அதில் அறிந்து கொள்ள முடியும். தன்னார்வலர்களுக்கு செயலியை பயன்படுத்துவது குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது" என்கிறார்கள்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
தேமுதிகவிற்கு 10 தொகுதிகள் ஏன்? பின்னணியில் 2 ஜாதிகளின் ஓட்டுகளுக்கு குறி.. ஸ்டாலின் போடும் கணக்கு -
ஆக்டிவ் மோடில் ஸ்டாலின்.. கையில் எடுத்த பிரச்சார ஆயுதம்.. 2021 தேர்தலில் திமுக போட்ட பக்கா ஸ்கெட்ச் -
கலைஞரின் மகள் கனிமொழி நெல்லையில் போட்டியா? அடம் பிடிக்கும் ஆதரவாளர்கள்! தலைமை போடும் வேறு கணக்கு! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
எல்லா சின்னமும் நம்ம சின்னம் தான்.. தவிடுபொடியான சதிகாரர்களின் எண்ணங்கள்! ஸ்டாலின் போட்ட ஆர்டர்! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்! -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? தனியரசு விலக முடிவு.. அதிருப்தியின் பின்னணி












Click it and Unblock the Notifications