Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தொல்லை முடிந்தது.. ரேஷனில் பொருள் வாங்க போறீங்களா? மீண்டும் திரும்பிய முக்கிய வசதி.. இதை படிங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கடைகளுக்கு மீண்டும் பயோமெட்ரிக் சாதனங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதால் மக்கள் எந்த ரேஷன் கடையிலும் பொருள் வாங்க முடியும் என்ற சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் கலைஞர் உரிமை தொகை ரூ. 1000 வழங்கும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சாதாரணமாக எல்லோருக்கும் வழங்கிடாமல் முறையாக பயனாளிகளை கண்டுபிடித்து தேவையான நபர்களுக்கு மட்டும் நிதியை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக கடந்த 6 மாதங்களாக பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டன.

Ration card: Bio metrics came back to the shops that went for the Kalaingar 1000 RS Housewives Schems

அதன் முடிவில் யாருக்கெல்லாம் இந்த திட்டம் பொருந்தும் என்ற லிஸ்ட் வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த இரண்டு வாரம் முன்பு இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் தரப்பட்டன. இந்த விண்ணப்பங்களுடன் சேர்த்து கூடுதலாக டோக்கன் ஒன்றும் வழங்கப்பட்டது.

இந்த விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும். அதன்பின் டோக்கனில் உள்ள தேதியில், முகாம் எங்கே உள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருக்கும் இடத்தில் சென்று டோக்கனை காட்டி பின்னர் விண்ணப்பத்தை கொடுக்க வேண்டும். இதற்காக ஆதார் கார்ட், ஆதார் கார்ட் இணைக்கப்பட்ட போன் எடுத்து செல்லப்பட வேண்டும்.

முதல் கட்டமாக வழங்கப்பட்ட டோக்கன் மற்றும் விண்ணப்பத்தில் சிலருக்கு விண்ணப்பங்கள் கொடுக்கப்படாமல் விடுபட்டுள்ளது. இதையடுத்து முதல் கட்டமாக வீடு வீடாக சென்று விண்ணப்பம் வழங்கப்பட்ட போது விடுபட்டவர்களுக்கு இரண்டாம் கட்டமாக மீண்டும் விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, கடந்த 1-4ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு உள்ளது.

1000 ரூபாய் உரிமை தொகை திட்டத்தின் முதல் கட்ட முகாம்கள் 4ம் தேதியோடு முடிந்த நிலையில் இரண்டாம் கட்ட முகாம்கள் நேற்று தொடங்கின. மீதம் உள்ள 14,825 நியாய விலைக்கடைகளில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு இரண்டாம் கட்ட முகாம்கள் 05.08.2023 முதல் 16.08.2023 வரை நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் மற்றும் டோக்கன் விநியோகம் இன்னொரு பக்கம் நடைபெற்று வருகிறது.

பயோமெட்ரிக்: இந்த முகாம்களில் பயோமெட்ரிக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ரேஷன் கடைகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பயோமெட்ரிக் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கைரேகை எடுக்கப்பட்டு அதன் மூலம் ஆதார் வெரிஃபிகேஷன் செய்யப்பட்டு வருகிறது. எல்லா மாவட்டங்களும் கிட்டத்தட்ட 500 முகாம்களை கொண்டு இருக்கின்றன. பெரும்பாலும் முகாம்கள் பள்ளிகளில் உள்ள மைதானங்களில் வைக்கப்பட்டு உள்ளன. இதனால் கூட்டங்களை சமாளிக்க முடிகிறது.

Ration card: Bio metrics came back to the shops that went for the Kalaingar 1000 RS Housewives Schems

முகாம்களில் கழிப்பறை, குடிநீர் வசதி உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதற்காகவே கல்லூரி, பள்ளி வளாகங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளன இந்த முகாம்களை தமிழ்நாடு முழுக்க மாவட்ட ஆட்சியர்கள் உடனடி ஆய்வு செய்து வருகின்றனர். முகாம்கள் சரியாக நடக்கிறதா என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த முகாம்களில் ரேஷன் கார்ட் அவசியமாக கேட்கப்படுகிறது. அதேபோல் ஆதார் சீடிங் செய்ய ஆதார் கார்டு , அதோடு இணைக்கப்பட்டு உள்ள போன் நம்பர் அவசியமாக கேட்கப்படுகிறது. இதற்காகவே பயோமெட்ரிக் பயன்படுத்தப்படுகிறது. இதை வைத்து பெறப்பட உள்ள ஓடிபி கேட்கப்படுகிறது. பெரும்பாலும் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்படுகின்றன. சர்வர் டவுன் ஆகும் பட்சத்தில் ஆப் லைனில் விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன.

ஏற்கனவே விண்ணப்பத்தை பெண்கள் பூர்த்தி செய்துள்ளனர். அதேபோல் டோக்கனில் நம்பர் இருப்பதால் நேராக குறித்த நேரத்திற்கு வந்து ஓடிபி சொல்லிவிட்டு விண்ணப்பத்தை கொடுக்கும் அளவிற்கு இந்த செயல்முறைகள் எளிதாக உள்ளன. அதனால் பெரிய அளவில் கூட்ட நெரிசல்கள் இல்லை.

ரேஷன் மீண்டும் முறையாக இயங்கும்: இந்த ரேஷன் கடைகளின் பயோமெட்ரிக் கருவி முகாம்களில் பயன்படுத்தப்பட்டதால் ரேஷன் கடைகளில் மக்கள் பொருட்கள் வாங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பயோமெட்ரிக் இருந்தால் மக்கள் எந்த ரேஷன் கடையில் வேண்டுமானாலும் பொருட்களை வாங்கலாம். ஆனால் கடந்த 10 நாட்களாக மக்கள் தங்கள் பெயர் உள்ள ரேஷனில் மட்டும் லெட்ஜரில் கையெழுத்து போட்டு பொருள் வாங்க வேண்டி இருந்தது.

தற்போது இந்த 1000 ரூபாய் முகாம்களுக்கு என்று மின் முகாமை மூலம் கூடுதல் பயோமெட்ரிக் கருவிகள் வாங்கப்பட்டு உள்ளன. இதனால் ரேஷனுக்கு அந்த பழைய மெட்ரிக் கருவி திருப்பி கொண்டு வரப்பட்டு உள்ளன. இன்று ரேஷனுக்கு கருவிகள் மீண்டும் வந்துவிட்டன. இதனால் இனிமேல் மக்கள் எந்த ரேஷனிலும் பயோமெட்ரிக்கை பயன்படுத்தி பொருட்களை நாளை முதல் வாங்கிக்கொள்ள முடியும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+