ரேஷன் அட்டைதாரர்களே.. மேஜர் தகவல் வந்தாச்சு.. இனி ஒருத்தரும் "கை" வைக்க முடியாது.. தைரியமா இருக்கலாம்
சென்னை: ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய செய்தி ஒன்றினை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது.. இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்புத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன..

இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே ஏராளமான பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றன..
ரேஷன் அட்டைகள்: அதேபோல, பொங்கல் பரிசு உள்ளிட்ட நிதியுதவிகளும் அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்படுகின்றன. மற்றொரு புறம், ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவித்தல் போன்றவைகள் குறித்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதேபோல, அடுத்த ஒரு வருடத்துக்குள் அனைத்து ரேஷன் கடைகளிலும் கழிப்பறை வசதி ஏற்பாடு செய்ய மாதிரி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டுறவுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், கடந்த வாரம் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார்.. இந்நிலையில், தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற ரூ1,06,20,066 மதிப்பிலான ரேஷன் கடை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
விநியோகத்திட்டம்: அதுகுறித்து செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில், "அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம் / சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் விநியோகம் செய்து வருகிறது. அவ்வாறு, விநியோகம் செய்யப்படும் அத்தியாவசியப் பண்டங்களை சிலர் முறைகேடாக கள்ளச்சந்தையில் விற்று அதிக லாபம் ஈட்டும் நோக்கத்துடன் செயல்பட்டு வருகின்றனர்.
பதுக்கல் & கடத்தல்: உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலர்கள் ஆகியோர் தொடர் ரோந்து பணி மேற்கொண்டு அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடுவோர் / உடந்தையாக செயல்படுவோர் மீதும், இன்றியமையாப் பண்டங்கள் சட்டம், 1955 மற்றும் தொடர்புடைய கட்டுப்பாட்டு ஆணைகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய மேல் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்பு சட்டம், 1980ன் படி அவ்வப்போது தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 01.03.2023 முதல் 31.03.2023 வரையிலான ஒரு மாத காலத்தில் கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற, ரூ1,06,20,066/- (ரூபாய் ஒரு கோடியே ஆறு லட்சத்து இருபதாயிரத்தி அறுபத்தி ஆறு மட்டும்) மதிப்புள்ள 3350 குவிண்டால் பொதுவிநியோகத்திட்ட அரிசி, 186 எரிவாயு உருளைகள், 250 கிலோ கோதுமை, 45 கிலோ துவரம்பருப்பு, மண்ணெண்ணெய் 380 லிட்டர், பாமாயிலின் 8 பாக்கெட்டுகள் ஆகியவையும், மேற்கண்ட கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 174 வாகனங்களும் கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளன.
புகார் எண்கள்: மேற்கண்ட குற்றச்செயலில் ஈடுபட்ட 546 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980 ன்கீழ் 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொது மக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications