ரேஷனில் அதிரடி.. இனி யாரும் "கை" வைக்க முடியாது: ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி.. தமிழக அரசு மாஸ்
சென்னை: தமிழக ரேஷன் அட்டைதாரர்களின் நன்மை கருதி, தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்திருக்கிறது. இது பொதுமக்களுக்கு பெருத்த நம்பிக்கையை தந்து வருகிறது.
தமிழக அரசை பொறுத்தவரை, பொதுமக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், பல்வேறு அறிவிப்புகளையும், புதுபுது வசதிகளையும் செய்து வருகிறது.. முக்கியமாக பணபரிவர்த்தனையையும் எளிமைப்படுத்தி வருகிறது. இதன்மூலம் அரிசி அட்டைதாரர்களின் சுமையையும் குறைத்து வருகிறது.

இதன்காரணமாக ரேஷன் அரிசி கடத்தல்கள் ஓரளவு குறைந்துள்ளதே தவிர முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. குறிப்பாக, தமிழக எல்லைகளில் அண்டை மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி அவ்வப்போது கடத்தப்பட்டிருக்கிறது..
புரோக்கர்கள்: இதற்காகவே சில புரோக்கர்களும் செயல்பட்டு வருவதாக சொல்கிறார்கள். இவர்கள்தான், கள்ளச்சந்தையில் குறைந்த விலைக்கு அரிசியை விற்பனை செய்கின்றனர்...
இதனால், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒதுக்கப்பட்ட அரிசி முறையாக கிடைப்பதில்லை என்றும் புகார்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. அதேபோல, மாத இறுதியில் ரேஷன் அட்டைதாரர்கள் வாங்காத பொருள்களையும் வாங்கியதாக ரேஷன் கடை ஊழியர்கள் பதிவு செய்கிறார்களாம்..
இதுகுறித்த புகார்கள் எழவும், அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆய்வு செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உணவுத்துறை அதிரடி உத்தரவினை அவ்வப்போது பிறப்பித்து வருகிறது.
பதுக்கல்: கட்டாய விற்பனை செய்வது தொடர்பாக புகார் வரும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மண்டல இணை பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.. இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொது மக்கள் 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்றும் தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
தற்போது கோடைக்காலம் துவங்கிவிட்டதால், பொதுமக்கள் ரேஷன் கடைகளுக்கு வெயிலில் அலைக்கழிக்கப்பட கூடாது என்றும், அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் ஒரே தவணையில் மொத்தமாக வழங்க வேண்டும் என்றும் 4 நாட்களுக்கு முன்புகூட அறிவுறுத்தியிருந்த நிலையில், இப்படி ஒரு புகார் எண் வெளியிடப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி, தங்கள் புகார்களை தெரிவிக்கலாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
முறைகேடுகள்: அதேபோல, தமிழக ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் ஒரே தவணையில் வழங்குமாறு ஊழியர்களுக்கு, உணவு துறை பலமுறை உத்தரவிட்டும்கூட, அதை, பல ஊழியர்கள் பின்பற்றுவதில்லையாம்... அனைத்து பொருட்களும் வரவில்லை என்று சொல்லி, ஒரு நாள் அரிசி, இன்னொரு நாள் சர்க்கரை என்று அவரவர் விருப்பத்துக்கு தருகிறார்களாம்.
சில சமயம், கடையில் பொருள் இல்லை என்று கார்டுதாரர்களை திருப்பி அனுப்பியும் விடுவதால், இந்த முறைகேடுகளை தடுப்பதற்காகத்தான், டிஎன்இபிடிஎஸ் என்ற மொபைல் ஆப்-ஐ உணவு வழங்கல் துறை அறிமுகம் செய்துள்ளது.
புது செயலி: இந்த ஆப்பை ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் செல்போனில் டவுன்லோடு செய்து கொள்ள வேண்டும். அந்த செயலியில், கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள், முகவரிக்கு ஒதுக்கிய ரேஷன் கடையில் உள்ள உணவு பொருட்களின் இருப்பு, முந்தைய பரிவர்த்தனைகள் உள்ளிட்ட விபரங்களை, துல்லியமாக அறிய முடியுமாம். இதனால், ரேஷன் பரிவர்த்தனை உள்ளிட்ட விபரங்களை தெரிந்து கொள்ள முடியும் என்று உணவு மற்றும் கூட்டுறவு துறை அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications