அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஹேப்பி.. "மொத்தமா அனுப்புங்க".. தமிழக அரசு அதிரடி.. மக்கள் நிம்மதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் அட்டைதாரர்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், தமிழக அரசு இன்னொரு அதிரடியை கையில் எடுக்க போகிறதாம்.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதனால், லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து பயன்பெற்றும் வருகின்றனர்.

Ration Card Holders and TN Government Major Instruction to send the Ration items in one installment at 100% level

பாமாயில்: அதுமட்டுமல்ல, விரைவில் தீபாவளி பண்டிகை வரப்போகிறது.. எனவே, தீபாவளியை முன்னிட்டு, அடுத்த 2 மாதங்களுக்கு ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயிலை இலவசமாக வழங்குவது குறித்து, அரசு பரிசீலித்து வருவதாக தெரிகிறது. இப்போதைக்கு அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், கிலோ 25 ரூபாய் விலையில் அதிகபட்சம், 2 கிலோ சர்க்கரை, கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய், லிட்டர் பாமாயில் 25 ரூபாய் என்று குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன.

அநேகமாக, இன்னும் சில தினங்களில், ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குவது குறித்த அறிவிப்பு வரலாம் என்கிறார்கள். காரணம், மாத மாதம் சரியாக ரேஷன் வாங்காதவர்கள்கூட, தீபாவளி பண்டிகையையொட்டி, பச்சரிசி, சர்க்கரை, பாமாயில் போன்றவற்றை வாங்குவார்கள். அதனால், இந்த பொருட்களின் தேவையும் கூடியிருக்கிறது.

கொள்முதல்: இந்நிலையில், உணவுத்துறை வழங்கல் முக்கிய உத்தரவு ஒன்றினை, நுகர்பொருள் வாணிப கழகத்திற்கு பிறப்பித்துள்ளது. வழக்கமாக, ரேஷன் பொருட்களை, நுகர்பொருள் வாணிப கழகம் கொள்முதல் செய்து, ரேஷன் கடைக்கு அனுப்பி வைத்து வருகிறது.. ஆனால், தீபாவளி பண்டிகை நெருங்குவதால், அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும், 100 சதவீத அளவுக்கு ஒரே தவணையில் அனுப்புமாறு, வாணிப கழகத்திற்கு, உணவு வழங்கல் துறை உத்தரவிட்டிருக்கிறது..

அதுமட்டுமல்லாமல், கிடங்குகளில் பொருட்களை ஏற்றுவது, கடைகளில் இறக்குவதை போட்டோ எடுத்து, உணவு வழங்கல் துறை உயரதிகாரிகளுக்கு, வாட்ஸ்அப்பில் அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செம மகிழ்ச்சி: அதேபோல, கார்டுதாரர்களுக்கும்,ஒரே தவணையில் அனைத்து பொருட்களையும் வழங்குவதை கண்காணித்து தினமும் அறிக்கை அனுப்புமாறு, மாவட்ட வழங்கல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. பண்டிகை காலம் என்பதால், ரேஷன் பொருட்களுக்கான தேவை கூடும் என்பதால், இப்படியொரு உத்தரவினை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.. இது ரேஷன் அட்டைதாரர்களுக்கு மிகுந்த நிம்மதியையும், மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+