ரேஷனில்.. முளைத்த பிரச்சனை.. "இவங்களுக்கு" எந்த பொருளும் இல்லையா? திடீர்னு வந்த தகவலால் பரபரப்பு
சென்னை: ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் குறித்து, முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. இதுகுறித்து அதிகாரிகள் சொல்வது என்ன?
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.. இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாகவே ஏராளமான பலன்களை அடைந்து வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரம் காக்கப்பட்டு வருகின்றன..

ரேஷன் அட்டைகள்: அதேபோல, பொங்கல் பரிசு உள்ளிட்ட நிதியுதவிகளும் அரசின் மற்ற நலத்திட்ட உதவிகளும் ரேஷன் கார்டு மூலமாக வழங்கப்படுகின்றன.
மற்றொரு புறம், ரேஷன் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல் நீக்குதல், திருத்தம், புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், செல்போன் பதிவு எண்ணை மாற்றுதல், ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை தெரிவித்தல் போன்றவைகள் குறித்தும் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி மேற்கொள்ள தமிழக அரசினால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மாநில அரசு: கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் பரவிய கொரோனா தொற்று காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்கின்போது, மத்திய மற்றும் மாநில அரசுகள் ரேஷன் அட்டைதாரர்களுக்கு உணவு தானியங்களை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.. இடம் பெயரும் தொழிலாளர்கள் பயன் பெற, "ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு" திட்டத்தை, மத்திய அரசு அப்போது துவக்கியது.
இந்த திட்டத்தின் கீழ் தமிழக கார்டுதாரர்கள், எந்த மாநில ரேஷன் கடையிலும் அரிசி, கோதுமை வாங்கலாம். தமிழக ரேஷன் கடைகளில், பிற மாநில கார்டுதாரர்களின் விரல் ரேகையை பதிவு செய்து கிலோ அரிசி, 3 ரூபாய்க்கும், கிலோ கோதுமை, 2 ரூபாய்க்கும் வழங்கப்படுகிறது. ஆனால், தமிழக ரேஷன் கடைகளில், பிற மாநிலத்தவருக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது.
ரேஷன் கார்டுகள்: சமீபத்தில், தமிழக அரசு மகளிர்உரிமைத்தொகை, 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்திற்கு பயனாளிகளை தேர்வு செய்ய, தமிழகத்தை சேர்ந்த கார்டுதாரர்களின் வீடுகளில் இந்த வருட ஜூலையில் விண்ணப்பம் வழங்கியதுடன், சிறப்பு முகாம்களில் விண்ணப்பதாரர்களின் விரல் ரேகையும் பதிவு செய்யப்பட்டன. எனவே, இதற்காக ரேஷன் கடைகளில் இருந்த விரல்ரேகை பதிவு கருவிகள் பயன்படுத்தப்பட்டன..
கருவிகளை முகாம்களுக்கு கொண்டு போய்விட்டதால், அந்த மாத இறுதியில் மட்டும் பிற மாநிலத்தவருக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டது..
ஆனால், இதற்கான முறைப்படி, அறிவிப்பையும் அரசு முன்கூட்டியே அப்போது அறிவித்திருந்தது. பிறகு, ஆகஸ்ட் மாதமே, மறுபடியும் பொருட்கள் வழங்க அனுமதிக்கப்பட்டது.. ஆனாலும், பல கடைகளில் பிற மாநிலத்தவருக்கு ரேஷன் பொருட்களை வழங்க ஊழியர்கள் மறுப்பதாக புகார் எழுந்துள்ளது..
அதிருப்தி: அதாவது, பிற மாநிலத்தவருக்கு வழங்குவதற்கு ஏற்ப கூடுதலாக பொருட்களை அனுப்புவதில்லையாம், அதனால்தான், அவர்களுக்கு வினியோகிக்க முடிவதில்லை' என்கிறார்கள். எனினும், இந்த விஷயத்தில் அதிகாரிகள் கவனத்தை திருப்பியிருக்கிறார்கள்.. பிற தமிழகத்தில் பிற மாநிலத்தவருக்கு பொருட்கள் வழங்க மறுக்கும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி தந்திருக்கிறார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications