சர்க்கரை அட்டைதாரர்களுக்கு.. இனி பாமாயில் கிடைக்காதா? ரேஷனில் மாற்றம் வருதா? தமிழக அரசின் முடிவு?
சென்னை: புதிய ரேஷன் கார்டுகள் விண்ணப்பித்தவர்களுக்கு இதுவரை வழங்கப்படாத நிலையில், 2 விதமான சிக்கல்கள் தற்போது கிளம்பி உள்ளன... என்ன அது?
சில மாதங்களுக்கு முன்பு, ரேஷன் கடைகளில் கருவிழி சரிபார்ப்பு கருவிகள், ரசீது வழங்கும் பிரின்டர் சாதனங்கள் வைக்கும் பணிகள், வரும் 2024ம் ஆண்டு ஜனவரி முதலே துவங்க போவதாகவும், மார்ச் மாதத்துக்குள் மொத்த பணிகளும் முடிக்கப்பட வேண்டும் என்றும் அரசு திட்டமிட்டிருப்பதாகவும் செய்திகளும் வெளியாகியிருந்தன.

மகளிர் உரிமைத்தொகை: ஆனால், புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் பற்றி எந்தவொரு உறுதியான தகவலையும் அதிகாரிகள் வழங்கவில்லை.. குறிப்பாக, 1000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை கையில் எடுத்ததுமே, புதிய ரேஷன் கார்டுகள் விநியோகம் நிறுத்தப்பட்டுவிட்டது ரேஷன்தாரர்களிடம் அதிருப்தியை தந்து வருகிறது.
"புதிய ரேசன் கார்டுகளுக்கான கள ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டாம்" என்று வட்ட வழங்கல் அதிகாரிக்கு, உணவு வழங்கல் துறை அறிவுறுத்தியிருந்ததால், புதிய ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்தவர்கள் அதிருப்திக்கும், ஏமாற்றத்துக்கும் ஆளானார்கள். அதுமட்டுமல்ல, இறந்து போனவர்கள், குடும்ப அட்டையில் புதிதாக உறுப்பினர்கள் சேர்த்தல் உள்ளிட்ட எந்த பணிகளும் நடக்கவில்லை என்று பொதுமக்கள் தரப்பில் அதிருப்தி கிளம்பியது.
ஆவணங்கள்: வழக்கமாக, புது ரேஷன் கார்டு கேட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்தால், அடுத்த 15 நாட்களுக்குள் புதுகார்டு வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவு அமலில் இருந்தும், புது கார்டுகள் வழங்கப்படாமல் உள்ளதாகவும், பலமுறை உணவுத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்காததால், முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி வருகிறோம் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் புலம்பியவாறே உள்ளனர்.
அதுமட்டுமல்ல, உணவு வழங்கல் துறையின் பொது வினியோக திட்ட வெப்சைட்டில், புது ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துவிட்டு காத்திருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தபடியே வருகிறதாம்.. ஒரு லட்சம் கார்டுகள் அச்சடிக்கப்படாமல் தேங்கி நிற்பதாகவும், இதனால், சில மாதங்களாகவே, தங்களால் பொருட்களை வாங்க முடியவில்லை என்றும் ரேஷன்தாரர்களின் புலம்பல்களும் வெடித்தபடியே இருந்தன.
இதனிடையே, புதிய ரேசன் கார்டுகளுக்கு அனுமதி கிடைத்தவுடன், கள ஆய்வு பணிகளை தொடங்குவோம்.. ஆன்லைன் வழியாகவும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்" என்று உணவு வழங்கல் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருந்தனர். ஆனாலும், இதுவரை புதிய ரேஷன் கார்டுகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை..
தற்போது, ஒவ்வொரு மாவட்டத்திலும், கடந்த 7 மாதங்களில், 5 ஆயிரம் முதல் 8 ஆயிரம் புதிய ரேஷன் கார்டுக்கான விண்ணப்பங்கள் அங்கீகாரம் வழங்கப்படாமலும், அச்சிடும் பணிகளும் தொடர்ந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்தவகையில், தமிழகம் முழுவதும், 1.50 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், ரேஷன் பொருட்களை பெற முடியாமல் உள்ளனர். எனவே, ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும்? புது ரேஷன் கார்டுகளை உடனடியாக வழங்க வேண்டும் என்றும் மீண்டும் கோரிக்கை எழுந்துள்ளது.
விண்ணப்பம்: எம்பி தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டால் புதிய ரேஷன் கார்டு அச்சிட முடியாது... அதனால், விண்ணப்பித்து காத்திருப்போர், இன்னும் 6 மாதங்களுக்கு ரேஷன் கார்டு பெறமுடியாத நிலைமை ஏற்பட்டுவிடும்.. அதனால், புதிய ரேஷன் கார்டு அச்சிட்டு பணிகளை உடனடியாக துவக்க அரசு உத்தரவிட வேண்டும் என்று பொதுமக்கள் மீண்டும் வலியுறுத்த துவங்கி உள்ளனர்.
இதில், இன்னொன்றையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.. மருத்துவ காப்பீட்டு திட்டங்களில் 5 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சை இலவசமாக வழங்கப்படுகிறது..
சிகிச்சை வசதி: இதன்மூலம் லட்சக்கணக்கானோருக்கு அரசின் காப்பீடு திட்டம் கை கொடுத்து வருகிறது.. ஆனால், இந்த சலுகைக்கும் ரேஷன் கார்டுதான் முக்கிய ஆவணமாக உள்ளதால், மருத்துவ காப்பீடு திட்டத்தில் இணையமுடியாமல் பல ஏழைகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.. அதனால், ரேஷன் கார்டுகளை உடனடியாக தர வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications