குடும்ப அட்டைதாரர்களுக்கு நல்ல செய்தி? ரேஷனில் பாமாயிலுக்கு பதில் இந்த பொருளா? தமிழக அரசு முடிவென்ன?
சென்னை: ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்குவதை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுக்க துவங்கியிருக்கிறது. இதுகுறித்து தமிழக அரசுக்கு வேண்டுகோளும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்றவும், உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்கவும், பாமாயில் இறக்குமதி ஒப்பந்த புள்ளியை ரத்து செய்துவிட்டு, தேங்காய் எண்ணெய் கொள்முதலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும், அத்துடன் ரேஷன் கடைகளிலும் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய வேண்டும் என்று தேங்காய் விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தபடி உள்ளனர்.

தமிழக அரசு : கேரளா, கர்நாடகா, தமிழக தென்னை விவசாயிகள் மத்திய அரசிடம் கொள்முதல் செய்த கொப்பரையை வெளி மார்க்கெட்டில் விற்க கூடாது என்பதுடன், தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகள் மூலம் உடனடியாக விற்பனை செய்ய வேண்டும் என்றும் கேட்டு வருகிறார்கள்.
அதுமட்டுமல்ல, திமுக ஆட்சிக்கு வந்ததுமே, ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய் மானிய விலையில் விற்பனை செய்யப்படும் என்று அறிவித்திருந்த நிலையில், அதனையும் ஏன் நிறைவேற்றவில்லை? என்று கேட்டு தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள் விவசாயிகள். இதே கோரிக்கையை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் விடுத்து வருகிறார்கள்.
வாசன் அறிக்கை: அந்தவகையில், தமாகா தலைவர் ஜிகே வாசனும் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அறிக்கை ஒன்றினை வாசன் வெளியிட்டிருக்கிறார். அந்த அறிக்கையில் உள்ளதாவது:
"தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக பொது மக்களுக்கு அரிசி விலையில்லாமல் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர மானிய விலையில் கோதுமை, சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அரிசி அட்டைதாரர்கள், சர்க்கரை அட்டைதாரர்கள் என இரண்டு வகையாக ரேஷன் அட்டைகள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு மாதமும் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
ரேஷன் அட்டைகள்: இந்த சூழலில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில், "ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்கள் ரேஷன் அட்டை மூலம் பொது விநியோக திட்டத்தில் நியாயவிலைக் கடைகளில் குறைந்த விலையில் உணவு பொருட்களை வாங்கி வருகிறார்கள். பொதுமக்களுக்கு பயனுள்ள பொருள்களை வழங்குவது அரசின் கடமை
பொது விநியோக திட்டத்தின் மூலம் நியாயவிலைக் கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய் வழங்கப்படுவதாகவும், குறிப்பாக பாமாயில் வழங்கப்படுகிறது.. பாமாயில் பெரும்பாலும் அயல்நாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய்யை மக்களுக்கு வழங்கினால் நம் நாட்டைச் சேர்ந்த சிறு, குறு எண்ணெய் உற்பத்தியாளர்கள் பயன்பெறுவார்கள்.
கடலை எண்ணெய்: அப்படி செய்வதன் மூலமாக உள் நாட்டு வருமானமும் உயரும். தேங்காய் எண்ணைய், நல்லெண்ணெய், கடலை எண்ணெய் சமையலுக்கு பயன்படுத்தும் போது பல்வேறு பயன்களும் உள்ளன. இதனால் பல்வேறு உடல் நோய்கள் தடுக்கப்படுகிறது, கட்டுக்குள் கொண்டு வரப்படுகிறது.
ஆகவே ரேஷன் கடைகளில் பாமாயில் வழங்குவதை நிறுத்த வேண்டும். அதற்கு பதிலாக உடல் ஆரோக்யத்தை தரும் உள் நாட்டில் உற்பத்தியாகும் எண்ணெய்களை வழங்க வேண்டும்" என்று மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் ஜி.கே.வாசன்.












Click it and Unblock the Notifications