ரேஷன் கடைகளில் அரிசி, சீனி.. மத்திய அரசு தருவதை ரேஷனில் எழுதி போட மாட்டீங்களா? கேட்பது யார் பாருங்க
சென்னை: 4 பேர் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.1,500 மதிப்பில் மத்திய அரசு அரிசி, பருப்பு வழங்குகிறது.. ஆனால், திமுக ஒரு வீட்டுக்கு 1000 ரூபாய் தான் கொடுக்கிறது என்று பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமையகத்தில், பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் எச்.ராஜா முன்னிலையில் எம்ஜிஆர் மக்கள் மன்ற நிர்வாகிகள் பாஜகவில் இணைந்தனர்..

புகழேந்தி: வழக்கறிஞர் புகழேந்தி தலைமையில், இவர்கள் அனைவரும் தங்களை பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். கட்சியில் இணைந்த அனைவருக்கும் மூத்த தலைவர் எச்.ராஜா பாஜக உறுப்பினர் அட்டையை வழங்கி வாழ்த்துகளை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, மூத்த தலைவர் எச்.வி.ஹண்டே, மாநில துணை தலைவர்கள் வி.பி.துரைசாமி, டால்ஃபின் ஸ்ரீதர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா, "ஏழை மக்களுக்கான திட்டங்களை தரும் ஒரே தலைவர் பிரதமர் மோடி தான். கொரோனா காலக்கட்டத்தில் இருந்து ஒரு நபருக்கு மாதம் 5 கிலோ அரசி, 1 கிலோ பருப்பு என மத்திய அரசு நாடு முழுவதும் 80 கோடி பேருக்கு இலவசமாக வழங்குகிறது.
ரேஷன் கடைகள்: அனைத்து ரேஷன் கடைகளும் மத்திய அரசின் முழு மானியத்தில் செயல்பட்டு கொண்டிருக்கிறது. தமிழகத்தில், அனைத்து ரேஷன் கடைகளிலும் கொடுக்கப்படும் அரிசி மற்றும் பருப்பு, மத்திய அரசின் முழு மானியத்தில் இருந்து கிடைக்கிறது என எழுதிப் போட வேண்டியது தானே? ஏன் அதனை செய்வதில்லை? பாஜக குறித்து உண்மைக்கு புறம்பாக பேசுவர்களை குறித்து பேசத் தயாரில்லை
ஒரு குடும்பத்தில் 4 பேர் இருந்தால், 20 கிலோ அரிசி, 4 கிலோ பருப்பு கிடைக்கும். இதன் மதிப்பு இன்றைய தினம் ரூ.1,500 ஆகும். அந்த வகையில், 4 பேர் இருக்கும் ஒவ்வொரு வீட்டுக்கும் ரூ.1,500 மதிப்பில் மத்திய அரசு அரிசி, பருப்பு வழங்குகிறது. ஆனால், திமுக ஒரு வீட்டுக்கு 1000 ரூபாய் தான் கொடுக்கிறது.
மெட்ரோ ரயில்: மத்திய அரசு ரூ.7020 கோடி கொடுக்கிறது என்றால் , மாநிலமும் ரூ.7020 கோடி கொடுக்கிறது. மீதமுள்ள பணம் நீண்ட கால கடன் மூலம் ஈடு செய்யப்படும். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் மத்திய அரசை கேட்காமலே நீட்டிக்கப்பட்டது. ஒப்புதல் வாங்காமலே பணிகள் மேற்கொண்ட போதிலும், மத்திய அரசு இதற்கு ஒப்புதல் அளித்ததோடு மத்திய மாநில அரசுகளின் சம பங்களிப்போடு திட்டத்தை செயல்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.
மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் கேட்டு விட்டு மாநில அரசு பணிகளை மேற்கொள்ளவில்லை. மத்திய அரசு கேட்காமலேயே மாநில அரசு நீட்டித்து தான் 2ம் கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனாலும், மத்திய அரசு இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது
மருத்துவ காப்பீடு திட்டம்: அதேபோல, 70 வயது தாண்டிய அனைவருக்கும் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு மருத்துவக் காப்பீடு திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் தேவையை கருத்தில் கொண்டு பிரதமர் மோடி திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறார். ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று திருமூலர் சொன்னார். ஆனால், அது அறிஞர் அண்ணா தான் சொன்னார் என்பது போல் இப்போது மாறிவிட்டது. தமிழக மக்களை திராவிட கட்சிகள் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றன என்பதற்கு இதுவே அடிப்படை.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications