ரேஷனில் மாற்றம்.. இனிமேல் 5 கிலோ கோதுமை கிடையாதா? ரேஷன் கார்டுதாரருக்கு வந்த சிக்கல்? இதுதான் காரணமா
சென்னை: தமிழக ரேஷன் கடைகளில், ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. அவர்கள், தங்களுக்கு உரிய அரிசி ஒதுக்கீட்டில், குறிப்பிட்ட அளவு அரிசிக்கு பதில், கோதுமையை வாங்கிக் கொள்ளலாம். அதன்படி, தலா ஒருவருக்கு, 5 கிலோ முதல், 10 கிலோ வரை கோதுமை வழங்கப்படுகிறது.. இந்த கோதுமையை, மத்திய அரசு நமக்கு வழங்குகிறது. இந்நிலையில், இதுகுறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழக ரேஷன் கடைகளில், ரேஷன் அட்டைதாரர்கள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப, அரிசிக்கு பதில் கோதுமையை இலவசமாக வாங்கிக் கொள்ளலாம் என்று வசதியை தமிழக அரசு செய்து தந்திருக்கிறது.
அந்தவகையில், சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்களில், கார்டுதாரர்களுக்கு தலா 5 கிலோவும், மற்ற இடங்களில், 2 கிலோ வரையும் கோதுமை வழங்கப்படும் என்ற அறிவிப்பு கடந்த ஜனவரி மாதம் வெளியானது. இந்த புதிய திட்டத்தின் மூலம் அரிசி பெறும் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களின் விருப்பத்தின் அடிப்படையில் வாங்கிக்கொள்ள முடியும்.

5 கிலோ, 10 கிலோ கோதுமை
மாநகராட்சிப் பகுதிகளில் 10 கிலோ வீதமும் ஏனைய பகுதிகளில் 5 கிலோ வீதமும் நியாய விலைக் கடைகளின் இருப்பைப் பொறுத்து அவர்களது விருப்பத்தின்படி அரிசிக்குப் பதிலாகக் கோதுமை விலையில்லாமல் வாங்கிக்கொள்ள முடியும். அந்தவகையில், இதுவரை 7லட்சத்து 25 ஆயிரத்து 482 மெட்ரிக் டன் கோதுமை விலையில்லாமல் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது.. தற்போது தொடர்ந்து கோதுமை வழங்கப்பட்டும் வருகிறது.
திடீரென குறைத்த மத்திய அரசு
தமிழக ரேஷன் கடைகளில் அரிசி கார்டுதாரர்களுக்கு, அரிசிக்கு பதில் 5 கிலோ வரை கோதுமை இலவசமாக வழங்கப்படுவதற்காகவே, மாதம், 17,100 டன் கோதுமையை மத்திய அரசு ஒதுக்கீடும் செய்திருந்தது.. ஆரம்பத்தில், மத்திய அரசு சார்பில், மாதம் சராசரியாக, 13,500 டன் கோதுமை வழங்கப்பட்டது.
இதை 2023ல் மாதம், 8,500 டன்னாக குறைத்தது. தமிழக அரசின் தொடர் கோரிக்கையையடுத்து, 2024 அக்டோபர் முதல் கோதுமை ஒதுக்கீட்டை மாதம், 17,100 டன்னாக மத்திய அரசு உயர்த்தியிருந்தது.
இந்நிலையில், இந்த மாதத்திலிருந்து கோதுமை ஒதுக்கீடு, 8,576 டன்னாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஒரு கார்டுதாரருக்கு, 2 கிலோ கோதுமை வழங்குமாறு, கடை ஊழியர்களை தமிழக உணவுத்துறை அறிவுறுத்தி உள்ளது. உணவு வழங்கல் துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்படும் அளவுக்கு, கோதுமை வழங்க வேண்டும் என, ரேஷன் ஊழியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
விரைவில் கோதுமை அளவு அதிகரிக்கும்
எனினும், தமிழகத்திற்கு ஏற்கனவே வழங்கியது போல் கூடுதல் கோதுமை ஒதுக்கீடு செய்யுமாறு, மத்திய உணவுத் துறையிடம் வலியுறுத்தப்பட்டு வருவதால், விரைவில் கோதுமை ஒதுக்கீடு அளவு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, பல ரேஷன் கடைகளில் வழக்கமான அளவில், கோதுமை வினியோகம் செய்யப்படாததால், ரேஷன் கார்டுதாரர்கள், கடை ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது.












Click it and Unblock the Notifications