அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு குட்நியூஸ்.. இனி "இதுவும்" ரேஷனில் கிடைக்க போகிறதாம்.. தமிழக அரசு செம
சென்னை: ரேஷன் கடைகளில் கூடுதலாகவும், இலவசமாகவும் 2 பொருட்களை வழங்கப்போகிறார்களாம். இதுகுறித்து மாநில அரசு தமிழக மக்களுக்கு சர்ப்ரைஸ் தரப்போகிறதாம்.
சில மாதங்களுக்குமுன்பு, அமைச்சர் சக்கரபாணி செய்தியாளர்களுக்கு ஒரு பேட்டி தந்திருந்தார்.. அப்போது ரேஷனில் தேங்காய் எண்ணெய் வழங்கப்படுவது குறித்து கூறியிருந்தார்.

4 மாவட்டங்கள்: அதில், "தமிழகத்தில் விவசாயிகள் தேங்காய் எண்ணெயை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்... அதன்படி, முதற்கட்டமாக, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் மட்டும் ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணெய் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரத்தில், மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவு படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதனிடையே, உழவர் உழைப்பாளர் கட்சி, தென்னை விவசாயம் மேம்பாட்டுக்குழு, விவசாயிகள் சங்கம் என முக்கியமான அமைப்புகள் தமிழக அரசுக்கு சில கோரிக்கைகளை விடுத்தன.
அதில், பாமாயில் கொள்முதல் அறிவிப்பை நிறுத்தி வைத்துவிட்டு தேங்காய் எண்ணெய் கொள்முதலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும்.. தென்னை விவசாயிகளை காப்பாற்றவும், உள்ளூர் வணிகத்தை ஊக்குவிக்கவும், தமிழ்நாடு அரசு பாமாயில் இறக்குமதி ஒப்பந்த புள்ளியை ரத்து செய்து, ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் விடுத்திருந்தனர்.
இதைத்தவிர, டெல்லியில், மத்திய வேளாண் துறை இணை அமைச்சர் கைலாஷ் சவுத்ரியை, விவசாயிகள் குழுவினர் நேரிலேயே சென்று இதுகுறித்து சந்தித்து பேசியிருந்தனர். அப்போது, தமிழக ரேஷன் கடைகளில் பாமாயிலுக்குப் பதில், தேங்காய் எண்ணெய் வழங்க உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சர் சம்மதம் தெரிவித்துவிட்டாராம்.
இந்நிலையில், தமிழக அரசு அடுத்த அதிரடியை கையில் எடுக்க போவதாக தெரிகிறது.. விரைவில் தீபாவளி பண்டிகை வரப்போகிறது.. எனவே, தீபாவளியை முன்னிட்டு, அடுத்த 2 மாதங்களுக்கு ரேஷனில் துவரம் பருப்பு, பாமாயிலை இலவசமாக வழங்குவது குறித்து, அரசு பரிசீலித்து வருகிறதாம்..
இப்போதைக்கு அரிசி கார்டுதாரர்களுக்கு அரிசி, கோதுமை இலவசமாகவும், கிலோ 25 ரூபாய் விலையில் அதிகபட்சம், 2 கிலோ சர்க்கரை; துவரம் பருப்பு, 30 ரூபாய் லிட்டர் பாமாயில் 25 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு விற்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அக்டோபர், நவம்பர் மாதங்களில், ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது..
பண்டிகை சீசன்: இதற்காக, நுகர்பொருள் வாணிப கழகம், அடுத்த மூன்று மாதங்களுக்கு தேவைப்படும், 60,000 டன் துவரம் பருப்பு, 1 லிட்டர் பாக்கெட் கொள்ளளவில், 6 கோடி லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்ய உள்ளதாம். அதுமட்டுமல்ல, பண்டிசை சீசன் துவங்க உள்ளதால், உணவு தானியங்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. அதனால், அனைத்து கார்டுதாரர்களுக்கும் அடுத்த 2 மாதங்களுக்கும், ரேஷனில் பருப்பு, பாமாயிலை இலவசமாக வழங்கலாமா என்பது குறித்து, பரிசீலிக்கப்பட்டு வருவதாக சொல்கிறார்கள்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications