குடும்ப அட்டைதாரர்களுக்கு இது முக்கியம்.. ரேஷன் அட்டை தனியா வேணுமா? ரேஷன் கார்டில் இப்படி செய்யுங்க
சென்னை: ரேஷன் அட்டையில், புதிதாக ஒரு நபரை இணைக்க வேண்டும் என்றால், அதற்கு ஆன்லைனில் வசதி உள்ளதா? புதுமண தம்பதிகளுக்கு தனி ரேஷன்கார்டு தேவையென்றால், அதறகு என்ன செய்ய வேண்டும்? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
ரேஷன் கார்டுகள் என்பவை முக்கியமான ஆவணமாகிவிட்டது.. யாராலும் தவிர்க்க முடியாத ஆவணமாகிவிட்டது.. எனவே, பத்திரமாக ரேஷன் கார்டுகளை வைத்திருக்க வேண்டும்..

ஒருவேளை உங்களது ரேஷன் கார்டுகளில் திருத்தம் இருந்தாலோ அல்லது புதிதாக பெயர் சேர்க்க வேண்டும் என்றாலோ அல்லது யாருடைய பெயரையாவது நீக்க வேண்டும் என்றாலோ, அனைத்தையுமே ஆன்லைனில் எளிதாக செய்து கொள்ளும் வசதியை அரசு செய்து தந்துள்ளது.
தனி ரேஷன் கார்டு தேவையா
உதாரணத்துக்கு புதிதாக திருமணமாகி, ஒருவர் குடும்பத்தில் கூடுதலாக இணைகிறார் என்றால், அவரது பெயரை ரேஷன் கார்டில் சேர்க்க வேண்டிவரும். அல்லது தனி அட்டையாக கணவன், மனைவி இருவரும் புதிய அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
ஒருவேளை உங்களுக்கு தனி ரேஷன் கார்டு வேண்டும் என்றால், ஏற்கனவே உள்ள வீட்டின் ரேஷன் அட்டையிலிருந்து உங்கள் பெயரை நீக்க வேண்டும். அந்த பெயரை நீக்கினால் மட்டுமே புதிய ரேஷன் அட்டையில் உங்கள் பெயரை சேர்க்க முடியும். இதற்கும் ஆன்லைனிலேயே வசதி உள்ளது.
https://tnpds.gov.in/ என்ற அதிகாரப்பூர்வமான இணையதளத்தில், பெயர் மாற்றம், திருத்தம், பெயர் இணைப்பு, பெயர் நீக்கம் என அனைத்து வசதிகளையும் பெற முடியும். அந்தவகையில், புதிதாக திருமணமானவர்களும் பெயர்களை நீக்கலாம் / சேர்க்கலாம்.
அதேபோல தனியாக ரேஷன் கார்டு வேண்டுமானால், புதுமண தம்பதியின் ஆதார் அட்டையும், கேஸ் சிலிண்டர் பில்லும் தேவைப்படும். காரணம், இவைகள் தம்பதிகளின் முகவரி சான்றுக்கு ஆதாரமாகவும், ஆவணமாகவும் எடுத்து கொள்ளப்படும். இருப்பிட சான்றிதழ் தேவைப்படும் என்பதால், வீட்டு வாடகை பத்திரமும் தேவைப்படும். இத்தனை ஆவணங்களையும் வைத்து விண்ணப்பித்தால்தான், தனி ரேஷன் கார்டுகளை புதிதாக தம்பதி பெற முடியும்.
ஆன்லைனில் ரேஷன் கார்டில் புதிதாக உறுப்பினரை சேர்க்க விண்ணப்பிப்பது எப்படி
- ரேஷன் கார்டிலிருந்து பெயர் சேர்க்க https://www.tnpds.gov.in/ என்ற இணையதளத்திற்குள் நுழைந்து, "மின்னணு அட்டை தொடர்பான சேவைகள்" என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
- " உறுப்பினரை சேர்க்க" என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, ரேஷன் கார்டில் தரப்பட்டிருக்கும் செல்போன் நம்பர், கேப்ட்சா குறியீடு போன்றவற்றை உள்ளிட வேண்டும்.
- இப்போது உங்களது செல்போனுக்கு வரும் ஓடிபி நம்பரை டைப் செய்தால், இன்னொரு பக்கம் தோன்றும்.. அதில், உங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் காணப்படும்.
- அதில், "குடும்ப உறுப்பினர் சேர்க்கை" என்பதை கிளிக் செய்து, உங்களது பெயர், பாலினம், பிறந்த தேதி, உறவு முறை போன்ற விவரங்களை பதிவிட்டு உறுதிப்படுத்துதல் வேண்டும்.
புதிய ரேஷன் கார்டுகள்
இதனிடையே, புதிய ரேஷன் கார்டுகளை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக பரவலாக பேச்சு எழுந்துள்ளது.. உயிரிழந்தவரின் பெயரை ரேஷன் கார்டிலிருந்து நீக்க வேண்டுமானால், இறப்பு சான்றிதழ் தேவைப்படும். அதேபோல, புதிதாக திருமணமானவரின் பெயரை ரேஷன் அட்டையிலிருந்து நீக்க வேண்டுமானால், அதற்கு திருமண சான்றிதழ் தேவைப்படும். இந்த விதியைதான் தமிழக அரசு கட்டாயமாக்கியுள்ளது. எனவேதான், ரேஷன் கார்டு பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
எனினும், ரேஷன் கார்டு சரிபார்ப்பு விஷயத்தில் உள்ள கடுமையான விதிமுறைகளை அரசு தளர்த்த வேண்டும் என்றும், விரைந்து ரேஷன் கார்டுகளை வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு! -
சவால் விட்ட செங்கோட்டையன் அதிர்ச்சி.. எடப்பாடி தொகுதியில் தவெக வேட்பாளரே இல்லாததால் கடும் அப்செட்! -
சரியான நேரத்தில் எச்சரித்த ஆனந்த் சீனிவாசன்... சட்டென எகிறிய தங்கம் விலை.. இனி என்ன நடக்கும்? -
பும்ரா பந்தில் சிக்ஸ் அடித்த பின்.. வைபவ் சூர்யவன்ஷியிடம் என்ன பேசினீர்கள்? ஜெய்ஸ்வால் ஓபன் டாக்! -
உன்னை கட்சியில் வைத்திருந்தால்.. அதிமுகவையே விற்றுருப்பாய்.. ஓபிஎஸ்ஸை தரக்குறைவாக பேசிய எடப்பாடி!












Click it and Unblock the Notifications