பாமாயில் வாங்கிட்டீங்களா? ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் ஸ்டிரைக்! நியாய விலை கடைகள் இயங்குமா?
சென்னை: ரேஷன் கடைகளுக்கு உணவுப் பொருட்களை பாக்கெட்டில் வழங்குவது, ஊழியர்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் ஊதியம் வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் 24 ஆம் தேதி வரை மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை தமிழக அரசு நியாய விலைக் கடை பணியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கல்வித் தொகுதியின் அடிப்படையில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் 22 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை சட்டம் ஒழுங்கிற்கு பிரச்சினை வராத வண்ணம் ரேஷன் கடை பணியிலும் பாதிப்பு ஏற்படாமலும் வேலை நிறுத்தத்தில் பங்கேற்போருக்கு சம்பளம் பிடித்தம் செய்யவும் சங்கத்தின் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் மொத்தம் 34,790 ரேஷன் கடைகள் உள்ளன. இங்கு 33,377 கடைகள் கூட்டுறவு துறையால் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சர்க்கரை, பாமாயில், கோதுமை உள்ளிட்டவை 2 கோடி ரேஷன் தாரர்களுக்கு வழங்கப்படுகின்றன.
இவை இலவசமாகவும் குறைந்த விலையிலும் வழங்கப்படுகிறது. ரேஷன் பொருட்களை யாராவது ஏமாற்றி பெறுவதை தவிர்க்க ஆதாருடன் இணைக்கப்பட்ட ரேஷன் கார்டு இவருடையதுதானா என்பதை அறிய பிஓஎஸ் மெஷினில் கைரேகை வைக்கப்படுகிறது.
ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வரும் போது அந்த கிடங்குகளில் இருக்கும் எடை மெஷினும் கம்ப்யூட்டரும் ப்ளூடூத் மூலம் இணைக்காமல் குறைந்த எடையிலேயே கடைகளுக்கு பொருட்கள் வருகின்றன. இவ்வாறு வரும் நிலையில் அந்த ரேஷன் கடைக்குள்பட்ட எல்லா மக்களுக்கும் எப்படி ரேஷன் பொருட்களை முழுமையாக கொடுக்க முடியும். எனவே சரியான எடையில் உணவு பொருட்களை பாக்கெட்டுகளில் அடைத்து கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறார்கள்.
-
இனி யாரும் தப்ப முடியாது.. 16 நாட்களில் 16 ஆயிரம் வழக்குகள்.. ரூ.3.13 கோடி வசூல்! -
தமிழக அரசால் ஆண்டுக்கு 20 ஆயிரம் கோடி வருவாய் ஈட்ட வாய்ப்பு உள்ள துறைகள்.. விவரம் -
பதவியே வேண்டாம்.. தீயணைப்பு ஆணைய தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்த மாஜி டிஜிபி சங்கர் ஜிவால்! -
கேள்வி கேட்டா கரண்ட் வருமா? வாய் விட்ட மகேந்திரன்! வறுத்தெடுத்த நெட்டிசன்கள்! இப்போ மன்னிப்பு வீடியோ -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
முதியோர் சமூகமாக மாறும் தமிழ்நாடு.. இளைஞர்கள் எண்ணிக்கை சரிவு.. பெரிய சிக்கல்! வெள்ளை அறிக்கை லிஸ்ட் -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
ஆண்டுக்கு ரூ.67,000 கோடி வட்டி கட்டும் தமிழ்நாடு.. வெள்ளை அறிக்கையில் தகவல் -
நடுக்கடலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. 3 நாட்களுக்கு பிறகு ஒரு வழியாக மீட்கப்பட்ட உடல்! என்ன நடந்தது? -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
"தமிழ்நாட்டின் வருவாயில் 3-ல் 1 ரூபாய் வட்டிக்கு மட்டுமே செல்கிறது.." வெள்ளை அறிக்கை ரிப்போர்ட் -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான்












Click it and Unblock the Notifications