தனிமையில் பிரியா.. நடுவீட்டில் வந்து உட்கார்ந்த "ஆபீசர்".. ஒரே அலறல்.. வண்ணாரப்பேட்டையில் பரபரப்பு
சென்னை: பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த ரேஷன் காடு வழங்கல் அதிகாரியை, விரட்டி விரட்டி சென்று பிடித்து போலீசில் ஒப்படைத்துள்ளனர் பொதுமக்கள்..!
சென்னை புது வண்ணாரப்பேட்டையில் உள்ள வாசர் வரதப்ப மேஸ்திரி தெருவில் வசித்து வருபவர் பிரியா.. இவர் கணவனை இழந்தவர்.. ஆதரவு என்று யாருமே இவருக்கு இல்லை.
அதனால், தனியாக ஒரு விட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார்.. இப்போது புதிய ரேஷன் கார்டு ஒன்றை ஆன்லைன் மூலமாக பதிவு செய்துள்ளார்

தொல்லை
புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள தண்டையார்பேட்டை மண்டல உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலகத்தில் வேலை பார்ப்பவர் அயாத் பாட்சா.. இவர் இளநிலை உதவியாளராக பணிபுரிகிறார்.. இவர் பிரியாவின் வீட்டிற்கு சோதனைக்காக நேற்று வந்துள்ளார்.. அப்போது புது ரேஷன் கார்டுக்காக பதிவு செய்த ஆவணங்கள் சரியாக இல்லை என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆபாசம்
பிறகு, மறுபடியும் நைட் நேரம் பிரியாவுக்கு போன் செய்துள்ளார்.. ரேஷன் டாக்குமண்ட் குறித்து பேச்சை எடுத்த அதிகாரி, கொஞ்ச நேரத்தில் தன் பேச்சை வேறுவிதமாக திசை திருப்பினார்.. உடனே சுதாரித்துகொண்ட பிரியா, அதிகாரியின் பேச்சு சரியில்லை என்பதை உணர்ந்து, போனைகட் செய்துவிட்டார். ஆனால், இன்று காலையில், பிரியா வீட்டிற்கு அந்த நேரடியாகவே சென்று விட்டார்.

நடுவீட்டில் அமர்க்களம்
வீட்டில் யாருமே இல்லாததை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட அதிகாரி, நடுவீட்டில் வந்து உட்கார்ந்து கொண்டு, ஆபாசமாக பேச ஆரம்பித்துள்ளார்.. பின்னர் பிரியாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.. இதனால் அதிர்ந்து போன பிரியா, கத்தி கூச்சலிட்டுள்ளார்.. அந்த சத்தத்தை கேட்டு, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பிரியா வீட்டிற்கு ஓடிவந்தனர்.. நடந்த சம்பவத்தை அறிந்து, ரேஷன் கடை அரசு அதிகாரியை, உடனடியாக பிடித்து புதுவண்ணாரப்பேட்டை ஸ்டேஷனில் கொண்டுபோய் ஒப்படைத்தனர்

வன்கொடுமை
இதுகுறித்து பிரியா சொல்லும்போது, கணவனை இழந்த பெண்களுக்கு நேரிடும் இதுபோன்ற வன்கொடுமைகள் மீண்டும் யாருக்கும் வரக்கூடாது.. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்து இருக்கிறேன்.. சம்பந்தப்பட்ட அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளார்.. இந்த சம்பவம் வண்ணாரப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்!












Click it and Unblock the Notifications