ரேஷன் கடைக்கு போக வேண்டாம்.. குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே.. ஸ்டாலின் திட்டம் எப்போது?
சென்னை: தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் நடக்க இயலாத முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரேஷன் பொருட்கள் வாங்க கடைக்கு செல்ல சிரமப்படுவதை தவிர்க்க அவர்களின் வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்கும் திட்டம் கொண்டுவரப்படுகிறது. இந்த சோதனை திட்டம் வரும் ஆகஸ்ட் 8ம் தேதி நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த சோதனை திட்டம் எப்படி நடைமுறைப்படுத்தப்படும்.. முழுமையாக திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது பற்றி பார்ப்போம்.
தமிழ்நாட்டில் வீடு தேடி வந்து ரேஷன் பொருட்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. அந்த கோரிக்கைக்கு அரசுகள் இதுவரை செவி சாய்க்காமல் இருந்து வந்தன. இந்நிலையில் படிப்படியாக இந்த திட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த திட்டம் எல்லாருக்கும் நடைமுறைப்படுத்தப்படுமா என்றால், அதுபற்றி அரசு முறைப்படி அறிவித்தால் தான் தெரியவரும்.

அதேநேரம் தமிழகத்தில், நடக்க இயலாத முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரேஷன் பொருட்கள் வாங்க கடைக்கு செல்ல சிரமப்படுகிறார்கள். அவர்களின் வீடுகளுக்கே சென்று பொருட்களை வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.
இதன்படி சென்னை, நெல்லை, சிவகங்கை, திண்டுக்கல், ராணிப்பேட்டை, ஈரோடு, தருமபுரி, நாகை, நீலகிரி, கடலூர் ஆகிய 10 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு 10 ரேஷன் கடைகள் வீதம் 100 ரேஷன் கடைகளில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களின் வீடுகளுக்கு தேடிச்சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் கடந்த 1-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை சோதனை முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டிருந்தது.
அதன்படி, ரேஷன் பொருட்கள் வேனில் கொண்டு செல்லப்பட்டு 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடு தேடி சென்று அவர்களின் கைவிரல் ரேகைப்பதிவு பெறப்பட்டு பொருட்கள் வழங்கப்பட்டிருந்தது. அப்போது, ஒரு கடைக்கு சராசரியாக 70 வீடுகளுக்கு நேரில் சென்று பொருட்களை வழங்க இலக்கு நிர்ணயித்து சோதனை முறையில் பணியாளர்கள் வினியோகம் செய்ய திட்டமிட்டார்கள். ஆனால் சராசரியாக 50 வீடுகளுக்கு மட்டுமே வினியோகம் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தலா 10 கடைகள் தேர்வு செய்யப்பட்டு வருகிற ஆகஸ்டு 8-ந் தேதி வயது முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் சோதனை முறையில் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
அதைத் தொடர்ந்து ஆகஸ்டு 15-ந் தேதி தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி சென்று ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எனவே வரும் செப்டம்பர் முதல் வீடு தேடி ரேஷன் பொருட்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன்












Click it and Unblock the Notifications