அரிசி குடும்ப அட்டைதாரர்களே.. ரேஷன் வாங்கியாச்சா? இப்பவே வாங்கிடுங்க.. இந்த நாளில் கடை இயங்காது போலயே
சென்னை: ரேஷன் கடைகளை நிர்வகிக்க தனித்துறையை நியமிக்க வேண்டும், பொருட்களை பொட்டலமாக தரவேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் அறிவித்திருக்கிறார்கள். இதையடுத்து, ரேஷன் கடை ஊழியர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தமிழக மக்களின் நன்மைக்காகவும், வசதிக்காகவும், பல்வேறு அறிவிப்புகளையும், பலவித வசதிகளையும் கூட்டுறவுத்துறை தொடர்ந்து அறிவித்து வருகிறது.. பணபரிவர்த்தனையையும் எளிமைப்படுத்தி வருகிறது. இதன்மூலம் அரிசி அட்டைதாரர்களின் சுமையையும் குறைத்து வருகிறது.

அரிசி கடத்தல்: தொடர்ந்து நடைபெற்று வந்த அரிசி கடத்தல்களையும் மெல்ல மெல்ல குறைத்து வருகிறது.. அதேபோல, கட்டாய விற்பனை செய்வது தொடர்பாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மண்டல இணை பதிவாளர்களுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.. பொதுமக்களுக்கு ஏதாவது குறைகள், புகார் இருந்தால், 1800 599 5950 என்ற கட்டணமில்லா எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு அவ்வப்போது ரேஷன் அட்டைதாரர்களை கேட்டுக் கொண்டும் வருகிறது.
அதுமட்டுமல்ல, இப்போது மழைக்காலம் துவங்கிவிட்டதால், உணவுத் தேவைக்காக 5 கிலோ அளவிலான அரிசி மூட்டைகள் மொத்தம் 3 லட்சம் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன... 37,000 ரேஷன் கடைகளில் 2,000 கடைகள் தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ள நிலையில், இவைகளில் தாழ்வான பகுதிகளிலுள்ள கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றும் பணிகளும் நடந்து வருகின்றன..
பருப்பு பொருட்கள்: அதேபோல, எண்ணெய், பருப்பு போன்றவை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் தாமதம் ஏற்பட்டிருந்த நிலையில், இந்த குறைகளும் நிவா்த்தி செய்யப்பட்டுள்ளன
எனினும், ரேஷன் கடை ஊழியர்களின் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என்ற அதிருப்திகள் நிலவி வருகின்றன.. ரேஷன் ஊழியர்களை பொறுத்தவரை, அத்தியாவசிய பொருட்கள் அளவு, விலை மற்றும் கூடுதல் தொகையுடன் கூடிய ரசீது வழங்கும் வகையில் புதிய 4ஜி விற்பனை முனையம், 4ஜி சிம்கார்டுகள் வழங்கப்பட வேண்டும், விற்பனை முனையத்தில் 2 முறை விற்பனை பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட 21 அம்ச கோரிக்கைகளை, நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறார்கள்..
தனித்துறை வேண்டும்: அதேபோல, ரேஷன் கடைகளை பொதுவிநியோக திட்டத்தின் ஒரே துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும், பொது விநியோக திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலமாக வழங்க வேண்டும் என்றும் இவர்களது கோரிக்கைகள் நீண்டு வருகின்றன.
இவைகளை வலியுறுத்தி பலமுறை போராட்டங்களையும், பல்வேறு மாவட்டங்களில் ரேஷன் ஊழியர்கள் முன்னெடுத்து வருகிறார்கள்.. எனினும், இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை. கடந்த செப்டம்பர் மாதமும் ரேஷன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
ரேஷன் கடைகள்: இப்போது 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மீண்டும் ஸ்டிரைக் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்திருக்கிறார்கள்.. ரேஷன் கடைகளை நிர்வகிக்க தனித்துறையை நியமிக்க வேண்டும், பொருட்களை பொட்டலமாக தரவேண்டும் உள்ளிட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற உள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் நவம்பர் 13 முதல் 15ம் தேதி வரை அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படாது என்கிறார்கள்.. இந்த ஸ்டிரைக் அறிவிப்பு காரணமாக, ரேஷன் கடை ஊழியர்களுடன் தமிழக அரசின் கூட்டுறவுத் துறையும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளதாக தற்போது தகவல் வெளிவந்துள்ளது.
ரேஷன் கடைகள்: 2 நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, "பொது வினியோக திட்டத்துக்கு என தனித்துறை உருவாக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 35 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 7-ந்தேதி மாநிலம் முழுவதும் அனைத்து ரேஷன் கடைகளையும் பூட்டி விட்டு, ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்ய உள்ளோம். அன்று மாவட்ட தலைமையிடங்களில் மறியல் போராட்டம் நடத்த உள்ளோம்" என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications