ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ரேஷனில் நாளை முதல் தக்காளி விற்பனை.. தமிழக அரசு அதிரடி
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் தமிழகத்தின் ரேஷன் கடைகளில், தக்காளி வழங்கப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதால், பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.. தக்காளியின் வரத்து அதிகரிப்பால், அதன் விலை ரூ 60 அதிகரித்து, பிறகு, ரூ 100 முதல் ரூ 150 வரை விற்பனை செய்யப்படுகிறது.
தக்காளியை யாரும் பதுக்கி வைக்கக் கூடாது என உத்தரவும் போடப்பட்டுள்ளது. எனினும், தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. சென்னையில் கடந்தவாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்பனையானது..

கூட்டுறவு துறை: ஆனால், தமிழ்நாடு அரசின் கூட்டுறவு துறையின் கீழ் இயங்கும் பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.68-க்கு விற்கப்பட்டது.. வெளிசந்தைகளிலும் தக்காளி விலை குறைந்து ஒரு கிலோ ரூ.68-க்கு விற்பனையானது. பிறகு, பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் கிலோ ரூ.60 ஆனது.
தாறுமாறு விலை: தக்காளி விலை உடனடியாக இறங்குமுகத்தில் சென்றதால் மக்கள் ஆறுதல் அடைந்தனர்.. எனினும், தக்காளி விலை உச்சத்துக்கு சென்றுவிட்டது. அதாவது ஒரு கிலோ தக்காளி ரூ.120-க்கு விற்பனையாகி வருகிறது.. இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியிலும், அதிருப்தியிலும் உள்ளனர்..
இந்நிலையில்தான், ரேஷன் கடைகளில் குறைந்த விலைக்கு அதனை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் பெரிய கருப்பன் சமீபத்தில் அறிவித்திருந்தார். தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்வது தொடர்பாக சென்னை தலைமை செயலகத்தில் அமைச்சர் பெரிய கருப்பன் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
மிகுந்த எதிர்பார்ப்பு: இந்த கூட்டத்தில் எடுக்கப்படும் ஆலோசனைகளின் அடிப்படையில், ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை எப்போது தொடங்கும், ஒரு கிலோ எவ்வளவுக்கு விற்பனை செய்யப்படும், ஒரு குடும்ப அட்டைதாரருக்கு எத்தனை கிலோ வழங்கப்படும் போன்ற அறிவிப்புகள் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே, அமைச்சர் இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தி முடித்துள்ளார்.
கூட்டம்: அதன்படி இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில், சென்னையில் நாளை முதல் 82 நியாய விலை கடைகளில் தக்காளி விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. இதுகுறித்து அமைச்சர் பெரியகருப்பன் கூறும்போது, முதல்கட்டமாக சென்னையில் 3 பகுதிகளில் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும் என்றும், வடசென்னையில் 32, மத்திய சென்னை, தென்சென்னையில் தலா 25 என 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், விலையை கட்டுபடுத்த பண்ணைப் பசுமைக் கடைகளை போல ரேஷன் கடைகளிலும் கிலோ ரூ.60-க்கு தக்காளி விற்கப்படும். முதற்கட்டமாக சென்னையில் 82 ரேஷன் கடைகளில் நாளை முதல் தக்காளி விற்பனை செய்யப்படும். வடசென்னையில் 25 ரேஷன் கடைகள், தென்சென்னையில் 35 ரேஷன் கடைகள் மற்றும் மத்திய சென்னையில் 22 என பிரித்து சென்னை ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படும்.
மகிழ்ச்சி: சென்னையை தொடர்ந்து பிற மாவட்டங்களிலும் இந்த திட்டத்தை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நாளை முதல் மொத்தமாக 111 கடைகளில் குறைந்தது 50 முதல் 60 ரூபாய்க்கு தக்காளி விற்பனை செய்யப்படும் என்றார். இந்த அறிவிப்பானது, பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications