அரிசி அட்டைதாரர்களுக்கு நிம்மதி.. ஆக்ஷனில் கூட்டுறவுத்துறை ஆபிசர்ஸ்.. ரேஷன் கடைகளுக்கு போன உத்தரவு
சென்னை: வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், தமிழக ரேஷன் கடைகளுக்கு முக்கிய அறிவிப்புகள் பறந்துள்ளன.. என்ன நடந்தது?
வடகிழக்கு பருவமழை விரைவில் தொடங்க போகிறது.. எனவே, இதற்காக எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு முழுமூச்சாக இறங்கி விட்டது. சென்னை மாநகராட்சியோ, கடந்த மாதமே இந்த அதிரடியை கையில் எடுத்துவிட்டது.

அதேபோல, தென்மேற்கு பருவமழை குறைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது.. இந்த அபாயத்தை போக்கவும் தமிழக அரசு தயாராகி வருகிறது.
விவசாயம்: இந்த வருடம் தென்மேற்கு பருவமழை, தமிழகம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களிலுமே குறைந்துவிட்டது.. இந்த மழைபொழிவுதான், விவசாயத்துக்கு அடிப்படையானது.. ஆனால் மழை குறைவால், பாசனம் மட்டுமின்றி குடிநீர் தேவையை சமாளிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.. இப்போதே, நிறைய மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு தலைதூக்க துவங்கிவிட்டது.. வடகிழக்கு பருவமழை ஏமாற்றினால் நிலைமை இன்னும் மோசமாகும்.
குடிநீர் தட்டுப்பாடு: அதனால்தான், குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பது குறித்து நகராட்சி நிர்வாகத்துறையும் முன்முயற்சிகளை எடுத்து வருகிறது. பருவமழையை எதிர்கொள்ள இப்படி நாலாபக்கமும் அரசு துறைகள் இயங்கிவரும்நிலையில், கூட்டுறவுத்துறையும் இதில் நுழைந்துள்ளது.. மழையின்போது ரேஷன் கடைகளில் உணவு தானியங்கள் மூட்டைகள் நனைந்து, வீணாகுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு, கூட்டுறவு மற்றும் உணவு துறை உத்தரவிட்டுள்ளதாம்..
காரணம், தமிழக ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு வழங்க வேண்டிய அரிசி, கோதுமை, சர்க்கரை, துவரம் பருப்பு, பாமாயில் ஆகியவை இருப்பு வைக்கப்பட்டுள்ளன. பல கடைகள், வாடகை கட்டிடங்களில் செயல்பட்டும் வருகின்றன..
இடவசதி: இங்கு போதிய இட வசதி இல்லாததால், கடைக்கு வாசலிலும் தானிய மூட்டைகள் வைக்கப்பட்டுள்ளன. இப்படிப்பட்ட சூழலில், வட கிழக்கு பருவ மழை சீசன் துவங்குகிறது. எனவே, மழை நீர் தேங்க வாய்ப்புள்ள தாழ்வான இடங்களில் உள்ள ரேஷன் கடைகள் என்னென்ன என்பதை கண்டறிந்து, அவற்றில் உள்ள பொருட்களை அருகிலுள்ள பாதுகாப்பான இடங்களில் வைக்க முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது..!!
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications