குடும்ப அட்டைதாரர்களுக்கு மேஜர் செய்தி.. தமிழ்நாடு ரேஷன் கடை ஊழியர்கள் அதிரடி அறிவிப்பு.. என்னவாம்?
சென்னை: தமிழகத்தில் ரேஷன் கடை ஊழியர்கள் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.. இது ரேஷன் அட்டைதாரர்களுக்கு கலக்கத்தை தந்து வருகிறது.. என்னவாம்?
பொது வினியோக திட்டத்திற்கென தனித்துறையை உருவாக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலமாக வழங்கப்பட வேண்டும், தமிழக அரசு, தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

விற்பனை முனையம்: அத்துடன், அத்தியாவசிய பொருட்கள் அளவு, விலை மற்றும் கூடுதல் தொகையுடன் கூடிய ரசீது வழங்கும் வகையில் புதிய 4ஜி விற்பனை முனையம், 4ஜி சிம்கார்டுகள் வழங்கப்பட வேண்டும், விற்பனை முனையத்தில் 2 முறை விற்பனை பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட 21 அம்ச கோரிக்கைகளை நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறார்கள்..
அதுமட்டுமல்லாமல், கூட்டுறவுத்துறை ரேஷன் கடைகள், வருவாய்த்துறை நிர்வாகத்திலும், டிஎன்சிஎஸ் நிர்வாகத்திலும், கூட்டுறவு துறை நிர்வாகத்திலும் சேர்ந்து பார்க்கப்படுகிறது.. அவ்வாறு பார்ப்பதால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன என்பதை தமிழக அரசு கவனத்துக்கும் கொண்டு சென்று, ரேஷன் கடைகளை பொதுவிநியோக திட்டத்தின் ஒரே துறை நிர்வாகத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகின்றன.
பொட்டலங்கள்: அதாவது பொது விநியோக திட்டத்துக்கென தனித்துறையை உருவாக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலமாக வழங்க வேண்டும், என்பதே அந்த 21 அம்ச கோரிக்கைகளின் முக்கிய வலியுறுத்தல்கள் ஆகும்..
இந்த கோரிக்கைகளை முன்னிறுத்தி பலமுறை போராட்டங்களையும், மாவட்டங்களில் முன்னெடுத்து வருகிறார்கள்.. எனினும், இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படவில்லை.. அந்தவகையில், தமிழ்நாடு அரசு நியாய விலை கடை ஊழியர்கள் 21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை மறுநாள் அதாவது ஜுன் 14ம் தேதி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.. இது குறித்து தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் மாவட்ட ஆலோசனை கூட்டம் கள்ளக்குறிச்சியில் நடைபெற்றது.
ஸ்டிரைக்: அதில் இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும், ஜூன் 14 முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்வது என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.. இந்த கூட்டத்தில் செயலாளர் பெருமாள், பொருளாளர் தன்ராஜ், துணை தலைவர்கள் வேல்முருகன், பரசுராமன் ஆகியோர் முன்னிலை வகிக்க, மாவட்ட தலைவர் மாயவன் தலைமை தாங்கினார்.. திடீரென தமிழகம் முழுவதும் ரேஷன் ஊழியர்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளது, பரபரப்பை கிளப்பிவிட்டு வருகிறது.
-
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
4 ஆயிரம் உதவி பேராசிரியர் பணியிடங்கள்! 6 மாதத்திற்குள் தேர்வு நடத்த வேண்டும்.. சென்னை ஐகோர்ட் அதிரடி -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
திருச்செந்தூர் முருகன் கோயிலில் அர்ச்சகருக்கு தடை மட்டும் விதிக்கப்பட்டது ஏன்? அமைச்சர் விளக்கம்! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா












Click it and Unblock the Notifications