நாடாளுமன்றத்தில் "ரவீந்திரநாத்துக்கு டங்க் ஸ்லிப்பாகிடுச்சு" - முத்தலாக் குறித்து அன்வர் ராஜா
சென்னை: அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமாரின் முத்தலாக் மசோதா குறித்த பேச்சு நாடாளுமன்றத்தில டங் ஸ்லீப் ஆகிவிட்டது போன்றது என முன்னாள் எம்பி அன்வர் ராஜா தெரிவித்துள்ளார.
முத்தலாக் மசோதாவை கடந்த 23ம் ஆம் தேதி நாடாளுமன்றத்தின் லோக்சபா அவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது.
அப்போது அதிமுகவின் சார்பில் உள்ள ஒரே ஒரு எம்பியான ரவீந்திரநாத் எம்பி முத்தலாக் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், முத்தலாக் மசோதா பெண்களின் உரிமையை பாதுகாக்கும் என்றார்.

அன்வர் ராஜா எதிர்ப்பு
முன்னதாக இதே மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட போது அதிமுக எம்பி அன்வர் ராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசினார். அதிமுகவின் நிலைப்பாடும் முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்பு என்பது தான் என இருந்தது.

ரவீந்திரநாத்துக்கு எதிர்ப்பு
துணை முதல்வர் ஒபிஎஸ் மகனாகிய ரவீந்திரநாத் முத்தலாக் மசோதா குறித்து அதிமுகவின் நிலைப்பாடு குறித்து தெரியாமல் ஆதரவு தெரிவித்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

ரவீந்திரநாத் குமாருக்கு தெரியல
இது தொடர்பாக தனியார் ஊடகத்துக்கு பேட்டி அளித்த அதிமுக முன்னாள் எம்பி அன்வர் ராஜா, முத்தலாக் மசோதா குறித்த அதிமுகவின் நிலைப்பாடு ரவீந்திரநாத் குமாருக்கு சரியாக போய் சேரவில்லை. அதனால் அவர் அந்த மசோதாவை ஆதரித்துவிட்டார். அவரது பேச்சு டங்க் ஸ்லிப் ஆனது போன்றது.

அதிமுகவின் நிலைப்பாடு
முதலில் தவறாக பேசிவிட்டாலும் இப்போது கேட்டால் முத்தலாக் குறித்து சரியாக பேசுவார் ரவீந்திரநாத். மசோதாக்களை அவசர அவசரமாக நிறைவேற்றுவதால் அது குறித்து சரியாக படிக்க முடியவில்லை.முத்தலாக் மசோதாவை எதிர்ப்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்றார்.

ஆய்வுகுழுவுக்கு அனுப்ப கோரிக்கை
இதனிடையே ராஜ்யசபாவில் முத்தலாக் மசோதாவுக்கு அதிமுக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், நவநீதிகிருஷ்ணன் ஆகியோர் இந்த மசோதா சட்டவிரோதமானது, தன்னிச்சையானது. இதைநிறைவேற்ற மத்திய அரசுக்கு உரிமை இல்லை என்று கூறியதோடு ஆய்வுகுழுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தினர். எனினும் பாஜகவுக்கு உதவும் வகையில் முத்தலாக் மசோதா வாக்கெடுப்பில் பங்கேற்காமல் அதிமுகவினர் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
-
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம் -
எடப்பாடி பழிவாங்குவார்.. ஜூட் விட ரெடியான விஜயபாஸ்கர்.. நேரம் எடுத்துக்கொள்ளும் சிவி சண்முகம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
29 பேருக்கும் மீண்டும் பதவி கிடையாது.. மறைமுகமாக சொன்ன எடப்பாடி பழனிசாமி.. அதிமுகவில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications