விவாகரத்து வழக்கில்.. மனைவி எவ்வளவு ஜீவனாம்சம் கேட்டாலும்.. கணவன் தர வேண்டுமா? சட்டம் சொல்வது என்ன?
சென்னை: நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி ரவி இடையிலான விவாகரத்து வழக்கு பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இது சட்ட ரீதியாக பல சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ள நிலையில் அதற்கான விளக்கங்கள் இங்கே கொடுக்கப்பட்டு உள்ளன.
நடிகர் ரவி மோகன் - ஆர்த்தி விவாகரத்து வழக்கில், மாதம் ரூ. 40 லட்சம் ஜீவனாம்சம் கோரியுள்ளார் ஆர்த்தி. இரு மைனர் குழந்தைகளையும் ரவி மோகனே பராமரிக்க அவருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார். இரண்டு பேருமே விவாகரத்து வழக்கு பதிவு செய்துள்ள நிலையில் மாதம் 40 லட்சம் ரூபாய் வரை கேட்டுள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் விவாகரத்து வழக்கில்.. மனைவி எவ்வளவு ஜீவனாம்சம் கேட்டாலும்.. கணவன் தர வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு நமது சட்டம் என்ன சொல்கிறது.. உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ள விதிகள் என்ன சொல்கிறது என்று இங்கே பார்க்கலாம்.
ஜீவனாம்சம் தொகை எப்படி நிர்ணயிக்கப்படும்?
மனைவிகள் கேட்கும் ஜீவனாம்சத் தொகையை நிர்ணயிக்க உச்ச நீதிமன்றம் 8 அம்ச பார்முலாவை வகுத்துள்ளது. நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் பிரசன்னா பி வரலே ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்ற பெஞ்ச், இந்து தம்பதிகள் சம்பந்தப்பட்ட விவாகரத்து வழக்கில் இறுதி ஜீவனாம்சத் தொகையை தீர்மானிப்பதற்கான வழிகாட்டுதல்களை சமீபத்தில் வகுத்தது.

ஜீவனாம்சம் குறித்து முடிவெடுக்கும் போது கருத்தில் கொள்ள வேண்டிய 8 காரணிகளை உச்ச நீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது:
இரண்டு தரப்பின் பொருளாதார நிலை, சமூக மற்றும் நிதி நிலைமை
மனைவி மற்றும் சார்ந்திருக்கும் குழந்தைகளின் தேவைகள் என்னென்ன.
இரண்டு தரப்பின் தனிப்பட்ட தகுதிகள் மற்றும் அவர்கள் பார்க்கும் வேலை.
விண்ணப்பதாரரின் வருமானம் அல்லது சொத்துக்கள்.
திருமண வீட்டில் மனைவி அனுபவிக்கும் வாழ்க்கைத் தரம்.
குடும்பப் பொறுப்புகளுக்காக ஆகும் செலவு
வேலை செய்யாத மனைவிக்கு ஆகும் தினசரி செலவுகள்.
கணவரின் நிதித் திறன், அவரது வருமானம், பராமரிப்புக் கடமைகள் மற்றும் பொறுப்புகள் ஆகியவற்றை அடிப்படையாக் வைத்து ஜீவனாம்சம் குறித்து முடிவெடுக்கலாம் என்று கூறப்படுகிறது.
இன்னொரு உத்தரவு
ஆனால் இன்னொரு உச்ச நீதிமன்ற வழக்கில் நீதிபதிகள் சூர்யா காந்த் - உஜ்ஜவல் அமர்வு ஜீவனாம்சம் குறித்து முக்கிய உத்தரவை போட்டுள்ளது.
கணவரின் சொத்து எவ்வளவு இருந்தாலும் ஜீவனாம்சம் கொடுத்தே தீர வேண்டும். ஒருவருக்கு கடன் இருக்கலாம்.. சொத்து பிரச்சனை இருக்கலாம்.. அவசர நிதி தேவை இருக்கலாம். ஆனால் அதெல்லாம் இருந்தாலும் பிரிந்து வாழும் மனைவி மற்றும் குழந்தைகளுக்கு செலுத்த வேண்டிய பராமரிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கணவன் வாங்கிய கடன் பிரச்னையை விட மனைவியின் பராமரிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். பராமரிப்பதற்கான உரிமை என்பது வாழ்வாதாரத்திற்கான உரிமையுடன் ஒத்துப்போகிறது. இந்த உரிமையானது நல்ல வாழ்க்கை மற்றும் கண்ணியமான வாழ்க்கையை வழங்கும். அரசியலமைப்புச் சட்டம் 21 இதைத்தான் கூறுகிறது.
கணவனுக்கு கடன் இருந்தாலும், பொருளாதார பிரச்சனைகள் இருந்தாலும்.. ஜீவனாம்சம் வழங்குவதை தடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications