Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நடிகர் ரவி மோகன் சொத்து முடக்கமா.. நீதிமன்றம் க்ரீன் சிக்னல்.. தயாரிப்பு நிறுவனம் குஷி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயம் ரவி தன் பெயரை ரவி மோகன் என்று மாற்றிவிட்டார். பெயர் மட்டும் இல்லாமல் அவரின் பர்சனல் வாழ்க்கையில் ஏராளமான பிரச்சனைகள் சூழ்ந்தன. மறுபக்கம் திரைத்துறையிலும் அவர் நெருக்கடிகளை சந்தித்து வருகிறார். பட நிறுவனத்திடம் ரூ. 6 கோடி பெற்று, படத்தில் நடிக்காத சம்பவம் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. நீதிமன்றம் உத்தரவிட்டும் ரவி தரப்பில் பணத்தை திருப்பிக் கொடுப்பதற்கான உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. இதனால் தயாரிப்பு நிறுவனத்தின் கோரிக்கைப்படி அவரின் சொத்துகளை முடக்க கோரிய மனுவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

பாபி டச் கோல்டு யுனிவர்சல் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில் நடிகர் ரவி மோகன் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிப்பதற்காக ரூ.6 கோடி முன் பணம் பெற்றிருந்தார். எனவே எங்களுக்கு அவர் அந்தப் பணத்தை திரும்பி கொடுக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர்.

Ravi Mohan Asset

அட்வான்ஸ் பஞ்சாயத்து

மேலும் ரவி மோகன் தரப்பில் பாபி தயாரிப்பு நிறுவனம் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தான் கால் ஷீட் வழங்கியும் படப்பிடிப்பை குறித்த நேரத்திற்குள் தொடங்கவில்லை. இதனால் தயாரிப்பு நிறுவனம் தனக்கு ரூ.9 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று கூறியிருந்தார். ஜெயம் ரவியும், தயாரிப்பு நிறுவனமும் மாறி மாறி தாக்கல் செய்த வழக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

நடிகர் ரவி மோகனை வைத்து, பாபி டச் கோர்டு யுனிவர்சல் நிறுவனம் ரூ.15 கோடி பட்ஜெட்டில் படம் தயாரிக்க திட்டமிட்டனர். இதற்காக அட்வான்ஸ், கால்ஷீட் கொடுக்கப்பட்டு ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்தப் படம் டேக் ஆஃப் ஆகவில்லை. இது ஒரு கட்டத்தில் தயாரிப்பு நிறுவனம் மற்றும் ரவிக்கு இடையேயான பிரச்சனையாக உருவெடுத்தது.

நீதிமன்றத்தில் வழக்கு

சமாதான உடன்படிக்கைக்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அதில் முன்னேற்றம் ஏற்படவில்லை. இந்த பிரச்சனை நீதிமன்றம் வரை சென்றது. இதனிடையே இழப்பீடு கேட்டு ரவி சார்பில் தாக்கல் செய்த வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், பாபி நிறுவனத்திடம் பெற்ற ரூ.6 கோடி பணத்தை ரவி வழங்க வேண்டும். இதற்கான உத்தரவாதத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

சொத்து முடக்கமா

4 வார காலத்திற்குள் ரவி இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றம் கூறியிருந்தது. அதன்படி ஆகஸ்ட் 20 ஆம் தேதியான இன்று கடைசி தேதியாகும். நீதிமன்ற உத்தரவுப்படி ரவி மோகன் உத்தரவாதம் தாக்கல் செய்யவில்லை. இந்நிலையில் ஜெயம் ரவியின் சொத்துகளை முடக்கம் செய்து தங்களது பணத்தை பெற்று தர வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இதை ஏற்று கொண்ட நீதிமன்றம், பாபி டச் கோர்டு யுனிவர்சல் தயாரிப்பு நிறுவனம் சார்பில், ஜெயம் ரவியின் சொத்தை முடக்கம் செய்வது தொடர்பாக மனுத்தாக்கல் செய்ய அனுமதி வழங்கியுள்ளது. இதனால் இந்த வழக்கு அடுத்த கட்டத்தை நோக்கி பயணிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நகர்வு ரவிக்கு பின்னடைவை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+