ஜனநாயகன்! "தம்பிகளை போக விட்டுருக்காரு, அண்ணன் சீக்கிரம் வருவார்"! பராசக்தி பார்க்க வந்த ரவிமோகன்
சென்னை: "தம்பிகளை போக விட்டுருக்காரு, அண்ணன் பின்னாடி சீக்கிரமா வந்துடுவார்" என பராசக்தி பார்க்க வந்த ரவி மோகனிடம், ஜனநாயகன் ரிலீஸ் குறித்த கேள்விக்கு அவ்வாறு பதிலளித்துள்ளார்.
பராசக்தி திரைப்படம் இன்று வெளியான நிலையில் தியேட்டரில் ரசிகர்களுடன் ரவி மோகன் படம் பார்த்தார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்த போது கூறுகையில், "எல்லா படங்களும் நல்லா வரணும்னு தான் நான் எப்பவுமே பிரார்த்தனை பண்ணுவேன்.
எல்லா படத்துலயும் உழைப்பு பயங்கரமா இருக்கு. ஒவ்வொரு டீம் தான் மாறுது, ஆனால் உழைப்பு அப்படியே தான் இருக்கு" என்றார்.

ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் எந்த அளவுக்கு இந்தத் தலைமுறைக்கு வந்துள்ளது என்ற கேள்விக்கு, "அது இனிமே தான் தெரியும்" என்று பதிலளித்தார். மேலும், படத்திற்கு எக்ஸ்ட்ராடினரியான ரெஸ்பான்ஸ் இருப்பதாகக் குறிப்பிட்டார். ஹிந்தியை எதிர்க்கிறவங்க கிடையாது, திமிரை எதிர்க்கிறவங்க என்ற வசனம் படத்தில் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சினிமாவுக்கு லாங்குவேஜ் கிடையாது, எமோஷன் தான் முக்கியம். சினிமா ஒரு எமோஷன். அந்த எமோஷன் ரொம்ப அழகா வொர்க் அவுட் ஆயிருக்குன்னு நம்புறோம். கைதட்டல்கள் கேட்கும் போது எல்லா எமோஷனும் வொர்க் அவுட் ஆயிருக்குன்னு நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு என்றும் அவர் கூறினார்.
ஜனநாயகன் படம் தாமதமானது குறித்து நிருபர்கள் கேட்ட கேள்விக்கு ரவி மோகன் கூறியிருப்பதாவது: "தம்பிகளை போக விட்டுருக்காரு, அண்ணன் பின்னாடி சீக்கிரமா வந்துடுவார்" என ரவி மோகன் தெரிவித்திருந்தார்.
சுதா கொங்குரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, நடிகை ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடிப்பில் பராசக்தி படம் இன்று வெளியாகியுள்ளது. நேற்று வரை இந்த படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில் மதியத்திற்கு பிறகு யு/ஏ சான்று கிடைத்துள்ளது.
இன்று பராசக்தி வெளியான நிலையில் சென்னையில் நடிகர் சிவகார்த்திகேயன், அவரது குடும்பத்தினர், ரவி மோகன், அதர்வா, அஜித் மனைவி ஷாலினி உள்ளிட்டோர் கண்டு களித்தனர்.
இந்த படம் மொழி போர் குறித்து பேசும் படமாக அமைந்துள்ளது. இதில் அறிஞர் அண்ணாவின் வசனங்கள் தணிக்கை குழுவால் நீக்கப்பட்டுள்ளன. சுமார் 52 வினாடிகளுக்கு படத்தில் கத்தரி போடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த படம் இன்று வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. படம் பார்த்த இளைஞர்கள் பெரும்பாலும் படம் நன்றாக இருப்பதாகவே தெரிவித்துள்ளனர்.
படத்தை சிவகார்த்திகேயன் கூறுகையில் அமரனை விட நன்றாக இருப்பதாக மதுரையில் இருந்து ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். பராசக்தி படத்தில் சில வார்த்தைகள் தணிக்கை குழுவினருக்கு தவறாக தெரிந்திருக்கலாம். அவற்றை நீக்கியுள்ளனர் என தெரிவித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications