ஐ.ஜே.கே. தனித்துப் போட்டி! எங்கள் பக்கம் தான் மக்கள் அலை! சொல்கிறார் ரவி பச்சமுத்து!
சென்னை: தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் இந்திய ஜனநாயக கட்சி தனித்து போட்டியிடும் என அறிவித்திருக்கிறார் அக்கட்சியின் செயல் தலைவர் ரவி பச்சமுத்து.
மேலும், மக்கள் மத்தியில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு அமைதியான ஆதரவு அலை இருப்பதாக நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் கட்சி அலுவலகத்துக்கு வருகை புரிந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறியிருக்கிறார்.

தோல்வியை கண்டு
இந்திய ஜனநாயக கட்சி நாகரீகமான முறையிலும், நேர்மையாகவும் அரசியல் செய்து வருவதாகவும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்க கூடிய வகையில் அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் ரவி பச்சமுத்து தெரிவித்திருக்கிறார். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் வழங்க மாட்டோம் எனக் கூறிய அவர் தோல்விகளை கண்டு துவளமாட்டோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குறை சொல்லமாட்டோம்
மக்கள் தங்களை ஏற்கும் வரை தொடர்ந்து அனைத்து தேர்தல்களிலும் போட்டியிடுவோம் எனக் கூறிய அவர், யாரையும் குறைசொல்லியோ மற்றவர்களை விமர்சித்தோ வாக்குகள் கேட்க மாட்டோம் என ரவி பச்சமுத்து கூறியிருக்கிறார். பிரச்சாரத்தின் போது யாருடைய மனதும் புண்படாதவாறு ஐ.ஜே.கே. வேட்பாளர்கள் ஓட்டுக்கேட்பார்கள் எனக் கூறியிருக்கிறார்.

50% இடங்கள்
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 50% இடங்களை பெண்களுக்கு தர இருப்பதாகவும் மக்கள் மத்தியில் இந்திய ஜனநாயகக் கட்சிக்கு ஒரு அமைதியான ஆதரவு அலை இருப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார் ரவி பச்சமுத்து. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்டு ஐஜேகே தலைவர் பச்சமுத்து நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நேரம்
தேர்தல் நேரத்தின் போது மட்டும் இவ்வாறு பேட்டிகள் கொடுப்பதும் மற்ற நாட்களில் பல்கலைக்கழக நிர்வாகம், மருத்துவமனை நிர்வாகம் என தொழில்களில் கவனம் செலுத்துவதும் ஐ.ஜே.கே. தலைமையின் வழக்கம் என்பது கவனிக்கத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications