கொல்கத்தாவில் மரண ஓலம்.. நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படவே கூடாது..குரல் கொடுத்த ரவிச்சந்திரன் அஸ்வின்
சென்னை: கொல்கத்தா ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவர் கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில், கொல்லப்பட்ட மருத்துவரின் மரணத்திற்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படவே கூடாது என இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியுள்ளார்.
மேற்குவங்க மாநிலம் வடக்கு கொல்கத்தாவில் ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த முதுகலை பெண் பயிற்சி மருத்துவக் கல்லூரி மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்னர் (ஆகஸ்ட் 8ஆம் தேதி) மிகக் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

உடற்கூறு ஆய்வில் அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரிய வந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். நாடு முழுவதும் அதிர்வலைகளை இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை சம்பவம் ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த நிலையில் மாணவி கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதை அடுத்து அவர்கள் இன்று விசாரணையை தொடங்கி இருக்கின்றனர். இந்த நிலையில் அந்த மாணவி கொடூரமான தாக்குதலை எதிர்கொண்டு மரணத்தை சந்தித்திருக்கிறார் எனவும், அவரது உடலில் இருந்து 150 மில்லி கிராம் விந்து இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதனால் நிறைய பேர் அவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்திருக்கலாம் என புகார் எழுந்துள்ளது. இந்நிலையில் மருத்துவ மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு இந்தியா முழுவதும் மருத்துவர்கள் போராட்டத்திக் குதித்துள்ளனர். மேற்கு வங்கத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என மருத்துவர் மருத்துவ பணியாளர்களும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போராடி வருகின்றனர்.
இதனால் மேற்கு வங்கத்தின் மருத்துவ துறை தேவையானது முற்றிலும் முடங்கி இருக்கிறது. இந்நிலையில் கொல்கத்தா சம்பவத்தை கண்டித்து இன்று நாடு முழுவதும் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தப் போவதாக மருத்துவர்கள் கூறினர். காலை ஆறு மணி முதல் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் எனவும், அவசர சிகிச்சை மட்டுமே வழங்கப்படும் என தெரிவித்து போராட்டத்தை அறிவித்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ சங்கங்களும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை, ராஜீவ் காந்தி மருத்துவமனை உள்ளிட்ட பல மருத்துவமனைகளிலும், கோவை, மதுரை, நெல்லை, திண்டுக்கல் உள்ளிட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் போராட்டத்தில் குதித்து இருக்கின்றனர். இதனால் வெளி நோயாளிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றனர்
இந்த நிலையில் மருத்துவ மாணவி மரணத்திற்கு நீதி கிடைப்பதில் தாமதம் கூடாது எனக் கூறியிருக்கிறார் இந்திய அணியின் மூத்த வீரரும் சுழற் பந்துவீச்சாளருமான ரவிச்சந்திரன் அஸ்வின். சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின்," கொல்கத்தாவில் மருத்துவ பயிற்சி மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் கண்டிக்கத்தக்கது. அந்த இளம் பெண்ணிற்காக இந்தியா முழுவதும் மருத்துவர்கள் ஒன்றிணைந்து போராடுவது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நீதி கிடைப்பதில் தாமதம் ஆகலாம்.. ஆனால் கிடைக்காமலேயே போய் விடக்கூடாது என சொல்வார்கள்.. ஆனால் அதனை தற்போது நாம் மாற்றி அமைக்க வேண்டும். அது குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும். கொல்கத்தாவில் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட அந்த பெண் மருத்துவருக்கு நீதி கிடைப்பதில் தாமதம் ஏற்படவே கூடாது" என தெரிவித்தார்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications