பாஜக எதிர்ப்பில் தெளிவாக உள்ளார் ஸ்டாலின்! பாஜக பிளான் என்ன இருக்கும் தெரியுமா - ரவீந்திரன் துரைசாமி
சென்னை: பிரபல அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில் அவர் பல்வேறு முக்கிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டு உள்ளார்.
தமிழக அரசியலில் தொடர்ந்து பல்வேறு பரபரப்புகள் அரங்கேறியே வருகிறது. இந்தச் சூழலில் இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழுக்கு அரசில் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி பிரத்தியேக பேட்டி அளித்தார்.
அதில் அவர் பல்வேறு விவகாரங்கள் குறித்து விரிவான கருத்தைத் தெரிவித்து உள்ளார். திமுக, அதிமுக, பாஜக கட்சிகளின் அடுத்தகட்ட திட்டம் குறித்தும் அவர் விளக்கி உள்ளார்.

முதல்வர் பேச்சு
ஒன் இந்தியா தமிழுக்கு ரவீந்திரன் துரைசாமி அளித்த பிரத்தியேக பேட்டியில் பேட்டியில், "முதல்வரின் பேச்சைப் பார்த்தால் ஒன்று புரிந்து இருக்கும். தனக்கும் அமைச்சர்களின் பேச்சுகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதையே முதல்வர் தனது பேச்சில் குறிப்பிட்டுள்ளார். இன்னும் இதே போன்ற நடவடிக்கை தொடர்ந்தால் அடுத்த கட்டமாக வேறு விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் ஸ்டாலின் மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். இப்படிப் பேசுபவர்கள் அனைவருமே கடந்த காலங்களில் ஸ்டாலினின் வளர்ச்சிக்கு உதவியவர்கள் தான்.. மேலும் அவர்கள் கட்சியிலும் மூத்த தலைவர்களாக உள்ளனர். எனவே அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து விட முடியாது. அனைவரையும் நான் கண்காணித்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்று மெசேஜ் கொடுப்பது போல அவரது பேச்சு அமைந்து உள்ளது.

ஸ்டாலின் பாணி
பிரச்சினைகளைக் கையாள்வது ஜெயலலிதாவுக்கு ஒரு பாணி இருந்தது.. கருணாநிதிக்கு ஒரு பாணி இருந்தது.. இதில் கருணாநிதியின் பாணியைப் பின்பற்றுபவர் அல்ல ஸ்டாலின். அவர் மெல்ல ஜெயலலிதா பாணியை நோக்கி நகரக் கூடியவர் தான். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்தால் தனது ஆளுமைக்கும் பிரச்சினை வரும், அரசியல் ரீதியாகவும் நஷ்டத்தைக் கொடுக்கும் என்பதை உணர்ந்த அதை எச்சரிக்கும் வகையிலேயே ஸ்டாலின் படி பேசி உள்ளார். மேடைகளில் முதல்வர் பேசிக் கொண்டிருந்தபோது அமைச்சர்கள் நடந்துகொண்டதும் சர்ச்சையானது. இது போன்ற நடவடிக்கை தொடர்ந்தாலும் ஸ்டாலினின் இமேஜ்-க்கு பாதிப்பை உருவாக்கும்.

அமைச்சர்கள் பேச்சு
இடைநிலை சாதி அமைச்சர்களின் இந்த ஆணவ பேச்சு என்பது பட்டியல் இன சாதியைச் சேர்ந்த மக்களின் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது உண்மைதான். ஆனால் இதை ஸ்டாலின் மீதான கோபமாக எடுத்துக் கொள்ள முடியாது. இது இடைநிலை சாதிகள் மீது உள்ள கோபமாகவே பார்க்க வேண்டும். இதை ஸ்டாலின் உணர்ந்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் வாக்கு வங்கி ரீதியாக திமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தப்படும். அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் வாக்கு வங்கியில் பாதிப்பு ஏற்பட்டதற்கான காரணமே இதுதான். நாளை இதே நிலைமை திமுக விற்கும் ஏற்படலாம். மாவட்டச் செயலாளர்கள் நியமனத்திலும் எந்த ஒரு பிரச்சனையும் வராத வகையில் ஸ்டாலின் மாவட்டச் செயலாளர்கள் நியமித்துள்ளார்.

கனிமொழி
தமிழக அரசியலில் முக்கிய பெண் ஆளுமையாக ஜெயலலிதா இருந்தார். அதிமுகவின் வாக்கு வாங்கி 30 சதவீதத்தில் இருந்த 40 சதவீதமாக உயர அதுவே முக்கிய காரணம். இளம் பெண்களின் வாக்குகள் அப்படியே அதிமுகவுக்குச் செல்ல சென்றது. இந்த சூழ்நிலையில் திமுகவிற்குப் பெண்கள் தலைவர்கள் என்பது வெற்றிடமாக இருந்தது. இதன் காரணமாகவே கனிமொழியை அரசியலுக்கு அழைத்து வந்தார் கருணாநிதி. கனிமொழி செயல்பாடுகள், கட்சிக்குள்ளேயே அவருக்கு ஒரு ஆதரவு வட்டத்தை உருவாக்கி உள்ளது. கருணாநிதிக்கு பிளஸ்-ஆக பல நேரங்களில் இருந்துள்ளார். கருணாநிதிக்கு எந்த அளவுக்குக் கனிமொழி பிளஸ் ஆக இருந்தாரோ அதே அளவுக்கு இப்போது ஸ்டாலினுக்கும் இருக்கிறார். அவர் புறக்கணிப்பதாக வெளியாகும் தகவலில் உண்மை இருப்பதாகத் தெரியவில்லை. கனிமொழிக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆ ராசா
பாஜக எதிர்ப்பு என்பது திமுகவிற்கு லாபம் தான். இதன் அத்தனை வாக்குகளும் திமுகவுக்கே வரவேண்டும் என்பது ஸ்டாலினின் விருப்பம். ஆனால் ஆ ராசா செய்வதற்கும் ஸ்டாலின் செய்வதற்கும் வேறுபாடுகள் உள்ளன. ஆ ராசா சனாதன தர்மத்தை எதிர்க்கிறார். கடந்த காலங்களிலும் திமுக இதை நிலைப்பாட்டைத் தான் கொண்டு உள்ளது. இருப்பினும், ஆ ராசா செய்வது திமுகவுக்குப் பாதிப்பையே ஏற்படுத்துகிறது. இதை ஸ்டாலினும் உணர்ந்தே இருக்கிறார். அதேநேரம் ஆ ராசாவை முழுமையாகப் புறக்கணித்தால், நாம் தமிழர் போன்ற பாஜகவை வலுவாக எதிர்க்கும் கட்சிகள் ஆ ராசா சொல்லும் அதே கருத்தைச் சொல்லி அரசியல் செய்து விடுவார்கள்.

பாஜக எதிர்ப்பில் தெளிவாக உள்ளார்
ஸ்டாலின் இந்த விஷயத்தில் சரியாக உள்ளார். பாஜக எதிர்ப்பு என்பதுடன் நிறுத்திக் கொள்கிறார். கொள்கை என்பது வேறு மக்கள் உணர்வு என்பது வேறு. இதை உணர்ந்து தான் அண்ணா கூட "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்றார். திக கொள்கைகள் திமுகவுக்கு செட் ஆகாது. அதை ஸ்டாலின் உணர்ந்தே இருக்கிறார். கடந்த 2021 தேர்தல் சமயத்திலும் கூட ஆ ராசா பேசியது சர்ச்சையானது. அது திமுகவுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாகவே நான் கருதுகிறேன். ஸ்டாலின் இந்த விஷயத்தை இதுவரை சரியாகக் கையாள்கிறார் என்றே உணர்கிறேன். பாஜக எதிர்ப்பு என்பது வேறு இந்து மத எதிர்ப்பு என்பது வேறு என்பதில் ஸ்டாலின் தெளிவாக உள்ளார். ஆனால், ஆ ராசா செயல்பாடுகள் திமுகவின் வாக்கு வங்கியைப் பாதிக்கும் ஆபத்து உள்ளது. இந்து மதம் என்பது இன்னும் தமிழ்நாட்டில் வாக்கு வங்கியாக மாறவில்லை என்றாலும் கூட அது தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து இருக்கிறது. இது இதை மக்களும் கவனித்துத் தான் வருகிறார்கள்.

எடப்பாடி
கட்சி ரீதியாக பாஜக தமிழ்நாட்டில் பலவீனமாக உள்ளது. ஆனால் மோடி எந்த இடத்திலும் தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டார். இதன் காரணமாகவே அவர், பல்வேறு விதங்களில் வாக்குகளைப் பெற முயன்று வருகிறது. தமிழகத்தில் மோடி இமேஜ்ஜை உயர்த்தவும் பல்வேறு நடவடிக்கைகள் அவர்கள் எடுத்தே வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் திமுக அணியுடன் ஒப்பிடுகையில் பாஜக அணி பலவீனமாகவே உள்ளது. அடுத்த 1.5 ஆண்டுகளில் இதை அவர்கள் சரி செய்தால் மட்டுமே வெற்றி பெற முடியும். ஆனால், எடப்பாடி 2024 பற்றிக் கவலைப்படவில்லை.. அவரது குறி 2026 தான். இதுவும் பாஜக அணியைப் பாதித்து உள்ளது. இதைச் சரி செய்வதும் பாஜகவின் முக்கிய வேலை

பாஜக
பாஜகவை வலுவாக எதிர்த்தால் வாக்கு கிடைக்கும் என்பதே ஸ்டாலின் உணர்ந்து இருக்கிறார். அதை வைத்தே அவர் அரசியல் செய்து வருகிறார். அதேநேரம் பாஜக எதிர்ப்பு வாக்குகள் சிதற வேண்டும் என்று பாஜக விரும்புகிறது. இதனால் தான் 2014இல் அந்தக் கூட்டணியால் சில இடங்களைப் பெற முடிந்தது. எதிர்ப்பு வாக்கைப் பிரிக்க முடியவில்லை என்றால் அது பாஜகவுக்குத் தோல்வியில் முடியும். பாஜகவைப் பொறுத்தவரை இப்போது என்ன திட்டம் வைத்துள்ளார்கள் என்று தெரியவில்லை. ஆனால் பாஜக எதிர்ப்பு ஓட்டு சிதறுவது அவர்களுக்கு நல்லதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

அடுத்து என்ன
2019 முதலே தமிழ்நாட்டில் ஸ்டாலின் vs மற்றவர்கள் என்று தான் உள்ளது. அந்த மற்றவர்களில் எடப்பாடி பழனிசாமி முதன்மையில் உள்ளார். இப்போதைய சூழ்நிலையில் ஸ்டாலின் vs எடப்பாடி என்று இல்லை என்பதே உண்மை. கருணாநிதி vs ஜெயலலிதா என்று இருந்தது போல இப்போது ஸ்டாலின் vs எடப்பாடி இல்லை. இதன் காரணமாகவே கடந்த காலங்களில் எடப்பாடிக்கு டெல்லி அளித்தது போல முழு ஆதரவை இப்போது அவர்கள் தருவதில்லை. பாஜக எதிர்ப்பு வாக்குகளைப் பிரிப்பதே அவர்கள் நோக்கம்" என்று அவர் தெரிவித்தார்.
-
போலீசில் சிக்கிய நடிகை ஜூலி.. மெரினாவில் திமுகவுக்கு ஆதரவு - தவெகவிற்கு எதிர்ப்பு பிரசாரத்தால் வந்த சிக்கல் -
இயக்குநர் மோகன் ஜி வீட்டுக்கு! ரூ 8000 கூப்பனுடன் வந்த 4 பெண்கள்! ரேஷன் கார்டு கேட்டு அடம்! -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
8,000 ரூபாய் கூப்பன்.. என்ன வாங்கலாம்? இப்போது இந்த 'டிஸ்கஷன்'தான் ஓடுகிறது! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! -
அதிமுகவுக்கு விவசாய அமைப்பு, ரஜினி ரசிகர் மன்றம் வரிசையில் மேலும் ஒரு அமைப்பு ஆதரவு! இபிஎஸ் ஹேப்பி! -
சேகர் பாபுவை குறிவைத்த ஐடி.. சென்னையை பரபரபாக்கிய சோதனை! திமுக சீனியர்களுக்கு ஸ்கெட்ச் போடும் டெல்லி? -
அமைச்சரவையில் இட ஒதுக்கீடு வேண்டும்.. தேர்தல் நேரத்தில் விசிக எம்.பி எழுப்பிய ‘மேஜர்’ கோரிக்கை! -
திடீரென மயங்கிய முதியவர்.. யோசிக்காமல் அவிநாசி இளம் திமுக பெண் வேட்பாளர் செய்த செயல்.. நெகிழ்ச்சி -
எடப்பாடியில் குமுறும் "குக்கர்.." கடைசி நேரத்தில் விஐபி தொகுதியில் விரிசல்? அதிர்ச்சியில் இபிஎஸ் -
Election Exclusive: மதுரை மத்தியில் தலைக்கு மேல் கத்தி.. குட்டையை குழப்பும் அழகிரி & கோ! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய திமுக! -
Election Exclusive: வாயில் வாஸ்து சரியில்ல.. ஜெயிச்சாலும் திண்டுக்கல் சீனிவாசனுக்கு சிக்கல்! திமுக போடும் பலே ப்ளான்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவோம்.. பாஜக வாக்குறுதியை சொல்லி வாக்கு சேகரித்த ராஜன் செல்லப்பா!












Click it and Unblock the Notifications