திடீரென சீனில் வந்த தங்க தமிழ்செல்வன்.. சசிகலா, டிடிவிக்கும் ஐஸ்! ஓபிஎஸின் வரலாறை புரட்டிய உதயகுமார்
சென்னை: ஜெயலலிதாவுக்காக தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை தியாகம் செய்த தங்க தமிழ்ச்செல்வனை கட்சியிலிருந்து ஓரம் கட்டி திமுகவில் இணைய காரணமானவர் ஓ.பன்னீர்செல்வம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது, "இதுவரை அதிமுகவில் முதலமைச்சர் பதவிக்கு சட்டபூர்வமாக ஆபத்து வந்தது கிடையாது. அப்படி ஆபத்து வருகிற சூழ்நிலை எதனால் என்பதை பன்னீர்செல்வம் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன்.
அதன் பிறகு ஜெயலலிதாவின் அயராது உழைப்பால், இரவு பகல் பாராத சேவையால் மீண்டும் 2011 ஆண்டில் மீண்டும் ஆட்சி மலர்ந்தது. அப்போதும் ஜெயலலிதா முதலமைச்சர் பதவிக்கு ஆபத்து வந்தது இந்த முதலமைச்சர் பதவிக்கு ஆபத்து வருவதற்கு யார் காரணம் என்பதை உங்கள் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன்.

ஜெயலலிதா மறைவுக்கு பின்
சுயநலத்தின் மறு உருவமாக இருக்கிற பன்னீர்செல்வம் அன்றைக்கு மீண்டும் முதலமைச்சராக வருகிறார். அப்போது அவர் செய்த சித்து விளையாட்டுகளை பன்னீர்செல்வம் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன். ஜெயலலிதாவின்வின் மறைவிற்கு பிறகும், அந்த முதலமைச்சர் பதவி பெற்று விடுவதற்காக அவர் செய்த சித்துவிளையாட்டுகளை அவர் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன்,

தங்க தமிழ்செல்வன்
இப்படி முதலமைச்சர் பதவிக்கு ஆபத்து வருகிற போதெல்லாம் அதை தனக்கு சாதகமாக்கி முதலமைச்சர் பதவியில் அமர்ந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்தேன் என்று மார்தட்டிக் கொள்கிற சுயநலத்தின் மொத்த உருவம் ஓபிஎஸின் சொந்த மாவட்டத்தில் ஜெயலலிதாவுக்காக தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் பதவியை தியாகம் செய்த தங்க தமிழ்ச்செல்வனை கட்சியிலிருந்து ஓரம் கட்டி, இன்றைக்கு அவர் திமுகவில் அடைக்கலமான சூழ்நிலை உருவாகியதை பன்னீர்செல்வம் மனசாட்சிக்கு விட்டு விடுகிறேன்.

டிடிவி தினகரன்
சாதாரண பன்னீர்செல்வத்தை முதலமைச்சர் பதவிக்கு தேவைப்படும் போது எல்லாம் பரிந்துரை செய்த டிடிவி தினகரனை அரசியலில் அப்புறப்படுத்த, பன்னீர்செல்வம் நடத்திய சித்து விளையாட்டுகளில் அவர் மீது சுமத்தப்பட்ட அபாண்ட பழி மற்றும் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்றும் ஒரு குடும்பத்தின் சர்வாதிகாரத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் என்றும் ஜெயலலிதா மறைந்து இரண்டு மாதம் கழித்து அவர் பதவிக்கு ஆபத்துக்கு வந்த பிறகு மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று குழப்பத்தை ஏற்படுத்தி பிரிவிற்கு பிள்ளையார் சுழி போட்டது யார்?

சசிகலாவை அரசியல் அனாதையாக்கியவர்
அன்றைக்கு போட்ட பிள்ளையார் சுழி பிரிவினை என்பது இன்று வரை ஒட்டாத கண்ணாடியாக என்றைக்கும் அந்த பிரிவினைக்கு தொடர்ந்து தலைமை தாங்கி நடத்திவருபவர் ஓபிஎஸ். கட்சி ஒற்றுமையாக சசிகலாவை மீண்டும் சந்திப்பேன் என்று அறிவிக்கும் அவர் நிகழ்த்தி வரும் நாடகத்தை கண்டு சிரிப்பதா அழுதா தெரியவில்லை. சசிகலாவை சிறையில் தள்ளி, அரசியல் அனாதை ஆகியது பன்னீர்செல்வம் தான். சுயநல அரசியலின் மொத்த உருவம், தனக்கு பதவி இல்லை என்று சொன்னால் இந்த கட்சியை அழிக்க தயாராகி விடுவார். அதிமுகவை அழிக்காமல் ஓய மாட்டார். இந்த இயக்கத்திற்கு என்ன தியாகம் செய்தார் என்பதை அவர் மனசாட்சிக்கே விட்டு விடுகிறேன்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications