மண்ணுல போட்ற காசை பொன்னுல போடுங்க.. என்னைக்குமே தங்கம் ஏமாத்தாது! இப்போ எவ்வளவு லாபம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தங்கத்தின் விலை உச்சத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த 2020-21 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட Sovereign Gold Bonds (SGB) ஐந்தாவது தொகுப்பை முன்கூட்டியே திரும்பப் பெறும் தேதியை அறிவித்துள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு 108% லாபம் கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக அளவில் முதலீட்டாளர்கள் தங்கள் கவனத்தை தங்கத்தின் பக்கம் திருப்பி இருக்கின்றனர். டாலருக்கு மாற்றாக நாணயங்களை தேடி வரும் சூழலில் பல்வேறு உலக நாடுகள் தங்கள் கருவூலங்களில் டாலருக்கு பதிலாக தங்கத்தை இருப்பு வைக்க ஆரம்பித்து இருக்கின்றன.

இதனால் வரலாறு காணாத வகையில் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த நிலையில் நேரடியாக தங்கத்தில் முதலீடு செய்வதை விட தங்க பத்திரங்களை முதலீடு செய்வதும் அதிகரித்து வருகிறது. இதற்காக இந்திய ரிசர்வ் வங்கி தங்க பத்திரங்களை வெளியிட்டு வருகிறது.

Sovereign Gold Bonds

தங்க பத்திரம்

எஸ்.ஜி.பி எனப்படும் சவரன் கோல்ட் பாண்ட் திட்டம் தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் 8ஆம்தேதி ஐந்தாவது தொகுப்பு சவரன் கோல்ட் பாண்ட்வெளியிடப்பட்டது. அப்போது ஒரு யூனிட்டின் விலை 5117 ரூபாயாக இருந்தது. தற்போது செப்டம்பர் 6ஆம் தேவையான நேற்று முதல் முன்கூட்டியே திரும்ப பெறலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. தபோது அதன் விலை ஒரு யூனிட்டுக்கு ரூ.10,610 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

108% வருமானம்

இதன் மூலம் முதலீட்டாளர்களுக்கு 107.35% லாபம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, 2020ல் ரூ.5,117 முதலீடு செய்த ஒருவர், இப்போது ரூ.10,610 திரும்பப் பெறுகிறார். மேலும், ஐந்து ஆண்டுகள் வைத்திருந்த காலத்தில் கிடைத்த வட்டி இதில் சேர்க்கப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது. இந்த விலை, India Bullion and Jewellers Association வெளியிட்ட தங்கத்தின் மூன்று நாள் (செப். 3, 4, 5) சராசரி விலையை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி

தங்க பத்திர விதிகளின்படி, 8 ஆண்டுகளுக்குப் பிறகே அதனை முழுமையாக திரும்பப் பெறலாம். ஆனால் 5 ஆண்டுகள் முடிந்த பின், வட்டி செலுத்தும் தேதிகளில் முன்கூட்டியே திரும்பப் பெற அனுமதிக்கப்படுகிறது. இந்த தங்கப் பத்திரங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் வட்டி வருமான வரி சட்டப்படி வரிக்குட்பட்டது. ஆனால் திரும்ப விற்கும் போது போது கிடைக்கும் மூலதன லாபத்தில் தனிநபர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்படுகிறது.

தங்க முதலீடு

நீண்டகால முதலீட்டாளர்களுக்கு Indexation Benefits வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. இந்த பத்திரங்களுக்கு வருடத்திற்கு 2.5% நிலையான வட்டி வழங்கப்படுகிறது. இந்த வட்டி ஆறு மாதங்களுக்கு ஒருமுறை முதலீட்டாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இந்த திட்டத்தை மத்திய அரசு 2015 நவம்பரில் அறிமுகப்படுத்தியது. மக்கள் தங்கத்தை உடைமையாக வாங்காமல், பத்திரமாக முதலீடு செய்ய ஊக்குவிப்பதே நோக்கம்.

முன்கூட்டிய திரும்பப்பெறுதல்

இதன் மூலம் நாட்டின் வெளிநாட்டு தங்க இறக்குமதி குறையும்; வீட்டு சேமிப்புகள் நிதி சொத்துகளாக மாறும். மேலும் தங்கப்பத்திரத்தின் மூலம் வருடாந்திர வட்டி வருமானம், தங்கத்தின் விலை உயர்வால் மூலதன லாபம் என முதலீட்டாளர்களுக்கு இரண்டு வகை லாபம் கிடைக்கும். அதே நேரத்தில், 2023 அக்டோபரில் அரசு புதிய தங்கப் பத்திரங்களை வெளியிடுவதை நிறுத்தி விட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த திட்டம் தனது இலக்குகளை அடைந்துவிட்டதாலும், பத்திரங்களை நிர்வகிப்பதற்கான செலவுகள் அதிகரித்ததும் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

டிஜிட்டல் தங்கம்

அதே நேரத்தில் Gold ETF, டிஜிட்டல் தங்கம் போன்ற மாற்று முதலீட்டு வாய்ப்புகள் தற்போது அதிகரித்துள்ளது. ஆனால், ஏற்கனவே வெளியிடப்பட்ட பத்திரங்கள் 8 ஆண்டுகள் செல்லுபடியாகும். முதலீட்டாளர்கள் அவற்றை காலாவதி தேதி வரை வைத்திருக்கலாம் அல்லது 5 ஆண்டுகளுக்குப் பிறகு முன்கூட்டியே திரும்பப் பெறலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+